Monday, March 21, 2011

வைகோ

சென்னை: மதிமுகவை கூட்டணியை விட்டு விரட்டியதில் கர்நாடகம்  மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.


முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.

21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோ விடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ''அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க'' என்று பழைய ராகம் பாடினர்.

அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ''உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது'' என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.

காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.

அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ''நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்'' என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.

சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள 'உதவி' தான் என்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.

வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான 'சக்தியை' இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்

-செய்தி மூலமும்  நன்றியும் தட்ஸ்தமிழ்.ஒண் இந்தியா.காம்

Saturday, March 19, 2011

இன்னொரு போலி!

ஒரு சீக்கிரமாக ஊர் போய்ச்சேரலாம் என விமானத்தில் பறக்கிறோம். ஆணால் இந்த போலி டாக்டர், போலி சாமியார் பட்டியலில்
புதிதாகச் சேர்ந்துள்ள "போலி விமான ஓட்டிகள்", நம்மை நிஜமாகவே "சீக்கிரம்' அனுப்பிவைத்த்து விடுவார்கள் போலிருக்கிரார்கள்.

"இண்டிகோ ஏர்லைன்ஸ்" என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில், உள்நாட்டு விமான சேவையை சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதில் பெண் விமானியாகப் பணிபுரிபவர் பர்மிந்தர் கெளர் குலாட்டி. சென்ற ஆண்டு இவர் கோவாவில் விமானத்தைத் தரையிறக்கும் போது, ரியர் வீலில் (Rear Wheels) லாண்டிங் செய்யாமல் நோஸ் வீலில் (Nose Wheel, முன்புறச் சக்கரங்கள்) லாண்ட் செய்து, பயணிகளை திகிலில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 160 பயணிகளின் உயிர்களுடன் விளையாடியுள்ளார். இதன்பிறகு இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவு மிகவும் அதிர்ச்சிகரமானது. DGCA நடத்தும் கமர்ஷியல் பைலட் லைஸன்ஸ் பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து, இவர் லைஸன்ஸ் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் செளஹான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்பவர்.

"ஆஹா...பட்சி அகப்பட்டுக் கொண்டதா" என சாய்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. 
மேலும் நோண்டல் விசாரணையில், இதுபோன்ற போலி பைலட்டுகள் பலர் இருப்பது அம்பலமாகி வருகிறது. வேடிக்கைஎன்னவென்றால்  இதில் பலர் ஒரே பாட்சில் லைஸன்ஸ் பெற்றவர்கள். ஆக மதிப்பெண் சான்றிதழ் மோசடி ஒரே இடத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 

வழக்கமாக, RTO ஆபீஸில்,'சன்மானம்' அளித்து எட்டு போடாமல்  
லைசென்ஸ் பெறுவது வழக்கம்தான். ஆனால் பைலட் லைஸன்ஸ் 
பெறுவதில்கூட இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததிருபபது விமானப் 
பயணிகளிடையே பெரும் பீதியையும் , திகிலையும் ஏற்படுத்தியுள்ளது. 
வெறும் பைலட்டுகள் மட்டுமே இந்த முறைகேட்டிற்க்குக் காரணமாக 
இருக்க முடியாது. DGCA வில் உள்ளவர்கள் உதவியில்லாமல் இது 
சாத்தியமே அல்ல! 

இதுவும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சமாதி கட்டப்படும் என எதிர்பார்ப்போம். நாமும் அடுத்த விமான விபத்து வரை இந்த மோசடி யினை மறந்து, டி.வி பார்த்துக் கொண்டிருப்போம். கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு பயணிகள் உயிரின் மதிப்பை விட, கூட்டணி இன்னும் காஸ்ட்லியானது தானே?

எல்லோருக்கும் பெப்பே ....


கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல்,  அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட துணியவில்லை. இது நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் நன்மை அல்ல, கெடுதல் தான் என்பதை உணர வேண்டும்.

காதுலே பூ


இந் நிலையில் ஜெயலலிதா செய்த தவறுக்கு சசிகலா தரப்பு மீது பழி போடப்பட்டு செய்திகள் வந்துள்ளன.

கூட்டணியில் ஆரம்பித்து, தேர்தல் தொடர்பாக ஜெயலலிதாவை இயக்கியது யாரென நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் என்பதை -"சோ"- வென மழை பெய்த காலத்திளில்ருந்தே அறிவர்.  அவரது அட்வைஸ்படியே அனைத்து முடிவுகளையும் எடுத்த ஜெயலலிதா இந்த முறை சசிகலா தரப்பு சொன்ன எதையும் காதிலேயே வாங்கவில்லை என்று தான் தகவல்கள் வந்தன.

ஆனால், ஜெயலலிதாவின் இப்போதைய இந்த எடுத்தேன் கவிழ்த்தேன் செயலுக்கு சசிகலாவின் உறவினர் ஒருவர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் உறவினர் இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு 'பட்டியலை வெளியிடுங்கள்' என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு வந்ததாம். உடனே, ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், சசிகலா உறவினர்கள் சிபாரிசுடன் உருவாக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுவிட்டார்களாம். இதனால் தான் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்களாம். அதாவது ஜெயலலிதாவுக்கே தெரியாத ஒரு பட்டியலை அதிமுக வெளியிட்டுவிட்டது என்பது தான் அதிமுக தரப்பு கசிய விட்டுள்ள செய்திகளின் சாரம்சம்.

இந்தத் தகவலை கூட்டணிக் கட்சிகள் நம்பி, ''அடடா.. அப்படியாம்மா நடந்துச்சு.. நாங்க உங்க மேல போயி சந்தேகப்பட்டுட்டோமே'' என்று உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர்விட்டு, அப்படியே சமாதானமாகிவிடும் என்று அதிமுக நம்பியதாகத் தெரிகிறது.

(அப்படியே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு காதுக்கு இரண்டு முழம் பூவை 'மாபெரும் அனுப்பி வைத்திருக்கலாம்.)

இந்தச் செய்தியை கூட்டணித் தலைவர்கள் நம்பாத நிலையில் தான், அதிமுக தானாகவே இந்தக் கட்சியினருக்கு மீண்டும் நட்புக் கரம் நீ்ட்டியது. நீங்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத் தர ரெடி என்று சிக்னல் அனுப்பியதையடுத்து இவர்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே ரகசிய மற்றும் வெளிப்படையான பேச்சுக்கள் ஆரம்பமாயின.

நேற்று முன் தினம் பாய்ந்த ஜெயலலிதா திடீரென பணிந்து போக முக்கியக் காரணம் விஜய்காந்த்  தான் என்கிறார்கள்.

நாம் விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் இடதுசாரிகளும், புதிய தமிழகமும், பார்வர்ட் பிளாக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்.. ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் வந்து ''அம்மா அந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்.. இந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்'' என்று கெஞ்சுவார்கள். அதில் சிலவற்றை விட்டுத் தந்தால் நாம் தந்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று தான் ஜெயலலிதா நினைத்திருந்தார்.

விஜய்காந்த் என்னொரு சக்தி அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் ஜெயலலிதா நினைத்து தான் நடந்திருக்கும். ஆனால், ஜெயலலிதாவால் முதுகில் குத்தப்பட்டவுடன் இடதுசாரிகளும், அவர்களுடன் பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம்  , மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவையும் விஜய்காந்தின் அலுவலகத்தில் ஓடிப் போய் தஞ்சம் புகுந்து கொண்டு, 'மூன்றாவது அணி அமைப்போம்' என்று மிரட்டுவார்கள் என்று ஜெயலலிதா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

எதிர்காலத்தில் விஜய்காந்த் மூலம் ஜெயலலிதா சந்திக்கப் போகும் அதிரடியான சவால்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆரம்பம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இனி எந்தக் கட்சியையும் ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்த முடியாது என்பதற்கு உதாரணம் தான் வைகோவுக்கும் சேர்த்து அதிமுக சமாதானக் கொடியை ஆட்டியது என்கிறார்கள். சமாதானப் போக வேண்டுமானால் தான் கோரும் தொகுதிகளை தனக்குத் தருவதோடு, மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை போட்டுள்ளார் விஜய்காந்த் என்கிறார்கள்.

இதனால் மிரட்டல் விடுத்த கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதோடு, மதிமுகவுக்கும் கூட்டணியில் இடம் தருவதாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

Wednesday, March 16, 2011

இப்படித்தான் இருக்கவேண்டுமா?

உலக பெண்க்ள் தினம். இது ஒரு வருடாந்திர சடங்கு போல இப்போதெல் லாம் கொண்டாடப்பட்டு வருகிறதா என சந்தேகம் வருகிறது. ஏன் இந்த 
தினம் என்பதை பெண்களும் கூட கேட்பதில்லை.   ஒருசில பத்திரிக்கை கள் தவிர ஒரு மேம்போக்கான 'விஷயங்களைத்' தரு கின்றனவே தவிர,  கணமான கட்டுரைகள் காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது.  நாம் மேலும்-மேலும் ஜாதி,மத,இன,பிராந்திய, கோஷ்டி கோட்பாடுகளில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக,  சமூக பிரக்ஞை இழந்து வருகிறோமா என கவலையாயிருக்கிறது.  
இலவசங்களும்-சாராயமும், விடாது துரத்தும் டி.வி க்களும் மக்களை மழுங்கடிப்பதாக உள்ளனவே தவிர,  சிந்திக்க வைப்பதாக இல்லை.  உலக வணிகர்கள் 'காதலர் தினம்' போல, மகளிர் தினத்தையும் வர்த்தகத்திற்கு பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.  ('அக்வா ஃப்ரஷ்'  வாங்கி னால் 25% ஆஃப்பர்.)

மீடியா, விளம்பரங்களில், பொது வாகவே பெண்களை கிளுகிளுப்புக் 
காகவும்-செக்ஸ் அப்பீலுக்காகவுமே 
பயன்படுத்திக் கொண்டிருகின்றன். 
ஏதோ ஒரு "ஸ்ப்ரே அடித்துக் கொண்டால்"  எல்லா பெண்களும் ஓடி வருவார்களாம்.  பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. 'ஷேவிங் பிளேடுக்கும்-கிரீமுக்கும்' பெண்கள் எதற்கு?

இவை பெண்களைக் கேவலப்படுத்துவதோடு ஆண்களின் ரசனையையும் 
தரக்குறைவாக்கி விடுகிறது. இந்தமாதிரியான பாணியினை பத்திரிக் 
கைகள் தொடர்ந்து செய்து, இவை ரசணைகுறைவானவை-இழிவானவை 
என்பதையே உணர முடியாத அளவுக்கு மரத்துப் போகச் செய்து விட்டன.

பெண்களுக்கென நடத்தப்படும் பத்திரிக்கைகள் என்ன செய்கின்றன்?  

பிரமாதமான வித்தியாசம் ஏதும் இல்லை. இவைகளை இரண்டு வகை களாக பிரிக்கலாம். ஒன்று உள்ளூர் மொழிகளில் வெளிவரும் பத்திரிக் 
கைகள்.  இவைகளில் நன்றாக எப்படிச் சமைக்கலாம், விதவிதமான கோலங்களை எப்படிப் போடலாம், கைத்திறனை எப்படி வளர்த்துக் கொள்ளலாம், வீட்டை எப்படி அலங்கரிக்கலாம், உடலை எப்படிச் சிக்கென வைத்துக்கொள்ளலாம், எந்த உடை அணியலாம், அழகாக எப்படி இருக்கலாம்…30 வகையான ஊறுகாயகள்.. 30 வகையான குழம்புகள்.. இன்ன பிற....

