1. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்பார்த்தீர்களா?
....இது போன்ற ஏதாவது ஒரு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்தேன். மோடி தொடுத்திருக்கும் துல்லிய தாக்குதல் இது. இது போன்ற துணிச்சலான முடிவை வேறு எந்தப் பிரதமரும் எடுத்திருக்க முடியாது....
2. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?
அறிவிப்பு வந்த கணம் முதற்கொண்டு பணத்தை மாற்றவும், வங்கியிலிருந்து எடுக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன. ஆனாலும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுளது உண்மையே. 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இத்தகைய சிரமங்கள் தவிர்க்க இயலாது. ஆனால் இது தாற்காலிகமானதே!
3. போதிய முன்னேற்பாடுகள் செய்திருந்தால், சிரமங்களை தவிர்த்திருக்கலாம்தானே?
முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கவே முடியாது. முன் கூட்டியே 500 நோட்டுக்களை அச்சடித்திருந்தாலோ, ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்திருந்தாலோ, விஷயம் வெளியே கசிந்திருக்கும். எந்த ஊழல் வாதிகளை நோக்கி குறிவைக்கப்பட்டதோ அவர்களுக்கே செய்தி போயிருக்கும். அதன்பிறகு திட்டத்தைச் செயல்படுத்தினால் பலன் கிடைத்திருக்காது.
4. 16 நாட்களாகியும், நிலைமி சீராகவில்லை..இது மோடி அரசின் நிர்வாகத்தோல்வி என எதிர்க்கட்ச்கள் சொல்கின்றனவே?
நிலைமை சீராகிக் கொண்டே வருகிறது. நக்ஸைலட்கள் நிறைந்த பகுதிகள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கெல்லாம், பணம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுளது. எனவே நிர்வாகத்தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் சிரமங்களைக் குறைக்க, அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. பணத்தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும். அதுவரை ஏதாவது ஒருவழியில் சிரமம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
5. இத்திட்டம்பற்றி, தொழிலதிபர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என கேஜ்ரிவால், மம்தா குற்றம் சாட்டுகிறார்களே?
இது வெறும் அரசியல் குற்றச் சாட்டு. எல்லாவற்றையும் சந்தேகிக்கும் ஊடகங்கள்கூட, திட்டத்தின் ரகசியம் பற்றி பாராட்டியுள்ளனவே? ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்னாளில், ஒருவருக்கு தெரிந்தால் கூட, நாட்டிற்கே தெரிந்துவிடும்.
6. இதன் மூலம் கருப்புப்பணம் ஒழியாது என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்களே?
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டிக்களில், 14 லட்சம் கோடி 500,1000 நோட்டுக்களே. இதில் 4 லட்சம் கோடி கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாலு லட்சம் கோடி அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். பினாமி பெயரில் இருந்தால்கூட அரசால் கண்டுபிடிக்க இயலும். வங்கியில் வந்துவிட்டால், அது வெள்ளைதானே? மக்கள் தங்கள் பணத்தை டிபாஸிட் செய்வதால், பண இருப்பு அதிகரிக்கும். இதனால் சிறு, நடுத்தர தொழில்கலீல் வங்கிகள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். கடன் தாராளமாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் கூடும். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது தவறானது. ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் கருப்புப் பணம் முடங்குவது குறையும். லஞ்சம்-ஊழல் குறையும். ஆனால் அடுத்த அடுத்த ஆறு மாதத்தில் பொருளாதாரத்தில் சிறு வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.
7. அரசின் முடிவை திரும்பப் பெறவேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடுகின்றனரே? பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதே?
கருப்புப் பணத்தை ஒழிக்க மோடி எடுத்துள்ள நடவடிக்கையால், அரசியல் வாதிகளும், லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகளும் நிலை குலைந்துள்ளனர். இதனால், இத்திட்டத்தை வாபஸ் வாபஸ் பெறவேண்டும் என அரசியல் வாதிகள் போராடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இத்திட்டம் நாட்டிற்கு நல்லது. சிரமங்கள் யாவும் தாற்காலிகமானவையே.
8. இந்த நடவடிக்கையை, தேசபக்தியோடும், தேசப் பாதுகாப்போடும் ஏன் பாஜக தொடர்புபடுத்துகிறது?
