Tuesday, December 13, 2011

சிறார்களுக்கு (11)

11. கடவுளும் படகும்.


ஒரு கிராமத்தில், குமரன் என்று ஒரு சிறந்த கடவுள் பக்தன் இருந்தான். கடவுளைத்தவிர வேறு எதையும் நம்பலான்.  ஒரு முறை அந்த கிராமத்தின் ஏரி உடைந்து, ஊரினுள் வெள்ளம் புகுந்தது. குமரனின் வீடும் தப்பிக்கவில்லை. அவனது வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. வீட்டின் கூறை மீது ஏறி உட்கார்ந்து கொண்டான் குமரன்.

அப்போது, ஒரு படகில் அவனருகே வந்த ஒருவன், வா குமரா, வெள்ளம் அதிகரித்துக் கொண்டே போகிறது! இந்தப் படகில் ஏறிக் கொள்! நாம் வேறு இடத்திற்குப் போய் விடலாம் என்றான். ‘இல்லை, நான் வர மாட்டேன், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றான் குமரன். படகுக்காரன் சென்றுவிட்டான். இதே போல மற்றும் ஒரு படகு வந்த்து. அதே போல படகில் ஏற மறுத்து, என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்றான். இதே போல மூன்று முறை நடந்தது! கடைசிவரை படகில் ஏறவே இல்லை குமரன். இறுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, குமரன் மூழ்கி இறந்தான்.

விண்ணுலகம் செல்லும்போது, கடவுள் மீது கடும் கோபம் கொண்ட குமரன், கடவுளை நோக்கி கத்தினான். “உன்னையே நம்பிக் கொண்டிருந்த என்னை ஏமாற்றிவிட்டாயே, இது நியாயமா? என முறையிட்டான்.

கடவுள் நிதானமாக பதிலளித்தார்: “உனக்கு மூன்று முறை உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தேன்.  நீ பயன் படுத்திக் கொள்ளவே இல்லை! நான் கொடுக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளாதவர்களை,நான் மன்னிப்பதில்லை என்றார்!


=====================================================================
நீதி:  சரியான சந்தர்ப்பங்களையும், வாய்ப்புக்களையும் பயன்படுத்துக் 
      கொள். தவறவிட்டுவிட்டு, பின் விதியையும் கடவுளையும் 
      குறைசொல்வது பயன் அற்றது!
=====================================================================

3 comments:

  1. From Dallas, Texas, USA

    Excellent!!!! moral stories for kids. I'll definately forward this mail to all Tamil friends.

    ReplyDelete
  2. From Dallas, Texas, USA

    Excellent!!!! moral stories for kids. I'll definately forward this mail to all Tamil friends.

    ReplyDelete