Sunday, April 26, 2015

தமிழில் பேசாதீர்கள்....

எனதருமை சக உறவுகளே! நட்புக்களே!

நீங்கள் விரும்ப மாட்டீர்கள் எனத் தெரியும். வந்துவிட்டானா வேலையற்ற மற்றொரு ஆள் என நீங்கள் நினைப்பது புரிகிறது;  இருந்தும் சில வரிகளைச் சொல்ல வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.


உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிக..மிக..மிக மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். அது தானய்யா உங்களது தாய் மொழி.

அவ்வளவு தொன்மையான மொழியாயினும் ஆகச் சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கியது நமது தமிழ்.

இவ்வளவு தொன்மையான, வளமான மொழியை உலகின் வேறு எந்த நாடு பெற்றிருந்தாலும், அதன் மாண்பு குறித்து பெருமிதம் கொண்டிருப்பார்கள். போற்றிச் சீராட்டி இன்னமும் செழுமைப் படுத்தி வளர்த்திருப்பார்கள்.

நமக்கு தமிழின் அருமையும் அறியாது; 
பெருமையும் புரியாது; 
தொன்மையும் தெரியாது. 
கோர்வையாக பேசவும் வராது.

நமக்கு மட்டும் ஏன் இந்த வினோத மனப்போக்கு?

நாம் ஆங்கிலேயர்களுக்கு கால் கழுவிவிட்டே, அவனது மொழி, அவனது உடை, அவனது இலக்கியம், அவனது கலாச்சாரம் ஆகியவற்றை சிக்கெனப் பற்றிக் கொண்டுவிட்டோம்.

‘அடிமைப் புத்தியை’ பெருமிதமாகக் கொள்ளும் நமது விந்தைக் குணத்தால் பேரழிவிற்கு உள்ளாகப் போவது நமது தாய்மொழி தமிழ்.

உலகில், எந்தெந்த நாடுகள் எல்லாம், ஒருகாலத்தில் இங்கிலாந்து – ஃப்ரானஸ் - ஸ்பெயின்  போன்ற ஏகாதிபத்தியத்திற்கு காலணியாக இருந்தனவோ, அந்த நாடுகள் எல்லாம், மதியிழந்து போய், தாய் மொழியினை புறந்தள்ளி, ஆங்கில மோகத்தால் பித்து பிடித்து அலைகின்றனர்.  அவர்கள் கையில் வைத்திருக்கும் தாய் மொழியின் அருமை கூடத் தெரியாத பதர்களாக உள்ளனர்.

உங்களது கனவு நாடான, அமெரிக்காவிலும் கூட, சீன மொழி பேசாத சீனன் இல்லை; ஃப்ரென்ச் பேசாத ஃப்ரான்ஸ்காரன் இல்லை. ஜெர்மானி பேசாத ஜெர்மனியன் இல்லை.  ஆனால் தாய் மொழி அறியாத இந்தியர்கள் உண்டு; அது தெலுங்கோ-கன்னடமோ-தமிழோ.. அவரவர்கள் வீட்டில் தாய் மொழியினைப் பேசுவதில்லை..

அமெரிக்கா போக வேண்டாம்...!  வெளி மானிலங்களில் வசிக்கும் தமிழர்கள் கூட இந்தி பேசுவர்-ஆங்கிலம் பேசுவர்; தவறியும் தமிழ் பேசார்.  தற்போது, இந்த அடிமைப் புத்தி சென்னையையும் பற்றிக் கொண்டுவிட்டது.  சென்னையில் தமிழில் பேசும் குழந்தைகள் இல்லை.

தங்கள் குழந்தைகளுக்கு ‘டமில்’ பேச வராது’ என்பதில் பெற்றோர்களுக்குப் பெருமை வேறு...

தாய் மொழியினை இகழ்வது போல ஈனச் செயல் ஏதுமில்லை. தாய்-தந்தையை யார் எனத் தெரியாது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு பாவ காரியம் தமிழில் பேச மறுப்பது.

நமது கலாச்சாரம், மொழியின் வழியேதான், அடுத்த தலைமுறைக்கு பாய வேண்டும். நீங்களே வீட்டில் தமிழில் பேச மறுத்தால், தமிழ்க் கலாச்சாரத்தினை, உங்கள் குழந்தைகளுக்கு எவ்விதம் சொல்லிக் கொடுப்பீர்கள்?

‘தமிழ் தெரியாது’ என்பது கௌரவம் அல்ல; பெருமை அல்ல; அந்தஸ்து அல்ல; உயர்குடியினராய் மாறிவிட்டோம் என்று பொருள் இல்லை. மாறாக அவ்விதம் சொல்வதும் - நினைப்பதும் கேவலம்; அவமானம்; அசிங்கம்.

உலகின் மிகத் தொன்மையான மொழியினைக் கொல்லும் பாவச் செயலைச் செய்யாதீர்கள்.  குறைந்த பட்சமாக வீட்டிலாவது தமிழ் பேசுங்கள். குழந்தைகளை தமிழில் பேச ஊக்கப் படுத்துங்கள். புதிய சொற்களைச் சொல்லிக் கொடுங்கள். தமிழில் ஆங்கிலத்தைப் போலவே கனமான சொற்கள் இருக்கின்றன  என்பதைத் தெரியப் படுத்துங்கள்.