இன்னொன்று உயர்கல்வி கற்று, நல்ல சம்பளத்திலிருக்கும் பெண்களுக்கான 'ஆங்கில பத்திரிக்கைகள்'. இவற்றில் ஆண்களைக் கவரும் விதங்களில் பெண்களின் படங்களைப் போட்டு நிரப்பி விடு கின்றன. இதே குழம்பு செய்யும் முறையினை வண்ண வண்ண படங்களில் ஆங்கிலத்தில்...  இது தவிர சில தகா உறவுகள்-பாலுறவு பற்றி விளக்கங்கள். இந்த ஒரே பாணியை அசராமல் பத்திரிக்கைகள் செய்து வருகின்றன. 

எப்படியாயினும், சுற்றி வளைத்து ஆண்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய விஷயங்களாகவே பாடம் நடத்துகின்றனர்.
 விதவிதமாகச் சமைத்துப் போட வேண்டும், கணவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும், வீட்டைக் கண்ணாடி போல வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களை மீண்டும் மீண்டும் பெண்களின் மூளையில் ஏற்றுகின்றன. அதாவது இவை எல்லாம் பெண்களின் வேலைகள்… இவற்றை இன்னும் அழகாக, சுவையாக எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

இந்த விஷயங்களுக்கு ஏற்றாற்போல மேக்கப் ஐடங்கள்,  எடை குறைப்பு, சமையல் பொருள்கள் என்று வியாபாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.  மிகவும் கெட்டிக் காரத்தனமாக, நுட்பத்துடன் பெண்களேஅறியாவண்ணம்  நுகர்வு கலாசாரத்தை மண்டையில் ஏற்றி விடுகிண்றனர். 

எப்போதாவது, அபூர்வமாக உருப்படியான விஷயங்கள் வந்தால், இப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள பெண்கள், ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். அதுவே சமையல் இணைப்பு என்றால் உடனே வாங்கி விடுகிறார்கள். வியாபரிகளின் நோக்கம் நிறைவேறி விட்டதல்லவா? 

இது தவிர 'பக்தி கொண்ட' மனைவிகளுக்காக, எந்த விரதம் இருந்தால் கணவருக்கு நல்லது, எந்தக் கோயிலுக்குப் போனால் என்ன என்ன பிரச்னைகள் தீரும், அதற்கு பெண்கள் செய்ய வேண்டியவை என்ன என்று சொல்லி, சுத்தமாக மழுங்கடித்து விடுகின்றனர்.

ஆண்களை இந்த பெண்கள் பத்திரிககைகளை வாங்க வைப்பதற்காக,  விநோதமாக ‘உங்கள் கணவருக்கு மசாஜ் செய்வது எப்படி?’, ‘கணவரிடம் 
பாராட்டு வாங்குவது எப்படி?’ என்றெல்லாம் கவர்ஸ்டோரிகள் வெளியி டுகின்றனர்.  இப்பத்திரிகைகளில் வரும் கதைகள், அனுபவங்கள் எல்லாம் பெண்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கின்றன. எவ்வளவு பிரச்னை வந்தாலும் பெண் என்ற இலக்கணத்தை மீறாமல்,  வாழ்க்கையில் வெற்றி பெறுபவளே சிறந்த பெண் என்கிறார்கள். பெண்களின் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள், சாதாரண பெண்கள் சிறு தொழிலதிபர்களாக மாறிய 
விஷயங்கள் போன்றவை குறைவாக வரும்.

தொலைக்காட்சி சேனல்களில்?

இதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா?  அதுவும் நமது பெண்கள் மதிமயங்கிக் கிடக்கும் 'சீரியல்களில்' நமது கற்பனைக்கும் 
எட்டாத வக்கிரங்கள்.   ‘அவளைக் கொல்ல வேண்டும்.’ ‘இவளை அவள் கணவனிடமிருந்து பிரிக்க வேண்டும்.’ ‘அவள் குழந்தையைக் கடத்தி, அவளைத் துடிதுடிக்கச் செய்ய வேண்டும்.’ ‘இவளைப் பைத்தியக்காரியாக மாற்றி ஓட வைக்க வேண்டும்' - இப்படிப்பட்ட 'தீம்'  களோடு பவனி வருகின்றன. 

எங்கோ ஒருசில அமைப்புகள்-இவர்களுக்காக போராடி-'ஞானஸ்நானம்' அளிக்க முயன்று கொண்டிருக்க, மிகப் பெரும்பான்மையான பெண்கள், பட்டுப்புடவைகளிலும், நகைக் கடைகளிலும், டி.வி சீரியல்களிலும் உழன்று கொண்டிருக்க..எப்போதும் நாம் இப்படித்தான் இருந்து கொண்டி ருக்கப் போகிறோமா...புரியவில்லை.


Monday, March 14, 2011

Defeat against South Africa!


நமக்கு யாரையாவது குறை சொல்வது-குற்றம் கண்டுபிடிப்பது விருப்பமான விஷயம். தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்றுப் போனோம்.  நீட்டி முழக்கிக் கொண்டு ஆளாளுக்கு டீமில் அகப்பட்ட ஆட்களை பிடித்துக் கொண்டு வசைமாரி பொழிய ஆரம்பித்து விட்டனர். ஜெயித்தால் 'பக்தி' மயமாவதும் தோற்றால் 'சபிப்பதும்'  நம் 
நாட்டின் குணாதிசயமாக மாறிவிட்டது.  இன்னமும் போட்டிகள் துவக்க நிலையில்தான் உள்ளன. 'காலிறுதிக்கு' தகுதியும் பெற்றுவிட்டோம். குரூப் 'பி'-ல் இந்த நிமிடம் வரை முதலிடத்தில்தான் உள்ளோம்.


இந்த போட்டியில் இது வரை 1405 ரன்களை பெற்று, 44 விக்கட்களையும் வீழ்த்தியுள்ளோம். சச்சின், யுவராஜ், கம்பீர், கோஹ்லி,சேவாக்
அடிதத் சதங்களை கணத்தில் மறந்து, தூற்ற தயாராகிவிட்டோம்.  39.4 ஓவர்கள் வரை தென் ஆப்பரிக்க பவுலர்கள் திணறியதையும்
மறந்துவிட்டோம். சொல்ல வந்த் விஷயம் என்ன வென்றால், போட்டி இன்னும் முடியவில்லை.  இப்போதுதான் ஆரம்பித்துள்ளது.  Steyn, Morkel, Kallis போன்ற பௌலர்களை நாம் "உண்டு-இல்லை" என செய்ய வில்லையா?. எனவே கோளாறு எங்கே நடந்தது என்று பார்ப்பதை சரியாக 
பார்க்கத்தவறினோமானால்,  அதை சரி செய்யவும் தவறுவோம் தானே?


கடைசியில் ஓவர்களில் தோனி சொன்னது போல 'பந்துக்காகவும்', 'டீமுக்காகவும்' இல்லாமல், 'கேலரிக்காக' அடியதில் தான் தவறு.
தேவையான பாடம் கற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.  குறிப்புகள் கவணத்தில் கொள்ளப்பட்டிருக்கும். எனவே 'மாரடித்துக்' கொள்வதை
விட்டுவிட்டு, நம்மை சரி செய்துகொள்ள நிறைய நேரம் /கேம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வோம். நம்மிடம் சற்றேரக்குறைய எல்லாம் சரியாகத்தான் உள்ளது. துணைகண்டத்தின், ஸ்லோவான பிட்சுகளில்-Shaun Tait and Brett Lee போன்றாவர்களே கொழுக்கட்டை தின்னும் போது நமது 'மித வேக' பவுலர்கள் ஏதும் மந்திரவித்தை காட்ட இயலாது.


 வாய்த்திட்ட 'பவுலிங்கின்' குறைகளை 'பேட்டிங்க்' மூலம் சரிகட்ட வேண்டும்.


ஏற்கனவே, 100 கோடிப்பேர்கள் 11 பேர் முதுகில் உட்கார்ந்துகொண்டு 'டென்ஷன்' ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.   இன்னமும் பதட்டத்தை ஏற்றாமல், டீம் மீது நம்பிக்கை வைப்போம்.  (யாரேனும் ஒருவர் தானே ஜெயிக்க முடியும்?)

How safe – Our Nuclear installations?


What happened in Japan is a great worry not only to that country but also to the entire world. She is trying hard to avert Nuclear meltdown in Fakushima plant, similar to Chernobyl, which will be a serious threat to her citizens.  While Chernobyl is an accident, Fakushima is due to nature’s fury.  Already people around this plant are moved to safety.

Japan is not a stranger to earthquakes and has well prepared for such disasters. But this time in addition to damage to properties and loss of human lives,  nuclear radiation threat is added to the fore. 

We Indians need to introspect on our readiness and review our nuclear installations.  Considering the industrial safety records in India, which are not even worth of talking about,   with thick population,  lax regulations, poor enforcement and inadequate emergency responses, a nuclear power plant meltdown can be much more damaging.

“Chennai”, sitting in a “seismically active zone” with Kalpakkam not far away on the east coast, is particularly vulnerable.  We are installing another plant at Koodankulam in south.  How safe are these plants? 

Can the structures of these nuclear plants withstand the nature calamities, which can lead to nuclear meltdown and radiation?

Are our establishments are prepared to face such situation?

People in and around of these plants are to be educated about the nuclear radiations in case of any emergencies

Government need to address all these things.

Sunday, March 13, 2011

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழிகள்


நெட்டில் அவ்வப்போது 
சில ஜோக்குகள், 
புலம்பல்கள், 
ஆலோசனைகள், 
அறிவுரைகள் அழையாமல் 
வந்து உட்கார்ந்து 
கொள்ளும்.  அந்த 
வகையில் "மனைவியை 
சந்தோஷமாக வைத்துக் 
கொள்வது எப்படி" என்று 
நேற்று ஒரு பட்டியல் 
வந்தது. அவற்றை 
உங்களுடன் பகிர்ந்து 
கொள்கிறேன். 
மனைவியை சந்தோஷப்படுத்துவது அப்படி ஒன்றும் கடினமான வேலையில்லை. கீழக்கண்டவாறாக இருக்கமுயலுங்கள்.


1. நன்பனாக 2. சகாவாக 3. காதலனாக 4. சமையல்காரனாக 5. குழாய் 
ரிப்பேர்காரராக 6. மெக்கனிக்காக 7. ஆசிரியராக 8. எலக்ட்ரீஷியனாக 
9. தச்சராக 10. டாக்டராக 11. அலங்கரிப்பவராக 12. பொறுப்பேற்பவராக
13. ஜோசியராக 14. ஆறுதலும் தேறுதலும் அளிப்பவராக 15. சொல்வதை யெல்லாம் கவணிப்பவராக 16.  psychologist-ஆக 17. பூச்சி மருந்து அடிப்பவராக 18. சுத்தமானவராக 19. நல்ல அமைபாளராக 20. நல்ல தகப்பனாக 21. நல்ல உடற்கட்டுடன் 22. அன்பானவனாக 23. புத்திசாலியாக 24. வீரச் செயல்கள் புரிபவராக 25. அனைத்தையும் செய்யும் வல்லமை படைத்தவனாக 26. உண்மையாக 27. நம்பிக்கைக்கு உரியவனாக 28. மனைவி செய்யும் சமயல் எப்படி இருந்தாலும் பகழ்பவனாக 29.டி.வி ரிமோட்டினை கேளாதவனாக 30. பொறுமையுள்ளவனாக.....இந்த லிஸ்ட் இன்னும் நீளுகிறது.... இது தவிர....


1. அவ்வப்போது புகழ வேண்டும்
2. கடைக்கு அழைத்து செல்ல வேண்டும் (ஷாப்பிங்க் முடிக்கும் வரை பொறுமையா காத்திருத்தல் தனி)
3.சரியான தினங்களில் பரிசளிக்க வேண்டும்.
4. பணக்காரர் ஆக இருக்கவேண்டும்
5. பிற பெண்களை 'லுக்' விடாதிருக்க வேண்டும்.


முக்கியமாக:


நீங்கள் மனைவியை முழுக் கரிசனத்தோடு, அன்போடு பரிபாலிக்க வேண்டும். ஆனால் அவற்றை அவளிடமிருந்து எதிர்பார்காமலிருக்க வேண்டும். மனைவிக்குண்டான சுதந்திரம் இருக்க வேண்டும். மிக முக்கியமாக பிறந்த நாள், திருமண நாள் போன்ற வற்றை மறக்காம்லிருக்க வேண்டும்.


அதெல்லாம் சரி.... கணவனை சந்தோஷமாக வைத்திருக்க, மனைவி  என்ன செய்ய வேண்டும்?


ஒரு வெண்டைக்காயும் வேண்டாம்.  அவனை "தனியாக" விட்டால் போதும்!!

Saturday, March 12, 2011

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம்


 The devastating earthquake measuring 8.9 on the Richter scale that struck Japan on Friday had its epicentre near the east coast of Honshu. The epicentre was at a depth of 24.4 kilometres.
Only a couple of days earlier, another earthquake of magnitude 7.2 succoured about 130 kilometres east of Sendai, a city with population over one million that experienced strong shocks. The epicentres of both the earthquakes lie on close proximity and experts at the Incorporated Research Institutions of Seismology believe that the March 6 quake was a fore-shock of the great earthquake of March 11. Earthquakes of such scale are not very uncommon in Japan, in fact there are have been five earthquakes of a similar scale since 1900.
What caused the Japan earthquake
The March 11 earthquake was caused due to of thrust faulting. In thrust faulting rocks placed lower in the earth's crust get pushed over the overlying layers. This happened along or near the boundary where the Pacific Plate, an oceanic tectonic plate beneath the Pacific Ocean, moves under Japan. The convergence rate at the Pacific Plate's boundary near Japan is much higher than other zones. Great earthquakes at shallow depth beneath the ocean pose a major tsunami threat, as experienced in Japan soon after the quake.


மேற்கண்ட விவரங்கள் யாவும் செயதித்தாட்களிலும், இன்னபிற ஊடகங்களிலும் 
வெளியானதது தான்.  நமது புவி ஆண்டுக்கு சர்ரசரியாக 500,000 நில நடுக்கங்களை 
எதிர் கொள்கிறது. இவற்றில் 100,000  மட்டுமே "உணரப்படுகின்றன".   100 மட்டுமே 

பாதிப்பை எற்படுத்துகின்றன.   ஜப்பானில் (அனைத்து தீவுகளிலும்) மட்டும் சரா சரியாக 1500-க்கும் மேற்பட்ட நில நடுக்கங்கள் எற்படுகின்றன. உணரப்படும் நடுக் கங்கள் சிலவே.  நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகள் யாவை என கண்டறி யப் பட்டுள்ளனவே தவிர, 
எப்போது, எந்த இடத்தில் ஏற்படும் என துல்லியமாக 
முன் கூட்டியே சொல்வது என்பது இன்னும் விஞ்ஞானத்தின் பிடிக்குள் சிக்க வில்லை. தற்போது ஏற்பட்ட நில நடுக்கம், அதனை ஒட்டிய ஆழிப்பேரலை மிகக்கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் A huge explosion has rocked a Japanese nuclear power plant damaged by Friday's devastating earthquake.  Japanese officials say the container housing the reactor was not damaged and that radiation levels have now fallen.The term "meltdown" raises associations with two nuclear accidents in living memory: Three Mile Island in the US in 1979, and Chernobyl in Ukraine in 1986.  In both, excess heat in the reactor caused fuel to melt - and in the first, wider melting of the core. The question is whether the same thing has happened in Fukushima. 
It appears that the reactor was shut down well before any melting occurred, which should reduce considerably the risk of radioactive materials entering the environment. However, the detection of caesium isotopes outside the power station buildings could imply that the core has been exposed to the air. Although Japan has a long and largely successful nuclear power programme, officials have been less than honest about some incidents  in the past, meaning that official reassurances are unlikely to convince everyone this time round.  Japan's Prime Minister Naoto Kan has declared a state of emergency at the Fukushima number 1 and 2 power plants as engineers try to confirm whether a reactor at one of the stations has gone into meltdown. Tests showed at least three patients evacuated from a hospital near the plant had been exposed to radiation, public broadcaster NHK quotes local government officials as saying.
Television pictures showed a massive blast at one of the buildings of the Fukushima-Daiichi plant, about 250km (160 miles) north-east of Tokyo. A huge cloud of smoke billowed out and large bits of debris were flung far from the building. The Japanese government's chief spokesman, Yukio Edano, said the concrete building housing the plant's number one reactor had collapsed but the metal reactor container inside was not damaged. He said radiation levels around the plant had fallen after the explosion. Officials ordered the evacuation zone around the plant expanded from a 10km radius to 20km (12 miles). The BBC's Nick Ravenscroft said police stopped him 60km from the Fukushima-Daiichi plant. Mr Kan said the amount of radiation released was "tiny".
இதில் வியக்க வைத்த அம்சம், இப்பேரழிவினை ஜப்பானிய மக்கள் எதிர் கொண்ட 
விதம்.   பி.பி.ஸி செய்தி தொகுப்பாளர்  சொல்கிறார்:  அது ஒரு 37 மாடிகள் கொண்ட கட்டிடம்.  நில நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது.  மின்சாரம் 
நிறுத்தப்பட்டு விட்டது.  37-ஆவது மாடியிலிருந்து, மாடிப்படி வழியாகவே, மக்கள், எந்தவிதமான தள்ளுமுள்ளுமின்றி, அமைதியாக சுவற்றைப்பித்துக்கொண்டு 
வேகமாக இறங்கிகொண்டுள்ளனர்:  முடியாதவர்களுக்கு உதவியும் செய்து 
கொண்டு.  இந்த "Coolness" and the "attitiude-ஐ  உலகில் வேறு என்காவது கான 
முடியுமா வென ஆச்சரியப்படுகிறார்.  

கனடா நாட்டைச் சார்ந்த பயணி ஒருவர் ஜப்பானிலிருந்து சொல்கிறார்: மக்களில் சிலர் தெருக்களில் பாதுகாப்பு கருதி குவிந்துள்ளனர்.  ஆனால் எந்தவிதகமான 
பதற்றமுமில்லாமல் தங்களுடைய பணிகளை செயது கொண்டுள்ளனர். அவர்கள் நிகழ்வுகள் நம்ப முடியாததாக இருக்கிறதே தவிர பயமொன்றுமில்லை என்கின்றனர் . சிலர் கண்கலங்கினார்களே தவிர "பித்து பிடித்தது போல" 
 நடந்த்து கொள்ளவுமில்லை; "அலறவோ கூச்சலிடவோ" செய்யவுமில்லை.  உணர்வுகளை தங்களுக்குள் ளாகவே வைத்துக் கொண்டார்களே தவிர, பொது இடத்தில் 'சீன்' கிரியேட் பண்ணவில்லை.  மறக்காமல் தங்களது நண்பர்களுக்கும், 
உறவினர்களுக்கும் தாங்கள் நலகமாக இருப்பதை தெரியப்படுத்தி விட்டனர்.  
பேரிடர் நேரும் போது மக்களும்-அரசாங்கமும் எவிவிதம் நடந்து கொள்ள 
வேண்டும் என்பதை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியாதாக கூறுகிறார் இவர். 
முக்கியமாக, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி "லூட்டிங்க்" நடைபெறவில்லை.......  

கிட்டத்தட்ட இதுபோல, அனுபவங்க்களை,   பல நிருபர்கள் தத்தமது செய்தி 
நிறுவனங்களுக்கு செய்தி அளித்துள்ளனர். இதுபோல எதாவது நம் நாட்டில் நடந்திருந்தால், நாம் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்போம்?
 உலகமே ஜப்பானிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.  
=======================================================================

Monday, March 7, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்



அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும்  மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.


சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!


மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் திகதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் 
வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். (To continue this article
Click the below link) : 
Read more
=========================================================================



அது சரி!...சும்மா கொஞசம்  பேரிடம் (பெண்களிடம் தான்) சர்வதேச 
பெண்கள் தினம் பற்றி கேட்டேன். அவர்களது "ரெஸ்பான்ஸ்" இப்படி 
இருந்தது!
--
70 வயது மூதாட்டி:  .....ஆமா.... இது இல்லாங்காட்டி (மகளிர் தினம்)  இன்னா 
போச்சு...   பையனை பெத்தாலும்-பொண்ணப் பெத்தாலும் சோத்துக்கு 
லோலடிக்க எந்தலியில எளுதியிருக்கு... 

50 வயது பெண்:   "பொம்பளைங்க பாடு என்னிக்குதான் நிம்மதியா ஆச்சு... 
ஆத்தா கையால இடி...புருஷன் கையால இடி.. இப்ப .. எம் பையன்,  பொண்டாட்டி பேச்ச கெட்டுக்கிட்டு என்னிய போட்டு வாட்டறான்.. 
கையில் நாலு காசு இருந்தாக்க...அல்லாரும் கொண்டாடு வாங்கதான்...இல்லாங்காட்டி என்னிய மாரி அல்லாட வேண்டியது தான்.....

35 வயது பெண்: மீட்டிங் போடுவாங்க சார்.. பேசுவாங்க...இது வருஷா 
வருஷம் நடக்கும் .. இந்த காலத்திய பெண்கள் இப்பவெல்லாம் பரவாயில்லை சார்..நல்லா படிக்கிறாங்க...நல்லா சம்பாதிக்கிறாங்க  
...மத்தபடி பெரிய அளவில் மாறுதல் இல்ல ....

30 வயது:  இந்த நாளுக்கு யாராவது "Offer"  கொடுக்கிறாங்களா...Cheap-ஆ 
இருந்தா எதாவது வாங்கிப் போடலாம்.

21 வயது (Just finished her Engineering..and entered into a job):   Is it..  ?  I dont know all these things sir.. People will always do something...Anyway thanks.... for giving this information.. If I receive any message or greetings I will have to  send thanks card..."

வீட்டு வேலை செய்யும் பெண்: சும்மனா பொம்பளைங்க நாள்னு சொன்ன 
எப்புடி?  எதனாச்சும் அரிசி..மண்ணெண்னை பிரியா கொடுத்தா சரின்னு சொல்லலாம்....

 (லேசாக தலை சுற்றுவது போல இருந்தது - இனி யாரையும் கேட்ப 
தில்லை என வந்துவிட்டேன். அனால் கொஞ்சம் வரிகளுக்கிடையேயும் 
படித்தால் செய்தி இருக்கத்தான் செய்கிறது. )



Thursday, March 3, 2011

விளம்பரம் ??

ஒரு மிகப் பிரபலமான நிறுவனத்தின் தலைவர் ரயிலில் பிரயாணம் 
செய்துகொண்டிருந்தார்
சக பயணி ஒருவர் அவரிடம் பவ்வியமாக வினவினாராம். 


"சார்... உங்களது PRODUCTS-ஐ மட்டும்தான் மக்களில் பெரும் பாலோர் 

  உபயோகிக்கின்றனர்."


"ஆமாம்"

"உங்களுக்கு போட்டியே இல்லை என்பது தானே சார் நிலவரம்?"

"சரியாகச் சொல்கிறீர்கள்"

"உங்களக்கு அடுத்த போட்டியாளர், கண்ணிற்கே தென்படாத தூரத்தில் 
  தானே இருக்கிறார்..!"

"அதற்கென்ன இப்போது?"

"மார்க்கட் முழுவதுமாக உங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் போது 
நீங்கள் எதற்காக 
விளம்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? 

நிமிஷத்திற்கு ஒரு advertisement வருகிறதே?"



"நல்லது..நண்பரே.. இப்போது நமது ரயில் எவ்வளவு வேகத்தில் போய்க் 
கொண்டிருக்கிறது?"

"100 மைல் வேகம் இருக்கு சார்.."

"ரயில் தான் முழுவேகம் பெற்று விட்டதே.. ரயில் இஞ்சினை ஆஃப் செய்து 
  விட்டால் என்ன?

"அதெப்படி சார்...? கொஞ்ச நேரத்தில் ரயில் நின்று விடுமே சார்..!"

"வியாபாரமும் அப்படித்தான் நண்பரே..நான் விளம்பரம் எனும் இஞ்சினை 
 ஆஃப் செய்து விட்டால் எனது வியாபாரமும் கொஞ்ச நாளில் நின்று 
  விடும்....புரிகிறதா?"

கேள்வி கேட்ட நபர்..அசடு வழிந்துகொண்டு சென்று விட்டாராம். இது கற்பனை உரையாடல் அல்ல..

மார்க்கட்டில் முதலில் இருக்கும் ஆளே இப்படி சொல்லும் போது,  நமது 
நிறுவனம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? செய்திருக்க வேண்டும்?

 BSNL மார்க்கட் ஷேர் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே?

தனியார் நிறுவனங்கள் எப்படியெல்லாம் விளம்பரிக்கிறார்கள்? 
அதுவும் MNP வந்தபின் ஆர்ப்பாட்டமான, அசத்தும் விளம்பரங்கள்.

நமது விளம்பரங்கள் பேப்பரிலும்-டி.வி யிலும் சுத்தமாக நின்று விட்டன.
MNP-நடைமுறை படுத்தப் பட்டபின்னும்-நாம் தூக்கத்தை விட்டு எழுந்த 
பாடில்லை.

Wednesday, March 2, 2011

TELECOMMUNICATION COMPANIES


இந்தியாவில் மொபைல் போன் நிறுவனங்கள் குறைந்தபட்சமாக எவ்வளவு 
வருமானம் பெறமுடியும்?
TRAI  கணக்குப்படி 75 கோடி இணைப்புகள் 
உள்ளன.  ஒருவர் நாள் ஒன்றுக்கு 15 நிமிடம்
OG கால் பேசுகிறார் என வைத்துக் 
கொள்வோம். அல்ப கணக்காக வைத்தாலும் 
 1,62,000 கோடி வருமாணம் வாய்ஸ் 
காலிலேயே வந்துவிடும். இது தவிர 
ஐஎஸ்டி,டேட்டா வருமானம் தனி.  
முக்கியமாக இந்த பாட்டு பிடித்தால் "ஸ்டாரை" அழுத்தும் வகையில் லவட்டும் வருமானத்திற்கு யாரும் கணக்கு சொல்வதில்லை.  ஆக கூடி 2,00,000 கோடி ரூபாய்களை தொலை பேசி நிறுவனங்களுக்கு, நமது பொதுஜனம், மொய் எழுதி விடுகின்றனர்.


இந்தியாவின் பெரிய நிறுவனம் பார்த்தி ஏர்டெல். இவர்களது 2009-10 
ஆண்டுக்கான அதன் மொத்த வருமானம்  ரூ. 41,829 கோடி. இதில் 
அனைத்துச் செலவுகளும் போக, வரி கட்டியது போகக் கிடைத்த லாபம்
ரூ. 9,163 கோடி.  இந்த செயல்திறன் மிக்க பார்த்தியிடம் கிட்டத்தட்ட 25% 
மார்க்கெட் ஷேர் உள்ளது.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை எடுத்துக்கொண்டால் மொத்த 
வருமானம்: 12,511.72 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம்? வெறும் 
478.93 கோடி ரூபாய்தான். இதுவே ஓராண்டுக்கு முன்பு (2008-09) 4,802 கோடி 
ரூபாயாக இருந்தது.


ஐடியா செல்லுலார் 2009-10 ஆண்டின் மொத்த வருமானம் 11,896 கோடி 
ரூபாய். வரிக்குப் பிறகான லாபம் 1,054 கோடி ரூபாய்.


வோடஃபோன் நிறுவனத்தின் தாய் கம்பெனி பிரிட்டனில் உள்ளது. அதன் 
ஆன்னுவல் ரிப்போர்ட்டில் தேடிப் பார்த்ததில் 2009-10 வருமானம் சுமார் 
22,500 கோடி.  நிகர நஷ்டம் 266 கோடி.


பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் என்ற அரசு அமைப்பைப் பார்ப்போம்.


எம்.டி.என்.எல் மொத்த வருமானம்: 3,781 கோடி; தொழிலிலிருந்து அடைந்த 
நஷ்டம்: 4694.5 கோடி ரூபாய்!  இந்தக் கொடுமையைப் பாருங்கள். 
எம்.டி.என்.எல்லின் மொத்த வருமானமே ரூ. 3,781 கோடி.
ஆனால் அது தன் ஊழியர்களுக்கு 2009-10-ம் ஆண்டில் கொடுத்த சம்பளம் 
மட்டும் 4,966.25 கோடி! இது தமாஷல்ல. ஆன்னுவல் ரிப்போர்ட்டில் 
பாருங்கள். புரியும். இந்த எம்.டி.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களில், 
மூன்றில் இரண்டு பங்கு உபரி என கூறி, இவர்களை VRS திட்டத்தில் 
அனுப்பி வைக்க சென்ற ஆண்டு அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு 
கடிதம் எழுதிவிட்டது. "விரைந்து" செயல் பட்டு,  எம்.டி.என்.எல்-
நிறுவனமே காணாமல் போனபின்,   மத்திய அரசு ஏதேனும் செய்யலாமா 
என யோசிப்பார்கள்.

சரி, பி.எஸ்.என்.எல் கதை என்ன? மொத்த வருமானம் 32,045 கோடி ரூபாய். 
நஷ்டம் 1,823 கோடி ரூபாய். இங்கேயும் உபரி ஆட்கள் உண்டு. இப்போது 
இந்த உபரிகளை என்ன செய்யலாம் என ஆராய கமிட்டி போட்டுள்ளார் 
களாம்.


இந்த நிறுவனத்தில் உபரி மட்டும் பிரச்ச்னை இல்லை.  திண்ணை தூங்கிகளும்,  "எவன் வீட்டு எழவோ-பாயப்போட்டு அழுவு" என்ற attitude-ம் தான்.  


உள்கதவு, வெளிக்கதவு, நடுக்கதவு, ரேழி,தோட்டம்,,திட்டம் போட, 
போட்டதிட்டத்திற்கு முட்டுக்கட்டை போட,விற்க- மார்க்கட் பண்ண 
(என்ன வித்தியாசமோ?), இன்னும் வாயில் நுழையாத பெயரில் எல்லாம் 
'ஆபீஸர்கள்'  எங்கெங்கினும் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.  வரவு செலவு 
பார்க்க 42 கணக்குப் பிள்ளைகள் வேறு தணியா அமர்ந்திருப்பார்கள். இது 
தவிர ஊழியர்கள் கணக்கு நூற்றுக்கணக்கில்.  அப்படி என்னதான் வேலை செய்வார்களோ தெரியாது.  போன மாட்டையும் தேட மாட்டார்கள். வந்த மாட்டையும் கட்ட மாட்டார்கள். இவர்களது வியாதிகள் சொல்லி மாளாது.

இவர்களது லேண்ட்லைன் ஃபால்ட் அகாமல் இருக்கவும், பிராட் பேணட் 
கேட்டு இரண்டு மாதத்திலாவது கிடைக்கவும் நீங்கள் இஷ்ட தெய்வத் 


தினை வேண்டிக் கொள்வது பலன் தரும்.  உபரி ரூபாய் 40,000  கோடியையும் கரைத்துக் 
குடித்துவிட்ட மஹானுபாவர்கள் ஆயிற்றே! 



அரசாங்கமே தனது நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வழிதேடும் விந்தையும் இங்கே பார்க்கலாம். 

மேலே சொன்ன கம்பெனிகள் கையில்தான் சுமார் 85% சந்தை உள்ளது.  சில்லுண்டிகம்பெனிகளை மறந்துவிட்டு மேலே சொன்னவற்றைப் பட்டியலிட்டால்:


நிறுவனம்  ......................வருமானம்...............லாபம்/நஷ்டம்


பார்த்தி ஏர்டெல்            41,829 .........................9163
வோடஃபோன்                 22,500 ......................... -266
ரிலையன்ஸ்                     12,512.........................  479
ஐடியா                                   11,896........................1,054
பி.எஸ்.என்.எல்                32,045..................... -1,823
எம்.டி.என்.எல்                    3,781 ....................  -4,695


ஒரு கால்குலேட்டர் கையில் இருந்தால்,  நோண்டி நோண்டி வித விதமான எண்ணிக்கைகளைக் கொண்டுவந்துவிடலாம். 


இப்போது நாம் அனைவரும் நிஜமாகவே கவலைப்படவேண்டிய 
விஷயம், எப்படி பி.எஸ்.என்.எல்லையும் எம்.டி.என்.எல்லையும் 
காப்பாற்றப் போகிறார்கள் என்பதுதான்! அவை அடையும் நஷ்டத்துக்கு 
இன்று யார் காரணம்?


அடுத்த மாசம் சம்பளம் இல்லை என்று சொல்லப்படும் வரை 'மழை' பெய்தாற்போலத்தான் இருக்கப் போகிறார்களா? 
இந்த லட்சனத்தில் 'சம்பள ஸ்கேல்'  உயர்த்திக் கொடுக்க போராட்டம் 
வேறு நடத்துவார்கள்!


 விரைவில் மற்றுமொரு ஏர் இந்தியாவையோ அல்லது ஐ.டி.ஐ யோ எதிர்பாருங்கள்!