Saturday, March 19, 2011

இன்னொரு போலி!

ஒரு சீக்கிரமாக ஊர் போய்ச்சேரலாம் என விமானத்தில் பறக்கிறோம். ஆணால் இந்த போலி டாக்டர், போலி சாமியார் பட்டியலில்
புதிதாகச் சேர்ந்துள்ள "போலி விமான ஓட்டிகள்", நம்மை நிஜமாகவே "சீக்கிரம்' அனுப்பிவைத்த்து விடுவார்கள் போலிருக்கிரார்கள்.

"இண்டிகோ ஏர்லைன்ஸ்" என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில், உள்நாட்டு விமான சேவையை சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதில் பெண் விமானியாகப் பணிபுரிபவர் பர்மிந்தர் கெளர் குலாட்டி. சென்ற ஆண்டு இவர் கோவாவில் விமானத்தைத் தரையிறக்கும் போது, ரியர் வீலில் (Rear Wheels) லாண்டிங் செய்யாமல் நோஸ் வீலில் (Nose Wheel, முன்புறச் சக்கரங்கள்) லாண்ட் செய்து, பயணிகளை திகிலில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 160 பயணிகளின் உயிர்களுடன் விளையாடியுள்ளார். இதன்பிறகு இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவு மிகவும் அதிர்ச்சிகரமானது. DGCA நடத்தும் கமர்ஷியல் பைலட் லைஸன்ஸ் பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து, இவர் லைஸன்ஸ் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் செளஹான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்பவர்.

"ஆஹா...பட்சி அகப்பட்டுக் கொண்டதா" என சாய்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. 
மேலும் நோண்டல் விசாரணையில், இதுபோன்ற போலி பைலட்டுகள் பலர் இருப்பது அம்பலமாகி வருகிறது. வேடிக்கைஎன்னவென்றால்  இதில் பலர் ஒரே பாட்சில் லைஸன்ஸ் பெற்றவர்கள். ஆக மதிப்பெண் சான்றிதழ் மோசடி ஒரே இடத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 

வழக்கமாக, RTO ஆபீஸில்,'சன்மானம்' அளித்து எட்டு போடாமல்  
லைசென்ஸ் பெறுவது வழக்கம்தான். ஆனால் பைலட் லைஸன்ஸ் 
பெறுவதில்கூட இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததிருபபது விமானப் 
பயணிகளிடையே பெரும் பீதியையும் , திகிலையும் ஏற்படுத்தியுள்ளது. 
வெறும் பைலட்டுகள் மட்டுமே இந்த முறைகேட்டிற்க்குக் காரணமாக 
இருக்க முடியாது. DGCA வில் உள்ளவர்கள் உதவியில்லாமல் இது 
சாத்தியமே அல்ல! 

இதுவும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சமாதி கட்டப்படும் என எதிர்பார்ப்போம். நாமும் அடுத்த விமான விபத்து வரை இந்த மோசடி யினை மறந்து, டி.வி பார்த்துக் கொண்டிருப்போம். கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு பயணிகள் உயிரின் மதிப்பை விட, கூட்டணி இன்னும் காஸ்ட்லியானது தானே?

No comments:

Post a Comment