உங்கள் சிறார்களுக்கு எளிய தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். உங்களுடன் பணி புரிபவர், கடைக்காரர்  இப்படி எவராக இருப்பினும், அவர் தமிழராக இருந்தால் தமிழில் பேசுங்கள்.

தமிழ் வாழ்க.. மற்றதெல்லாம் ஒழிக.. எனக் கூவும் கிறுக்கன் (Fanatic) அல்ல நான். எதையும் கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் தமிழில் பேசுங்கள்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பைத் தொடருங்கள்..


இது ஒரு அருமையான குறும்படம்..

தமிழ் இனி.....For those who did not know to read Tamil:

Colette Grinevald : “Speaking your mother tongue is not a disability!”


C. Cayon-Sélenium

Dr Colette Grinevald of the University of Lyon (France) is a pioneer in endangered languages. A Harvard Ph.D. in linguistics and UNESCO expert, she worked as a linguist in the USA for 30 years with many field trips to Latin America to document, defend and promote endangered languages and the people who speak them.

As a specialist in endangered languages, what is your view on International Mother Language Day?
Mother Language Day should literally celebrate the languages of all the mothers of the world and send them the message that they have the right to speak their own language to their children, because they have important things to say in that language to their children.  It should be the day of all the languages in the world including the “little languages”. Out of about 6000 languages no more than 200 have the status of national languages and a few hundred more have established literacy.
How do you record endangered languages?
I use a method called “research action”. It is an exchange – the people give me their language and I give something back. We work as equals and I recognize the speakers are the real experts! I have worked this way at writing the grammar of two languages: Jakaltek Popti' of Guatemala (Maya) and Rama of Nicaragua (Chibcha).  And I have been supervising many doctoral students working in other countries that way. Understand that as a linguist I don’t “invent” the grammar, I transcribe the way people talk, and analyze the rules of grammar they follow when they talk.  I write then scientific studies for the linguists but also materials for the community, to show them some of what I have learned of their language, to show them their grammar.
What are your views on bilingual education?
Bilingual education is complex and needs clear goals and adapted messages. There are in fact many models that do not all equally support mother languages.  The most common bilingual education model used to be a transitional model, using the mother language at first to help the child adapt to the school and not drop out too soon, but then switching to the dominant language and discontinuing the mother tongue altogether.  A newer model aiming at more respect for the mother languages is that of the intercultural bilingual education that allows children to be educated in their language longer, while teaching also in the national language, and promotes the mother languages in their cultural context.  One hears also talks of bilingual education often coming under the category of “inclusive” education, i.e. an education meant to help the children integrate society, a model thought originally for the integration of children with disabilities, but speaking your mother tongue is not a disability!  We must go beyond this narrow idea of inclusion when talking of mother tongues.
How then can we make inclusion more “inclusive”?
The real challenge of a truly bilingual education is to educate speakers of the dominant language group as well as speakers of indigenous languages about each others’ cultures, that is what the term ‘intercultural’ means really. What we have learned from 50 years of practice is that the problem is not really about languages at all, it’s all about discrimination and respect for other cultures. But even schoolteachers who speak indigenous languages have to feel convinced that their languages are good.  This is what I see as part of my job as linguist, to show to them, and others, that their language is OK, even if it does not follow the structure of the national language.  And to think of inviting native speakers in to the classrooms, even if they have not been schooled themselves, because they know the language and the culture and can help teach them to the children.
What is the place of literacy in mother language teaching?
There has been a real focus on literacy as the answer to education, and pressure to turn mother languages into literate languages, following standards of national languages.  But we are now re-thinking the centrality of writing, as the real life of languages is naturally in speaking and listening. One shouldn’t see illiterate people as ignorant people, and indigenous languages as primitive languages in need of writing to be real languages. People confuse written form and “true form” as if the mother tongues could only be languages once reduced to writing. .Writing and literacy are very valuable, there is not doubt, but we must remember that the natural state of languages is the spoken word, and value also the spoken word in education. In any case we see more and more how new technologies can give back the oral forms of languages their place.
How does technology facilitate minority languages?
The explosion of new technologies is fast changing the situation of minority languages.  For one thing, they allow oral transmission of those mother languages across continents. In the Guatemalan village where I worked I saw the development of technologies that enabled immigrants maintain better contacts between USA and the family at home.  Before the 70s there was little contact - only occasional letters written by “public writers” to be read aloud to the family back home. Then I remember the miracle of cassette recorders and the family messages in the local language that travelled back and forth on cassettes.  I even paid sometime people in cassettes, to support this communication! Today there is internet in town and people can telephone or Skype each other, although the local language is less used now.  Beyond this private use of technologies that can help maintain languages, more and more communities around the world are using them for teaching programmes. From Canada to Colombia, from Norway to New Zealand, mother languages are documented and taught in more attractive and efficient ways.
In fact UNESCO is catching on. At the last meeting on endangered languages in March 2011 in Paris, we discussed how the Internet has great potential in influencing the sustainability of languages and considered ways to encourage and support the use of new technologies in general on behalf of mother tongues.
You have worked with minority languages in Latin America. What is the legal status of those languages today?
There have been astonishing changes in the status of minority languages on that continent in the last twenty years. Today practically all Latin American countries have declared themselves multiethnic and multilingual and have granted linguistic rights including bilingual education to all their languages. The difficulty now is how to implement them.  Most countries have turned into vast laboratories of work on these indigenous languages today. See for instance the case of Colombia, and the work of linguist Jon Landaburu for the recognition and promotion of the languages of that country, for which he just won the Linguapax Award 2012. Today, in countries like Mexico, or Guatemala or Ecuador, more and more linguists and educators are native speakers, and are busy giving new life and prestige to their languages through new forms of education.

