Wednesday, December 7, 2011

ஃபேஸ் புக் அன்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்:


1.       ஒன்றாம் இடத்திலிருந்த “ஆர்குட்டின் பார்வை விலகிவிட்டதால், ஃபேஸ்புக் அன்பர்களுக்கு இனி தோஷமில்லை. பகைவீட்டிலிருக்கும் ‘ட்வீட்டரின் பார்வை வேறு விதமாக இருப்பதால், இப்போதைக்கு அச்சமில்லை.

   2.       இருப்பினும் ‘வடக்கே சூலம் இருப்பதால் கபில் மூலம் உங்களது “கருத்து சுதந்திரத்திற்கு மிரட்டல் வரலாம். அருள்மிகு “ஒபாமானந்தாவைப் பிரார்த்தித்தால் துயரம் நீங்கும்.

    3.       “ஞானிபோன்றோர் ஃபேஸ்புக்கில் உலவும் மாறு வேஷதாரிகளின் முகத் திரையினை அவ்வப்போது கிழித்தாலும், நிஜமானவர் களுக்கு ஆபத்தில்லை.

    4.       எனினும், சில பரிகாரங்களை ஃபேஸ்புக் அன்பர்கள் செய்ய வேண்டியுள்ளது. “என்ன, ஏது என்று பார்க்காமல் எல்லா ஃபோட்டோவிற்கும், ஒரு ஸ்டேண்டேர்ட் எக்ஸ்பிரஷனாக ‘Good’,  ‘Cute’,  “So sweet”, “Choooooooooooo sweet”  ,'fine',  ‘owsome’  என்றெல்லாம் சொல்லிவைத்தால் சனிபகவான் “காக்காய் வாகனமேறிவந்து உங்கள் காதைத் திருகலாம்.

    5.       முக்கியமாக, கண்ணில் பார்த்த விஷயங்களையெல்லாம், இதை மற்றவர்கள் ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்று யோசிக்காமல் “link  கொடுத்தால், அடுத்த முறை ட்ரெயினில்  ரிசர்வேஷன் கிடைக்காது.

6.       1008 தடவை 'லைக்' செய்தால், உங்களுக்கு “சௌபாக்யாவெட் கிரைன்டர் ஃபோட்டோ பரிசாகக் கிடைக்கும். 10008 தடவை செய்தால், மாருதி கார் போட்டோ. 

7.       இனி நிமிஷத்துக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கை நோண்டாமல், தினத்திற்கு ஒரு தடவை தரிசனம் செய்தால் போதும் என “ஏழரையாவது வீட்டில் இருக்கும் உங்கள் கணவனோ, மனைவியோ கூறுவதால், அதன்படி நடந்தால், கண்வலி இடுப்பு வலி தீரும்.

8.       10000 பேரை ஃப்ரண்ட்ஸாக சேர்த்துக் கொண்டால், சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

9.       இனி பொதுப் பலன்: வண்டியில், பெட்ரோல் தீர்ந்து போனால், மீண்டும் பெட்ரோல் போடுவீர்கள். செருப்பு கிழிந்து போனால், புது செருப்பு யோகம் கிடைக்கும். மாணவர்கள் படித்தால் மார்க் வாங்குவார்கள். வாயை மூடிக்கொண்டிருந்தால், பாரியாளின் அர்ச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

10.   மேற்கண்ட பலன்கள் யாவும், அனைத்து ராசிக்காரர்களுக்கும்  பொருந்தும்.

1 comment:

  1. One has to read between lines? Brindha, Agra

    ReplyDelete