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அச்சடித்த கள்ளப்பணம், நம் நாட்டில் பயங்கரவாத்த்தை வளர்க்கிறது என்பதற்கு எல்லா ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை அதன் தாக்கம் இருக்கிறது. தீவீரவாதிகள் மூலமாகக் கொண்டுவரப்பட்ட கள்ளப்பணம் ஐந்து முதல் ஆறு ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்கு, பயங்கரவாதிகள் 2.5 கோடிதான் செலவு செய்துள்ளனர். ஆனால் 164 பேர் செத்தனர். 300 பேர் காயமுற்றனர். இம்மாதிரியான பயங்கரவாதிகளின் செயல்களினால் நாட்டிற்கு 6.60 லட்சம் கோடி இழப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு புழக்கத்தில் விட்டுள்ள நமது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத்தாள்களாகிவிட்டன. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவே, அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
9. அரசின் நடவைக்கை தவறான முடிவு. நிலைமை சீராக ஏழு மாதங்காள் ஆகும் என சிதம்பரம் சொல்கிறாரே?
படிப்படியாக நிலைமை சீராகும் என்பதே உண்மை. அவர் கூறும் ஏழு மாதங்களுக்குப் பின்னர், பொருளாதாரம் வேகமாக வளரும் என்பதையும் சேர்த்து அவர் கூற வேண்டும்.
10. சாதாரண மக்களின் பணத்தை, பெருமுதலாளிகளுக்கு கொடுக்கத்தான் இத்திட்டம் என்று சொல்கிறார்களே?
இது போன்ற அப்பட்டமான பொய்களை, அரசியல் வாதிகள் மட்டுமே கூறமுடியும்.
11. இந்த நடவடிக்கை மூலம், ராகுல் காந்தி பிரதமராவதற்கு மோடி வழிவகை செய்துவிட்டார் என பேசத் தொடங்கியுள்ளனரே?
இது அசட்டுத்தனமான பேச்சு. மக்கள், அரசின் நடவைக்கையை ஆதரிக்கிறார்கள். மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில், எதிர்த்திருந்தால், இம்மாதிரி மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருக்க மாட்டார்கள்.
12. ரொக்கம் இல்லாத இந்தியாதான் பிரதமர் மோடியின் நோக்கமா?
ரொக்காம் குறைவாகவும், வங்கிப் பரிவர்த்த்னை அதிகமாகவும் இருக்கும் நாடு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும். ஒரே காலகட்டத்தில், இந்த முயற்சியை செய்வது ரொக்கம் இல்ல்லாத நாட்டை உருவாக்க அல்ல. கருப்புப் பணத்தை – கள்ளப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை.
------------------------------------------------------------------------------------
மேற்கண்ட பேட்டி, புகழ்பெற்ற ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்களால் அளிக்கப்பட்டு,
தி இந்து (தமிழ்) இதழில் 25/11/16 அன்று, பக்கம் 16ல் வெளிவந்துள்ளது.(Brief)
இத்திட்டத்தை, ஊழல் பேர்வழிகளும், கருப்புப் பண முதலைகளும், பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தை நேரடியாகவோ-மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களது தீய நோக்கம் பாதிக்கப் படுகிறது.
ஆனால் இந்தியாவின் நலம் விரும்பிகளும், நல்ல மனிதர்களும், கருப்புப் பண-கள்ள நோட்டுகளை எதிர்ப்பவர்களும், Left Parties ம், மேற் சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பது துரதிர்ஷடம்.
தயவு செய்து, அரசின் இத்திட்டதை ‘உள் நோக்கத்தோடு’ எதிர்ப்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது நிலவும் சிரமம் தாற்காலிகமானதுதான்.
சாதாரண, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள் அவர்கள். கருப்புப்பண, ஊழல், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர், சாதாரண சிரமங்களை தங்களுக்கு அரண் போலப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். நீலிக்கண்ணீர்
வடிக்கும் இந்த உத்தம(!) மனிதர்கள் எல்லாம், மக்கள் வேறு பல துயரத்தில் இருந்த போது எங்கே சென்றிருந்தார்கள்? மும்பையிலும், மற்ற இடங்களிலும், மக்கள் கொத்து கொத்தாக சாகும் போது மௌனம் காத்தவர்கள் அல்லது ஒப்புக்கு கண்டித்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்வோம். பொறுமை காப்போம்.
Nice
ReplyDelete