Tuesday, April 21, 2015

ஏன் போராடுகிறார்கள் - பகுதி இரண்டு...

தொலைபேசித் துறையினரின் போராட்டத்தைக் கூறி (ஒரு காலத்தில் தொலை பேசிக்காக காத்திருந்ததாகவும் - துறையில் ஊழல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதில்:

தொலைபேசிக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருந்தது P&T ஆகவும் DOT (Department of Telecommunication ) ஆக இருந்த பொழுது தான்.

இன்னும் சொல்லப் போனால், அக்காலத்தில், தொலைதொடர்பு இலாக்காவே தனியாக இல்லை. P&T Department-ல் டெலிகிராஃப் என்ற பிரிவினுள் வந்ததுதான் தொலை தொடர்புத்துறை. டெலிகிராம் தான் மிகப் பெரிய டெக்னாலஜி. Post Master General தான் P&T ஐ பார்த்துக் கொண்டார். பிறகுதான் DoT form ஆயிற்று.

மேற் சொன்ன இரண்டு இலாக்காகளும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருபவை. வரவுகள் அனைத்தும் அரசையே சேரும். செலவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு இருந்தால்தான்.

அப்பொழுதெல்லாம், ஒரு சிறிய எக்சேஞ்ச் (தொலைபேசி நிலையம்) வாங்கனும் அல்லது நிர்மாணிக்க வேண்டும் என்றாலும் பட்ஜட் ப்ரொவிஷன் இருந்தால்தான் சாத்தியமாகும். கேபிளும் அப்படித்தான்.

பட்ஜட்டில் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இல்லை. சாதனங்களும் வாங்க வில்லை. சுவிட்சஸ் கூட (தொலைபேசி நிலைய எக்யூப்பென்ட்) கூட வாங்க காத்திருந்தோம். எனவே டிமாண்ட் கடுமையாக இருந்தது. தேவைக்கும் சப்ளைக்கும் இடையே தேவையற்ற இடைவெளி இருந்தால் சேவைக் குறைபாடு இருக்கும் தான்.

அப்பொழுது திரு ராஜீவ் காந்தி அவர்கள், “We have already missed Industrial Revolution and we cannot miss the electronic revolution” என்று முடிவெடுத்து, புதிய டெக்னாலஜிகளைப் புகுத்தினார். சாம் பிட்ரோடா அவரது காலத்தில் வந்தவர் தான். நிதி ஒதுக்கீடு தாராளமாக அனுமதிக்கப் பட்ட்து. அதன்பின்தான் தொலைதொடர்பு அசுர வளர்ச்சி கண்டது. கேட்டவுடன் தொலைபேசி என்பது கிட்டத்தட்ட சாத்தியமானது.

உங்களது குற்றச் சாட்டு, அடிப்படையில் இரண்டு விஷயங்களைக் கொன்டுள்ளது. (1) திறமையின்மை (2) ஊழல்.

1. திறமையின்மை: ஊழியர்களின் திறமை குறித்து உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். 100 வருடங்களாக, பல்வேறு டெக்னாலஜிகளைக் கையாண்டவர்கள். எதையும் கையாளும் நம்பிக்கையும் திறமையும் கொண்டவர்கள்தான். எங்களது இஞ்சினியர்கள் வெளி நாடுகளில் நாங்கள் தொலைதொடர்பு அடிப்படைகளை நிர்மாணித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய திறமை பெரும்பகுதி ‘உபகரணங்களைச்’ சார்ந்த்தாகிவிட்டது. அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கவிடாமல் தடுத்தால் எப்படி தரமான சேவை வழங்க முடியும்? BSNL நிறுவனத்தை அதன் வளர்ச்சியை, நல்ல சேவையினை கொடுக்கும் சந்தர்பத்தை ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே கெடுத்தனர்.

தொலைதொடர்புத்துறை அமைச்சராக அந்த பொழுதில் யார் இருந்தனர் என்பதை உங்களுக்கு நான் சொல்லி விளங்கவைக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

DEEP ROOTED CONSPIRACY TO WEAKEN BSNL

Undoubtedly, it is because of the deep rooted conspiracy between the private operators and the politicians in power, that BSNL lost the race, and has gone into loss. As a result of this conspiracy, BSNL was not allowed to expand its mobile network for almost six to seven years. In 2007, BSNL’s tender, to procure 45 million line mobile equipments was cancelled by the then telecom minister A Raja. This was done purely to block BSNL’s network expansion, so that the private operators can get benefited. The entire BSNL employees had gone on a one day strike in July 2007, demanding not to cancel that tender. Again, the home ministry raised objections when BSNL was about to procure equipments from a Chinese company in 2010, through its mega tender floated to procure 93 million line mobile equipments. Finally, this tender was also cancelled. The objection of the home ministry was that, being a government company, BSNL should not procure equipments from a Chinese company, since it would be a threat to the national security. At a time when all the major private telecom operators were procuring equipments from Chinese manufactures, it was malicious on the part of the home ministry, in restraining BSNL to do the same. This was done with the sole intention of curtailing BSNL’s growth. Through the Neera Radia tapes, it became amply clear to what extent various ministries are being influenced by the corporates. It is because of these well calculated road blocks created in BSNL’s equipment procurement programme, the company was not able to expand and upgrade its networks on time, which resulted in network congestion and deterioration in the quality of its services.

TELECOM MINISTER’S CONFESSION

In his interview to the CNBC-TV18 on February 28, 2015, Ravi Shankar Prasad, minister for communications and IT has made the following confession. “Both these companies (read BSNL and MTNL) were in profit by the year 2005-2006, thousands and thousands of crore. What happened in the subsequent years that they have come under such a critical state? Something which I can openly tell you today, that every attempt was made that they are not allowed to expand.” Ever since Ravi Shankar Prasad became the minister, he is echoing this view. What the minister says is 100 per cent correct. But, it is already ten months since he took over. He has done precious little to undo the injustice that has been meted out to BSNL.

இந்தச் சூழ்னிலையில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது BSNL ஊழியர்களுக்கு?

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என விழைகிறேன். இது பி.ஜே.பிக்கு எதிரான போராட்டம் இல்லை. இப்போராட்டம் அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள.. நெடிய பாரம்பர்யமுள்ள இந்திய தொலைதொடர்புத்துறையைக் காப்பாற்ற..
காங்கிரஸ் காலத்திலும் கூட, துறையின் விரிவாக்கம் வேண்டி வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். கட்டுரையின் நீளம் கருதி சுருக்கிக் கொள்கிறேன்.

2. ஊழல்:

தொலைதொடர்புத்துறை ஊழல் யார் செய்தது நன்பரே? நாடே நாறிப் போய்க்கிடக்கிறது இந்த ஊழலால். இன்னும் சொல்லப் போனால், இந்த ஊழலை வெளிக் கொணர்ந்ததில், தொழிற்சங்கத்தின் பங்கு மிக அதிகம். அது யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எப்படி இருந்தாலும் ஊழியர் / அதிகாரிகளிடம் ஒழுங்கீனம் இருந்தால் அவற்றை எவரும் ஆதரிக்க வில்லை – அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சேவைக் குறைப்பாட்டினை தெரிவிக்க, பொதுமக்கள் நேரில் போய்த்திட்ட BSNL - ல் ஒரு அலுவலகம் இருக்கிறது. தனியாரிடம் யாரிடம் போய் முறையிடுவீர்கள்? பெட்டிக் கடையிலா?

BSNL – லின் தொலைபேசிக் கட்டணங்களில் எந்த முறைகேடும் இல்லை. வெளிப்படையான பிலகள். முறையீடு செய்ய அலுவலகங்கள்.. அதிகாரிகள் என எல்லாமே இருக்கிறது.

எனவே, இந்தப் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.

நாட்டின் பாதுகாப்பிற்காகவும், தனியார் நிறுவனங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க்கவும் அரசுத்துறை அவசியமாகிறது.

நீங்கள் என்னவோ சொன்னீர்களே? என்ன அது? ஆங்...அரசு கையில் இருந்தால் எப்படி துறை நாசமாய்ப் போகும் என..

நன்பரே... பம்பாய் பெருமழையில், மற்ற தனியார் நிறுவனங்கள் தங்களது ‘எக்யூப்மென்ட்களை’ காப்பாற்றிக் கொள்ள டவர்களை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டுச் சென்ற பொழுது, டவர்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். காஷ்மீர் வெள்ளத்தில், முதலில் டவர்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். ஏன்... தானே புயலில், சின்னாபின்னாமான நிலையிலும், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து, தொலைபேசி நிலையங்களை இயங்க வைத்தவர்கள் நாங்கள். ஓராயிரம் உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாக, தேசபக்தி என்பது எங்களது இரத்தத்தில் ஊறியது. ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து வரும் சந்தர்ப்ப தேசபக்தி அல்ல எங்களுடையது.

இப்படியே அரசுத் துறைகளுக்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக் கொண்டே சென்றால், நாட்டின் ராணுவத்தைக் கூட, தனியாரிடம் கொடுத்துவிடலாம். ஏன்.. அமெரிக்காவிடமே கொடுத்துவிடலாம். இன்னும் புதிய தளவாடங்களை கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள்! செய்யலாமா?

நேற்று, சிவசேனாவைச் சார்ந்த எம்.பிக்கள் தனியார் நிறுவங்களைக் கண்டித்து தர்ணா இருந்தது பற்றி, கூட செய்தித்தாளில் படித்திருப் பீர்களே? இந்தப் போராட்டத்தில், பி.ஜே.பி ஐச் சார்ந்த, BSNLMS யூனியனும் இதில் பங்கு பெறுகிறது என்பது உங்களுக்கு கூடுதல் தகவலாகச் சொல்கிறேன்.

ஏன் போராடுகிறார்கள்?BSNL  நிறுவனத்தைச் சார்ந்த  அனைத்து ஊழியர்களும், நிர்வாகத்தினரில் பெரும்பகுதியினரும், இன்றும் நாளயும் (21 & 22/415) வேலை நிறுத்தம் செய்கின்றனர்.


மத்தியதர வர்க்கத்தினருக்கு, அதுவும் முகனூல் போராளிகளுக்கு வேலை நிறுத்தத்தை  கேலி செய்வதும், “மற்ற நாட்களில் எல்லாம் வேலை செய்து கிழித்துவிட்டார்களா?” என பொத்தாம் பொதுவாக பேசுவதும் வாடிக்கைதான். 

அதுவும் பொதுத்துறை நிறுவனங்களை கேலியும் கிண்டலும் செய்வதென்றால் குதூகலம். அதுதான் அவர்களுக்கு “ஸ்டைல்”
அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். அவர்களது கோரிக்கைப் பட்டியலில் சம்பள உயர்வு இல்லை.

பின் எதற்காக போராட்டம் என்கிறீர்களா? 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை காக்க வேண்டும்; நசிந்துவிட்ட நிறுவனமாக மாற்றி, தனியாருக்கு விற்றுவிடும் அபாயத்தை தடுத்து நிறுத்துவதும் தான் பிரதான கோரிக்கை.

உங்களுக்குத் தெரியுமா?  செல்ஃபோன் சேவை துவங்கப் பட்ட பொழுது, BSNL நிறுவனத்திற்கு செல்ஃபோன் சேவை அளிக்க அனுமதி அளிக்கப் படவில்லை. காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? தனியார் பாக்கட்டுகளை நிரப்பத்தான். 

இந்த அனுமதி மறுப்பு ஆண்டுக் கணக்கில் தொடர்ந்தது. 

எல்லாவிதமான உட் கட்டமைப்புகளும் இருந்த அரசு நிறுவனத்திற்கு அனுமதி இல்லை. பின்னர் மன உறுதிமிக்க ஒரு அதிகாரியினால் அனுமதி வழங்கப் பட்டது.

இந்த நிறுவனம் களத்தில் இறங்குவதற்கு முன்னால், மற்றவர்கள் அனைவரும் நிலைபெற்று விட்டனர். அதுதானே அரசுக்கு வேண்டும்?

இவர்கள் சேவை அளிப்பதற்கு முன்னர், தனியார் நிறுவனங்கள் நிமிடத்திற்கு  பத்து ரூபாய்க்கு மேல், கட்டணம் வசூலித்து வந்தனர். கொள்ளை லாபம். ஒருவழியாக அரசு நிறுவனம் களத்தில் நுழைந்து ஒரு நிமிடத்திற்கு  ஒரு ரூபாய் மட்டுமே என தங்களது சேவையைத் துவங்கினர்.  அதன் பின் தான் மற்ற தனியார்கள் இறங்கி வந்தனர். இதை நாம் மறந்து விடக் கூடாது.

இத்துடன் விட்டனரா அரசுத்தரப்பினர்?  பி.எஸ்.என்.எல் தனது விரிவாக்கத்திற்கான தேவையான எக்யூப்மெண்களை வாங்குவதை தடை செய்ய / தாமிக்க வைக்க எந்தெந்த வகையிலெல்லாம் முடியுமோ அந்த வகையில் எல்லாம் முயன்றனர். 

பணம் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. டெண்டர்களை முடிவெடுப்பதில் குளறுபடி செய்தனர். யாரிடம் எக்யூப்மென்ட் வாங்குவது என்பதில் குளறுபடி செய்தனர்.  

இதனையும் தாண்டி, கிராமப் புறங்களில், தங்களது சேவையை இயன்ற அளவு விரிவு படுத்திக் கொடுத்தனர் BSNL நிறுவனத்தினர். கிராமப் புற சேவை என்பது, மிகுந்த பொருட் செலவு மிக்கது.  அற்பமான வருமாணமே கொடுக்கக் கூடியது. 

தனியார்கள் நகர்களில் தங்களது பாக்கட்களை நிறப்பிக் கொண்டிருக்கும் பொழுது, லாபம் அற்ற கிராமங்களிலும் சேவையை அளித்தனர் பி.எஸ்.என்.எல்.

தங்களது சேவையை தாங்களே புறக்கனிக்கும் விந்தையும் வினோதமும் இங்கேதான் நிகழும். மத்திய மானில அரசுகள் தங்கள் பயன்பாட்டிற்கு தனியார் சேவைகளை நாடி, அவர்களுடன் ‘அன்டர்ஸ்டேன்டிங்’ போடுவது வழக்கமாகி விட்டது. இது அடாத செயல் அல்லவா? 

அரசு அதிகாரிகள் ‘ஏர் இண்டியா’ வில்தான் பயணம் செய்ய வேண்டும் என ஆணையிட்டது போல, பி.எஸ்.என்.எல் சர்வீஸைத்தான் பயன் படுத்த வேண்டும் என ஆணையிட போராடுகிறார்கள் ஊழியர்கள்.

கிராமப் புறச் சேவைக்கான  நஷ்ட ஈட்டையும் அளிக்க மாட்டார்கள். 

அரசு நிறுவனங்களில் BSNL சேவைகளைப் பயன் படுத்த மாட்டார்கள். 

புதிய எக்யூப்மென்ட் வாங்குவதைத் தடுப்பார்கள் அல்லது வழங்க மாட்டார்கள். 

லைசன்ஸ் கட்டணத்தில் சலுகையும் கொடுக்க மாட்டார்கள். 

காலியாக உள்ள உயர்பதவிகளை நிரப்ப மாட்டார்கள் (டைரக்டர்கள் உட்பட). 

4ஜி சேவையை அளிக்க தேவையான அனுமதியை வழங்க தயக்கம் காட்டுவார்கள்.

பொதுத்துறை நிறுவனம் என்பது நாட்டின் முதுகெலும்பு அல்லவா? 

லாபம் மட்டுமே குறிக்கோளாய் அலையும் தனியார் அல்ல. 

அவற்றை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

தனியார் நிறுவனங்களே சிறந்த சேவை அளிப்பவை என்பது ஒரு மாயை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். 

உதாரணத்திற்கு ஒரு ஜி.பி டாட்டா தனியார்களில், ரூ 220/-க்கு மேல். BSNL –ல் 155 முதல் கிடைக்கும்.

கைகளையும்-கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளச் சொன்னால், ஜெயிப்பது எப்படி? ஆகவேதான் BSNL-ஐ காப்போம் என போராடுகிறார்கள்  இவர்கள்.

எல்லா நிறுவனங்களையும் போல, சில அக்கறையும்-பொறுப்பும் சரிவர இல்லாத ஆட்கள் இந்த நிறுவனத்திலும் இருப்பார்கள் தான். அவற்றை சரிசெய்ய முடியும். 

ஆனால் எல்லாவற்றையும் தனியாருக்கே விற்றுவிட்டால் அப்புறம் தனியார் வைத்ததே சட்டமாகிவிடும். அதற்காகவாவது பொதுத் துறை நிறுவங்களைக் காப்பாற்றியாக வேண்டும். அது பி.ஜே.பி யோ அல்லது காங்கிரஸோ,  வங்கிகள், இன்ஸூரன்ஸ் முதற்கொண்டு ரயில்வே உட்பட பொதுத் துறை நிறுவங்களை விற்பதும், நலைவடையச் செய்வதும்தான் அனைத்து அரசுகளின் கொள்கையாகவே-நடைமுறையாகவே இருக்கிறது.  

அரசியல் ரீதியாக இதனைப் புரிந்து கொண்டால்தான் எத்தகையை ஆபத்து காத்திருக்கிறது என்பது விளங்கும்.
அவர்களது போராட்டம் வெல்லட்டும்.  வாழ்த்துவோம்.

Wednesday, April 15, 2015

இணைய உபயோகிப்பாளர்களே... அவசரம்

நாம் ஹோட்டலுக்குள் செல்கிறோம். பேரர், என்ன வேண்டும் எனக் கேட்டதும் இட்லி என்கிறோம். இட்லி மட்டும் கொண்டுவந்து வைக்கிறார். குடிக்க தண்ணீர் கேட்கிறோம். அதற்கு பில் பத்து ரூபாய் என்கிறார். சட்னி கேட்கிறோம் அதற்கு 20 ருபாய்.. சாம்பார் 20 ரூபாய்.. உட்காரும் நாற்காலிக்கு 10 ரூபாய். மின்விசிறி சுழல 10 ரூபாய். கைகழுவ ஐந்து ரூபாய். இப்படி பில் போட்டால், நாம் மகிழ்வோமா இல்லை, இல்லை கல்லாவில் இருக்கும் முதலாளியை இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்துவோமா?

இம்மாதிரியான ஒரு பணம் பிடுங்கும் திட்டத்தைத்தான்  நம் மீது திணிக்கப் பார்க்கிறது தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையமும் (TRAI- Telecom Regulatory authority of Inida) தனியார் செல்பேசி நிறுவணங்களும். TRAI  என்பது இந்தியாவில் தொலைதொடர்பு சார்ந்த நிறுவணங்களை, அதன் செயல்முறைகளை, கட்டணங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு அரசு நிறுவணம்.

நடப்பது என்ன? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்க வேண்டும்.

நாம் அனைவரும் இன்டர்னெட் உபயோகிக்கிறோம். இன்டர்னெட் கிடைத்தவுடன், அதன் மேல் பல்வேறு ‘ஆப்ஸ்’ களைப் பயன் படுத்துகிறோம். உதாரணம் முகநூல், வைபர், வாட்ஸப், ஃப்ளிப்கார்ட் போன்றவை. தற்போதைக்கு இந்தப் பயன்பாடுகளுக்கென தனியாக பணம் ஏதும் செலுத்துவதில்லை. இந்த வகையான செயலிகளுக்கும் தனியாக, இன்டர்னெட் கட்டணத்தைத் தவிர மேற்படிக் கட்டணம் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன ஏர்டெல்-வோடாஃபோன் போன்ற தனியார் நிறுவனங்கள். 

புரிவதற்காக சிறிய உதாரணத்தை கீழே கொடுக்கிறேன். அப்போது சட்டென பிடித்துக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் இன்டர்னெட் கட்டண பில் இப்படி இருக்கும்.

Internet Package for 1 GB     : 250.00
Messaging
1.       Vibre                      :                   20.00
2.       Whatsapp               :                   20.00
3.       Chatfree                 :                    free
4.       Skype                      :                   20.00
Browsing:
1.       Google                    :                  20.00
2.       Yahoo                      :                  20.00
3.       Bing                        :                  20.00
Social Networking
1.       Facebook               :                 50.00
2.       Twitter                    :                 50.00
3.       Google+                  :                 50.00
Enertainment
1.       Youtube               :                 50.00
2.       Dailymotion        :                 50.00
Mail
1.       Google                 :                 20.00
2.       Yahoo                   :                 20.00
News:
1.       NDTV                    :                 20.00
2.       CNN                       :                 20.00

Total Bill                       :               700.00

(இது உதாரணத்திற்காகத்தான். இந்த நிறுவனங்கள் மட்டுமே அல்லது இந்த நிறுவணங்கள் பணம் கேட்கின்றன என்று பொருளல்ல)

புரிகிறதா? இதுவரை அடிப்படைக் கட்டணத்தில், அதாவது ரூபாய் 250/-ல் பெற்றுவந்த வசதிகளை ஒவ்வொரு செயலிக்கும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும். இதற்குத்தான் தனியார் நிறுவனங்கள் TRAI யுடன்  கூட்டு சேர்ந்து கொண்டு முயலுகிறது.

தனியார் நிறுவனங்கள், மேற்சொன்ன விதமாக தனது வாடிக்கையாளர் களிடமிருந்து பணம் வசூலிக்க (கொள்ளையடிக்க?) TRAI –ஐ அணுக, TRAI –இது குறித்து பொதுமக்களின் கருத்தை வேண்டியுள்ளது. ஏப்ரல் 24-க்குள் மக்கள் தங்கள்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். டிராய் மே மாதத்தில் முடிவெடுக்கும். தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் முடிவெடுத்தால்,  பிறகு ஐ.எஸ்.பி (Internet Service Provider) அனுமதிக்கும் / பணம் செலுத்தும் ஆப்ஸ்களை மட்டுமே உங்களால் இயக்க முடியும்.

இது தவறு, அடிப்படை கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனபதை Net Neutrality என்று சொல்கிறோம். அதாவது ரூ. 250/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்கிறோம்.

அதாவது எந்த தளத்திற்கும் / செயலிக்கும் (App)  கூடுதல் கட்டணம் இல்லாமல் அனைத்தும் ஒரே கட்டணமாகத் தற்போது நீங்கள் கொடுத்துக்கொண்டு இருப்பது போல, 1 GB டேட்டா ரூ. 250 க்கு வாங்கினால் அதை   நம் விருப்பம் போல எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இது தான் Net Neutrality .

திடீரென ஏன் தனியார் நிறுவனங்கள் இது போலச் செய்ய முயற்சிக்கின்றன?

அவர்களுக்கு வருமான இழப்பு வருகிறது எனச் சொல்கிறார்கள்.  உதாரணமாக இபொழுது, SMS க்கு பதிலாக வாட்ஸப்பை பயன்படுத்துகிறோம். இன்டர்னேஷனல் காலுக்கு பதிலாக ஸ்கைப் பயன்படுத்துகிறோம். இதனால் அவர்களுக்கு, வாய்ஸ்கால் மற்றும் செய்தி பரிமாற்றம் மூலம் பெற்றுவந்த வருமாணம் குறைகிறது. 

அதேசமயம், டேட்டா மூலம் வருமாணம் அதிகரிக்கிறது. ஆனால் தீராத லாபப் பசி கொண்ட தனியார்களுக்கு இந்த வருமாணம் போதாது.. இன்னும்..இன்னும் வேண்டும் என்கின்றன.

தற்பொழுது, இன்டர்னெட் தவிர்க்க முடியாததாக மாறி, பயனாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. SMS பயன்பாடு  நின்றுபோய், வாட்ஸப் போன்ற செயலிகள் இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. இதனால், குறுந்தகவல் மூலம் பெற்ற ஏகப்பட்ட வருமாணம் குறைந்தது. (ஒரு SMS-க்கு ஒரு ரூபாய் என்றால் அவர்கள் அடித்த லாபத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்)
ஃபேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்தியாவில் WhatsApp மேலும் பிரபலமாகத் துவங்கியது. இதில் எத்தனை குறுந்தகவல் வேண்டும் என்றாலும் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பலாம்.
அதோடு குழு முறையில் இணைந்து குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது  உட்பட பல்வேறு வசதிகளை இந்தச் செயலிகள் கொண்டு இருக்கின்றன. இதனாலேயே, உபயோகிப்பாளர்கள் அதிகக் கட்டணம் கொடுத்து SMS – Multimedia செய்தி பரிமாற்றங்களை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். இந்த மாற்றம் குறுந்தகவல் மூலம் லாபம் பெற்றுக் கொண்டு இருந்த மொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அடியானது.
இன்டர்னெட் அழைப்புகள்:
வெளி நாடு, மாநிலங்களில் உள்ள உற்றார் உறவினர்களுடன் இணையம் மூலம் Viber Skype போன்ற செயலிகள் மூலம் பேசத் துவங்கினார்கள். இதனால் மொபைல் நிறுவனங்கள் அலறுகின்றன. விரைவில் உள்ளூர் அழைப்புகளுக்கும் மக்கள் இணையத்திலேயே அழைக்கத் துவங்கி விடுவார்கள்.
இதனாலேயே கூடுதல் கட்டணம் விதிக்க TRAI யை தனியார் நிறுவனங்கள்  நெருக்குதல் கொடுக்கின்றன.

தனியார் நிறுவனங்களுக்கு உண்மையிலே, SMS and Voice Call வருமாண இழப்பு உண்டா என்றால், ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதை ஈடுகட்டும் வகையில் மொபைல் மூலம் இணையத்தை அணுகுவோர் பன்மடங்கு அதிகரிப்பதால், வருமாணம தொடர்ந்து கிடைத்துக் கொண்டும் அதிகரித்துக் கொண்டும் தான் இருக்கிறது.

அவர்கள் பெருமுதலீடு செய்து நிர்மாணித்த டவர்கள் இணையத்திற்கு மட்டுமே அதிகம் பயன்படும். கொழுத்த லாபம் பார்த்த இவர்களுக்கு இது போதவில்லை. அப்படியே வருமாணம் குறைகிறதென்றால் இணையக் கட்டணத்தை உயர்த்திக் கேட்கலாமே தவிர, தற்போது விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறினால் அதிகக் கட்டணத்தை செலுத்தியும்  பல இணையத் தளங்களைப் பார்க்க முடியாத நிலை நமக்கு ஏற்படும்.

Airtel Zero

ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் ஜீரோ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது என்னவென்றால் இந்த வசதியில் இணையும் தளங்களை இலவசமாகப் பார்க்கலாம் என்பது.

ஒரு நிறுவணம், ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டால், அந்த நிறுவனத்தின் தளத்தை ஏர்டெல் பயன்படுத்தும் அனைவரும் இலவசமாகப் பார்க்க முடியும். தற்போது Flipkart நிறுவனம் இதில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இன்று அதுவும் வெளியேறி விட்டது.  இலவசமாகக் கிடைத்தால் நல்லது தானே..! அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறீர்களா?
இந்த முறை பெருமுதாளிகளின் சதிச் செயல். இதன் மூலம் பெறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை விழுங்கிவிடும். உதாரணத்திற்கு இது போலப் பணக்காரத் தளங்கள் இணைந்தால், இவை மட்டுமே இணையம் என்பது போல நிலையாகி, கட்டணம் கொடுத்து இணைய முடியாத பல தகுதியான நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். சக்தி வாய்ந்த ஒருதலைப் பட்சமான செய்தி நிறுவனம் இது போலச் சேவையைக் கொடுத்தால், இதை மட்டும் படிப்பவர்கள் இந்த நிறுவனம் கூறும் செய்தியை மட்டும் தான் நம்பி இருப்பார்கள். தமிழகம் மழுவதும் ஜெயா செய்தி மட்டுமே அல்லது கலைஞர் செய்தி மட்டுமே என்றால்  எப்படி இருக்கும்? இவர்கள் கூறுவதே செய்தி என்ற நிலையாகுமல்லவா?. இது இணையம் என்ற அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் செயல். இலவசம் என்பது போலத் தான் தோன்றும் ஆனால், இது பரவலானால் பணம் படைத்தவன் வகுத்ததே சட்டம் என்பது போல நிலையாகி விடும்.
எனவே தான் Net Neutrality என்பதை அனைவரும் வலியுறுத்துகிறார்கள்.
TRAI தற்போது என்ன செய்கிறது? இதன் ஆபத்து இன்னும் பலருக்கு புரியவில்லை. திடீரென நாளைமுதல் முகனூலுக்கு-வாட்ஸப்புக்கு தனிக் கட்டணம் என்றால் தான், பலர் அலறி அடித்துக்கொண்டு ஓடிவரு வார்கள்.

வட இந்தியாவில் நெட் உபயோகிப்பாளர்கள், இந்த  ஆபத்து குறித்து அறிந்து இருக்கிறார்கள். மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். 

தமிழர்களின் விசித்திரமான, விந்தையான நிலையினால் இது குறித்த பரவலான செய்திகளைக் காண முடியவில்லை.  நமக்கென சில பிரத்யேக ப்ரையாரிடிகள் வைத்திருக்கிறோமே? என்வேதான் வடவர் எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்கிறேன்..

அமெரிக்காவில்( like AT&T, Comcast and Verizon to discriminate online and create pay-to-play ) இது போல கொண்டு வரத் திட்டமிட்டார்கள் ஆனால், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. பிரேசில், சிலி மற்றும் நெதர்லாந்து மக்களெல்லாம் போராடி வென்றிருக்கிறார்கள்.

நமக்கு என்ன ஆகும் என்பது நம் அனைவர் முயற்சிகளில் தான் உள்ளது.
நாம் செய்ய வேண்டியது இரண்டு விசயம். இதை எதிர்த்துப்  TRAI க்கு மனு மற்றும் மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தான்.

இதை எப்படிச் செய்வது? இணையம் பயன்படுத்தும் பலர் இவற்றை நாம் எளிமையாகச் செய்ய நமக்கு வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதைச் செயல் படுத்த அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. கீழே கொடுக்கப்பட்ட லிங்குகளை  அணுகவும். 


சரி.. இவ்விதம் நமது எதிர்ப்பை தெரிவித்து விட்டால், அனைத்தும் சுகமா?
தெரியாது. நாம் போராடத்தான் வேண்டும். அரசாங்கமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற பாமரத்தனத்தை விட்டொழிக்கவும். 

பார்லிமென்டரி ஜனனாயகத்தில்  எந்த அரசாக இருந்தாலும் காங்கிரஸோ-பி.ஜே.பி யோ, பெருமுதலாளிகளுக்கு சார்பாகத்தான் இருப்பார்கள். நாம்தான் நமது ஆடையை இருக்கப் பற்றிக் கொள்ள வேண்டும்.