Monday, December 5, 2011

சிறார்களுக்கு (5 )

1.   கடவுளும் சைக்கிளும்

ஒரு நாள் காலை, தனபால், வீட்டிற்கு காய்கறிகள் வாங்க, மார்க்கட்டு சைக்கிளில் சென்றான். சைக்கிளை, மார்க்கட் ஓரமாக நிறுத்தி, பூட்டி விட்டு, காய்கனிகள் வாங்கச் சென்றான். பின், தேவையானதை வாங்கிக் கொண்டு, தான் சைக்கிளில் வந்தோம் என்பதை மறந்து, வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டான். பின், சைக்கிள் நினைவு வந்து, பதறியடித்துக் கொண்டு மார்க்கட்டுக்கு ஓடினான். போகும் வழியில், சைக்கிள் கிடைத்து விட்டால், பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொண்டான்.

மார்க்கட்டில், நிறுத்தப்பட்ட இடத்திலேயே சைக்கிள் இருக்க, சந்தோஷப்பட்டு, வண்டியைத்திறந்து, வீட்டிற்கு திரும்ப ஆரம்பித்தான். வழியில் தென்பட்ட பிள்ளையார் கோவிலைப் பார்த்ததும்,பிரார்த்தனை நினைவுக்கு வர, கோவிலுக்குள் சென்று ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு, திரும்பி வந்து பார்த்தால், கோவில் வாசலில் நிறுத்தி யிருந்த சைக்கிளைக் காண வில்லை. அப்போதுதான், சைக்கிளைப் பூட்டாமலேயே கோவிலுக்குள் சென்றது நினைவுக்கு வந்தது தனபாலுக்கு. 

=======================================================================
நீதி: உன் வேலைகளையும், கடைமைகள்யும் ஒழுங்காகச் செய்தால்தான் கடவுள் கூட உதவிக்கு வருவார்
========================================================================

2 comments:

  1. நல்லாத் தான் கதை சொல்றீநங்க..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete