Tuesday, April 21, 2015

ஏன் போராடுகிறார்கள்?



BSNL  நிறுவனத்தைச் சார்ந்த  அனைத்து ஊழியர்களும், நிர்வாகத்தினரில் பெரும்பகுதியினரும், இன்றும் நாளயும் (21 & 22/415) வேலை நிறுத்தம் செய்கின்றனர்.


மத்தியதர வர்க்கத்தினருக்கு, அதுவும் முகனூல் போராளிகளுக்கு வேலை நிறுத்தத்தை  கேலி செய்வதும், “மற்ற நாட்களில் எல்லாம் வேலை செய்து கிழித்துவிட்டார்களா?” என பொத்தாம் பொதுவாக பேசுவதும் வாடிக்கைதான். 

அதுவும் பொதுத்துறை நிறுவனங்களை கேலியும் கிண்டலும் செய்வதென்றால் குதூகலம். அதுதான் அவர்களுக்கு “ஸ்டைல்”
அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். அவர்களது கோரிக்கைப் பட்டியலில் சம்பள உயர்வு இல்லை.

பின் எதற்காக போராட்டம் என்கிறீர்களா? 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை காக்க வேண்டும்; நசிந்துவிட்ட நிறுவனமாக மாற்றி, தனியாருக்கு விற்றுவிடும் அபாயத்தை தடுத்து நிறுத்துவதும் தான் பிரதான கோரிக்கை.

உங்களுக்குத் தெரியுமா?  செல்ஃபோன் சேவை துவங்கப் பட்ட பொழுது, BSNL நிறுவனத்திற்கு செல்ஃபோன் சேவை அளிக்க அனுமதி அளிக்கப் படவில்லை. காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? தனியார் பாக்கட்டுகளை நிரப்பத்தான். 

இந்த அனுமதி மறுப்பு ஆண்டுக் கணக்கில் தொடர்ந்தது. 

எல்லாவிதமான உட் கட்டமைப்புகளும் இருந்த அரசு நிறுவனத்திற்கு அனுமதி இல்லை. பின்னர் மன உறுதிமிக்க ஒரு அதிகாரியினால் அனுமதி வழங்கப் பட்டது.

இந்த நிறுவனம் களத்தில் இறங்குவதற்கு முன்னால், மற்றவர்கள் அனைவரும் நிலைபெற்று விட்டனர். அதுதானே அரசுக்கு வேண்டும்?

இவர்கள் சேவை அளிப்பதற்கு முன்னர், தனியார் நிறுவனங்கள் நிமிடத்திற்கு  பத்து ரூபாய்க்கு மேல், கட்டணம் வசூலித்து வந்தனர். கொள்ளை லாபம். ஒருவழியாக அரசு நிறுவனம் களத்தில் நுழைந்து ஒரு நிமிடத்திற்கு  ஒரு ரூபாய் மட்டுமே என தங்களது சேவையைத் துவங்கினர்.  அதன் பின் தான் மற்ற தனியார்கள் இறங்கி வந்தனர். இதை நாம் மறந்து விடக் கூடாது.

இத்துடன் விட்டனரா அரசுத்தரப்பினர்?  பி.எஸ்.என்.எல் தனது விரிவாக்கத்திற்கான தேவையான எக்யூப்மெண்களை வாங்குவதை தடை செய்ய / தாமிக்க வைக்க எந்தெந்த வகையிலெல்லாம் முடியுமோ அந்த வகையில் எல்லாம் முயன்றனர். 

பணம் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. டெண்டர்களை முடிவெடுப்பதில் குளறுபடி செய்தனர். யாரிடம் எக்யூப்மென்ட் வாங்குவது என்பதில் குளறுபடி செய்தனர்.  

இதனையும் தாண்டி, கிராமப் புறங்களில், தங்களது சேவையை இயன்ற அளவு விரிவு படுத்திக் கொடுத்தனர் BSNL நிறுவனத்தினர். கிராமப் புற சேவை என்பது, மிகுந்த பொருட் செலவு மிக்கது.  அற்பமான வருமாணமே கொடுக்கக் கூடியது. 

தனியார்கள் நகர்களில் தங்களது பாக்கட்களை நிறப்பிக் கொண்டிருக்கும் பொழுது, லாபம் அற்ற கிராமங்களிலும் சேவையை அளித்தனர் பி.எஸ்.என்.எல்.

தங்களது சேவையை தாங்களே புறக்கனிக்கும் விந்தையும் வினோதமும் இங்கேதான் நிகழும். மத்திய மானில அரசுகள் தங்கள் பயன்பாட்டிற்கு தனியார் சேவைகளை நாடி, அவர்களுடன் ‘அன்டர்ஸ்டேன்டிங்’ போடுவது வழக்கமாகி விட்டது. இது அடாத செயல் அல்லவா? 

அரசு அதிகாரிகள் ‘ஏர் இண்டியா’ வில்தான் பயணம் செய்ய வேண்டும் என ஆணையிட்டது போல, பி.எஸ்.என்.எல் சர்வீஸைத்தான் பயன் படுத்த வேண்டும் என ஆணையிட போராடுகிறார்கள் ஊழியர்கள்.

கிராமப் புறச் சேவைக்கான  நஷ்ட ஈட்டையும் அளிக்க மாட்டார்கள். 

அரசு நிறுவனங்களில் BSNL சேவைகளைப் பயன் படுத்த மாட்டார்கள். 

புதிய எக்யூப்மென்ட் வாங்குவதைத் தடுப்பார்கள் அல்லது வழங்க மாட்டார்கள். 

லைசன்ஸ் கட்டணத்தில் சலுகையும் கொடுக்க மாட்டார்கள். 

காலியாக உள்ள உயர்பதவிகளை நிரப்ப மாட்டார்கள் (டைரக்டர்கள் உட்பட). 

4ஜி சேவையை அளிக்க தேவையான அனுமதியை வழங்க தயக்கம் காட்டுவார்கள்.

பொதுத்துறை நிறுவனம் என்பது நாட்டின் முதுகெலும்பு அல்லவா? 

லாபம் மட்டுமே குறிக்கோளாய் அலையும் தனியார் அல்ல. 

அவற்றை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

தனியார் நிறுவனங்களே சிறந்த சேவை அளிப்பவை என்பது ஒரு மாயை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். 

உதாரணத்திற்கு ஒரு ஜி.பி டாட்டா தனியார்களில், ரூ 220/-க்கு மேல். BSNL –ல் 155 முதல் கிடைக்கும்.

கைகளையும்-கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளச் சொன்னால், ஜெயிப்பது எப்படி? ஆகவேதான் BSNL-ஐ காப்போம் என போராடுகிறார்கள்  இவர்கள்.

எல்லா நிறுவனங்களையும் போல, சில அக்கறையும்-பொறுப்பும் சரிவர இல்லாத ஆட்கள் இந்த நிறுவனத்திலும் இருப்பார்கள் தான். அவற்றை சரிசெய்ய முடியும். 

ஆனால் எல்லாவற்றையும் தனியாருக்கே விற்றுவிட்டால் அப்புறம் தனியார் வைத்ததே சட்டமாகிவிடும். அதற்காகவாவது பொதுத் துறை நிறுவங்களைக் காப்பாற்றியாக வேண்டும். அது பி.ஜே.பி யோ அல்லது காங்கிரஸோ,  வங்கிகள், இன்ஸூரன்ஸ் முதற்கொண்டு ரயில்வே உட்பட பொதுத் துறை நிறுவங்களை விற்பதும், நலைவடையச் செய்வதும்தான் அனைத்து அரசுகளின் கொள்கையாகவே-நடைமுறையாகவே இருக்கிறது.  

அரசியல் ரீதியாக இதனைப் புரிந்து கொண்டால்தான் எத்தகையை ஆபத்து காத்திருக்கிறது என்பது விளங்கும்.
அவர்களது போராட்டம் வெல்லட்டும்.  வாழ்த்துவோம்.

4 comments:

  1. BSNL provides best possible service given the restraint they have from govt. I also have a land line for 35 years. Also my cell connections are BSNL only.

    ReplyDelete
  2. 2001 - ல் முரசொலி மாறன் வர்த்தக அமைச்சராக
    ஜி-7 தோஹா கூட்டத்தில் பங்கேற்றபோது
    அறிமுகமான புருனே மன்னரின் அன்பளிப்பாக
    கிடைத்த சாட்லைட் மூலம் சன் டீவியை வளர்த்தார்

    தயாநிதி தொலைதொடர்பு அமைச்சகத்தை கேட்டு வாங்கி
    தூர்தர்ஷனையும், தொலை தொடர்பு துறையையும்
    அழைத்து, சன் முழுமத்தை வளர்த்தார்.. (சிபிஐ -வழக்கு)
    இவர்களுக்கு ஒட்டு போட்டு அரியணை ஏற்றியது
    நாம் தான் - இந்த அரசு தொழைளார்களும் சேர்ந்து தான்
    (செய்த பாவம் பின்னல் வாலை ஆட்டிக்கொண்டே வருகிறது)

    ReplyDelete
  3. நம் கண்முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் BSNL. இதில் காங்கிரஸ் , பிஜேபி இருவருமே கூட்டாளிகள். அதுவும் காங்கிரஸ் கொஞ்சம் அதிகமாகவே.. திமுகவின் பங்கும் இதில் அதிகம். அவர்கள்தானே தொலை தொடர்பு மந்திரியாக அதிக காலம் இருந்தவர்கள் (கடந்த பத்து வருடங்களில்).

    இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமையாக சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete