நாம் ஹோட்டலுக்குள் செல்கிறோம். பேரர், என்ன வேண்டும் எனக் கேட்டதும் இட்லி என்கிறோம். இட்லி மட்டும்
கொண்டுவந்து வைக்கிறார். குடிக்க தண்ணீர் கேட்கிறோம். அதற்கு பில் பத்து ரூபாய்
என்கிறார். சட்னி கேட்கிறோம் அதற்கு 20 ருபாய்.. சாம்பார் 20 ரூபாய்.. உட்காரும்
நாற்காலிக்கு 10 ரூபாய். மின்விசிறி சுழல 10 ரூபாய். கைகழுவ ஐந்து ரூபாய். இப்படி
பில் போட்டால், நாம்
மகிழ்வோமா இல்லை, இல்லை கல்லாவில் இருக்கும் முதலாளியை இழுத்துப் போட்டு நாலு
சாத்து சாத்துவோமா?
இம்மாதிரியான ஒரு பணம்
பிடுங்கும் திட்டத்தைத்தான் நம் மீது திணிக்கப்
பார்க்கிறது தொலைதொடர்பு
ஒழுங்குமுறை ஆனையமும் (TRAI- Telecom Regulatory authority of Inida)
தனியார் செல்பேசி நிறுவணங்களும். TRAI என்பது இந்தியாவில் தொலைதொடர்பு சார்ந்த
நிறுவணங்களை, அதன் செயல்முறைகளை, கட்டணங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்
ஒரு அரசு நிறுவணம்.
நடப்பது என்ன? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்க வேண்டும்.
நாம் அனைவரும் இன்டர்னெட் உபயோகிக்கிறோம். இன்டர்னெட் கிடைத்தவுடன், அதன் மேல் பல்வேறு
‘ஆப்ஸ்’ களைப் பயன் படுத்துகிறோம். உதாரணம் முகநூல், வைபர்,
வாட்ஸப், ஃப்ளிப்கார்ட்
போன்றவை. தற்போதைக்கு இந்தப்
பயன்பாடுகளுக்கென தனியாக பணம் ஏதும் செலுத்துவதில்லை. இந்த வகையான செயலிகளுக்கும் தனியாக, இன்டர்னெட் கட்டணத்தைத்
தவிர மேற்படிக் கட்டணம் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன ஏர்டெல்-வோடாஃபோன் போன்ற தனியார்
நிறுவனங்கள்.
புரிவதற்காக சிறிய உதாரணத்தை கீழே கொடுக்கிறேன். அப்போது சட்டென
பிடித்துக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் இன்டர்னெட் கட்டண பில் இப்படி இருக்கும்.
Internet Package for 1 GB : 250.00
Messaging
1. Vibre : 20.00
2. Whatsapp : 20.00
3. Chatfree : free
4. Skype : 20.00
Browsing:
1. Google : 20.00
2. Yahoo : 20.00
3. Bing : 20.00
Social Networking
1. Facebook : 50.00
2. Twitter : 50.00
3. Google+ : 50.00
Enertainment
1. Youtube : 50.00
2. Dailymotion : 50.00
Mail
1. Google : 20.00
2. Yahoo : 20.00
News:
1. NDTV : 20.00
2. CNN : 20.00
Total Bill : 700.00
(இது உதாரணத்திற்காகத்தான்.
இந்த நிறுவனங்கள் மட்டுமே அல்லது இந்த நிறுவணங்கள் பணம் கேட்கின்றன என்று பொருளல்ல)
புரிகிறதா? இதுவரை அடிப்படைக் கட்டணத்தில், அதாவது ரூபாய் 250/-ல்
பெற்றுவந்த வசதிகளை ஒவ்வொரு செயலிக்கும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும்.
இதற்குத்தான் தனியார் நிறுவனங்கள் TRAI யுடன் கூட்டு
சேர்ந்து கொண்டு முயலுகிறது.
தனியார் நிறுவனங்கள், மேற்சொன்ன விதமாக தனது வாடிக்கையாளர்
களிடமிருந்து பணம் வசூலிக்க (கொள்ளையடிக்க?) TRAI –ஐ அணுக,
TRAI –இது குறித்து பொதுமக்களின் கருத்தை வேண்டியுள்ளது. ஏப்ரல் 24-க்குள்
மக்கள் தங்கள்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். டிராய் மே மாதத்தில்
முடிவெடுக்கும். தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் முடிவெடுத்தால், பிறகு ஐ.எஸ்.பி (Internet Service
Provider) அனுமதிக்கும் / பணம் செலுத்தும் ஆப்ஸ்களை மட்டுமே உங்களால் இயக்க
முடியும்.
இது தவறு, அடிப்படை கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனபதை Net Neutrality என்று சொல்கிறோம். அதாவது ரூ. 250/-
மட்டுமே வசூலிக்க வேண்டும் என்கிறோம்.
அதாவது எந்த தளத்திற்கும் / செயலிக்கும் (App) கூடுதல் கட்டணம் இல்லாமல் அனைத்தும் ஒரே கட்டணமாகத் தற்போது
நீங்கள் கொடுத்துக்கொண்டு இருப்பது போல, 1 GB டேட்டா
ரூ. 250 க்கு வாங்கினால் அதை நம் விருப்பம் போல எதற்கு வேண்டும் என்றாலும்
பயன்படுத்தலாம். இது தான் Net Neutrality .
திடீரென ஏன் தனியார் நிறுவனங்கள் இது போலச் செய்ய முயற்சிக்கின்றன?
அவர்களுக்கு வருமான இழப்பு வருகிறது எனச் சொல்கிறார்கள். உதாரணமாக இபொழுது, SMS க்கு பதிலாக வாட்ஸப்பை பயன்படுத்துகிறோம்.
இன்டர்னேஷனல் காலுக்கு பதிலாக ஸ்கைப் பயன்படுத்துகிறோம். இதனால் அவர்களுக்கு,
வாய்ஸ்கால் மற்றும் செய்தி பரிமாற்றம் மூலம் பெற்றுவந்த வருமாணம் குறைகிறது.
அதேசமயம், டேட்டா மூலம் வருமாணம் அதிகரிக்கிறது. ஆனால் தீராத லாபப்
பசி கொண்ட தனியார்களுக்கு இந்த வருமாணம் போதாது.. இன்னும்..இன்னும் வேண்டும்
என்கின்றன.
தற்பொழுது, இன்டர்னெட் தவிர்க்க
முடியாததாக மாறி, பயனாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. SMS பயன்பாடு
நின்றுபோய், வாட்ஸப் போன்ற செயலிகள் இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன.
இதனால், குறுந்தகவல் மூலம் பெற்ற ஏகப்பட்ட வருமாணம் குறைந்தது. (ஒரு SMS-க்கு ஒரு ரூபாய் என்றால் அவர்கள் அடித்த லாபத்தைப் பார்த்துக்
கொள்ளுங்கள்)
ஃபேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்தியாவில் WhatsApp
மேலும் பிரபலமாகத் துவங்கியது. இதில் எத்தனை குறுந்தகவல் வேண்டும்
என்றாலும் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பலாம்.
அதோடு குழு முறையில்
இணைந்து குறுந்தகவல் அனுப்புவது, படங்கள்
அனுப்புவது உட்பட பல்வேறு வசதிகளை இந்தச் செயலிகள் கொண்டு
இருக்கின்றன. இதனாலேயே, உபயோகிப்பாளர்கள் அதிகக் கட்டணம்
கொடுத்து SMS – Multimedia செய்தி பரிமாற்றங்களை கிட்டத்தட்ட
நிறுத்தி விட்டார்கள். இந்த மாற்றம் குறுந்தகவல் மூலம் லாபம் பெற்றுக் கொண்டு
இருந்த மொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அடியானது.
இன்டர்னெட் அழைப்புகள்:
வெளி நாடு, மாநிலங்களில் உள்ள உற்றார் உறவினர்களுடன் இணையம்
மூலம் Viber Skype போன்ற செயலிகள் மூலம் பேசத் துவங்கினார்கள். இதனால் மொபைல் நிறுவனங்கள் அலறுகின்றன.
விரைவில் உள்ளூர் அழைப்புகளுக்கும் மக்கள் இணையத்திலேயே அழைக்கத் துவங்கி
விடுவார்கள்.
இதனாலேயே கூடுதல் கட்டணம் விதிக்க TRAI யை தனியார் நிறுவனங்கள் நெருக்குதல் கொடுக்கின்றன.
தனியார் நிறுவனங்களுக்கு உண்மையிலே, SMS and Voice Call வருமாண இழப்பு உண்டா என்றால், ஆம்
என்றுதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதை ஈடுகட்டும் வகையில் மொபைல் மூலம் இணையத்தை
அணுகுவோர் பன்மடங்கு அதிகரிப்பதால், வருமாணம தொடர்ந்து கிடைத்துக் கொண்டும் அதிகரித்துக்
கொண்டும் தான் இருக்கிறது.
அவர்கள் பெருமுதலீடு செய்து நிர்மாணித்த டவர்கள் இணையத்திற்கு மட்டுமே
அதிகம் பயன்படும். கொழுத்த லாபம் பார்த்த இவர்களுக்கு இது போதவில்லை. அப்படியே
வருமாணம் குறைகிறதென்றால் இணையக் கட்டணத்தை
உயர்த்திக் கேட்கலாமே தவிர, தற்போது விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறினால் அதிகக் கட்டணத்தை செலுத்தியும் பல
இணையத் தளங்களைப் பார்க்க முடியாத நிலை நமக்கு ஏற்படும்.
Airtel Zero
ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் ஜீரோ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது என்னவென்றால்
இந்த வசதியில் இணையும் தளங்களை இலவசமாகப் பார்க்கலாம் என்பது.
ஒரு நிறுவணம், ஏர்டெல்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தி
விட்டால், அந்த நிறுவனத்தின் தளத்தை ஏர்டெல் பயன்படுத்தும் அனைவரும் இலவசமாகப் பார்க்க முடியும். தற்போது
Flipkart நிறுவனம் இதில் இணைந்து உள்ளதாக
அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இன்று அதுவும் வெளியேறி விட்டது. இலவசமாகக் கிடைத்தால் நல்லது தானே..! அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறீர்களா?
இந்த முறை பெருமுதாளிகளின்
சதிச் செயல். இதன் மூலம் பெறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை விழுங்கிவிடும். உதாரணத்திற்கு
இது போலப் பணக்காரத் தளங்கள் இணைந்தால், இவை மட்டுமே இணையம் என்பது போல
நிலையாகி, கட்டணம் கொடுத்து இணைய முடியாத பல தகுதியான
நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். சக்தி வாய்ந்த ஒருதலைப் பட்சமான
செய்தி நிறுவனம் இது போலச் சேவையைக் கொடுத்தால்,
இதை மட்டும் படிப்பவர்கள் இந்த நிறுவனம் கூறும் செய்தியை மட்டும்
தான் நம்பி இருப்பார்கள். தமிழகம் மழுவதும் ஜெயா செய்தி மட்டுமே அல்லது கலைஞர் செய்தி மட்டுமே என்றால் எப்படி இருக்கும்? இவர்கள் கூறுவதே செய்தி என்ற நிலையாகுமல்லவா?. இது இணையம் என்ற
அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் செயல். இலவசம் என்பது போலத் தான்
தோன்றும் ஆனால், இது பரவலானால் பணம் படைத்தவன் வகுத்ததே
சட்டம் என்பது போல நிலையாகி விடும்.
எனவே தான் Net Neutrality என்பதை அனைவரும்
வலியுறுத்துகிறார்கள்.
TRAI தற்போது என்ன செய்கிறது? இதன்
ஆபத்து இன்னும் பலருக்கு புரியவில்லை. திடீரென நாளைமுதல்
முகனூலுக்கு-வாட்ஸப்புக்கு தனிக் கட்டணம் என்றால் தான், பலர் அலறி அடித்துக்கொண்டு ஓடிவரு வார்கள்.
வட இந்தியாவில் நெட்
உபயோகிப்பாளர்கள், இந்த ஆபத்து குறித்து
அறிந்து இருக்கிறார்கள். மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.
தமிழர்களின் விசித்திரமான,
விந்தையான நிலையினால் இது குறித்த பரவலான செய்திகளைக் காண முடியவில்லை. நமக்கென சில பிரத்யேக ப்ரையாரிடிகள்
வைத்திருக்கிறோமே? என்வேதான் வடவர் எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது நாம்
மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்கிறேன்..
அமெரிக்காவில்( like AT&T, Comcast and Verizon to
discriminate online and create pay-to-play ) இது போல கொண்டு வரத்
திட்டமிட்டார்கள் ஆனால், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக
கைவிடப்பட்டது. பிரேசில், சிலி மற்றும் நெதர்லாந்து மக்களெல்லாம்
போராடி வென்றிருக்கிறார்கள்.
நமக்கு என்ன ஆகும்
என்பது நம் அனைவர் முயற்சிகளில் தான் உள்ளது.
நாம் செய்ய வேண்டியது இரண்டு
விசயம். இதை எதிர்த்துப் TRAI க்கு மனு மற்றும் மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தான்.
இதை எப்படிச் செய்வது? இணையம் பயன்படுத்தும்
பலர் இவற்றை நாம் எளிமையாகச் செய்ய நமக்கு வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதைச் செயல் படுத்த அதிகபட்சம்
இரண்டு நிமிடங்கள் போதுமானது. கீழே கொடுக்கப்பட்ட லிங்குகளை அணுகவும்.
சரி.. இவ்விதம் நமது
எதிர்ப்பை தெரிவித்து விட்டால், அனைத்தும் சுகமா?
தெரியாது. நாம் போராடத்தான்
வேண்டும். அரசாங்கமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற பாமரத்தனத்தை விட்டொழிக்கவும்.
பார்லிமென்டரி ஜனனாயகத்தில் எந்த அரசாக
இருந்தாலும் காங்கிரஸோ-பி.ஜே.பி யோ, பெருமுதலாளிகளுக்கு சார்பாகத்தான்
இருப்பார்கள். நாம்தான் நமது ஆடையை இருக்கப் பற்றிக் கொள்ள வேண்டும்.
Nice Article! I have sent the email.
ReplyDeleteDetailed blog ... Super...After reading this news only I know what the issue regarding net neutrality... - chudachuda.com
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!
ReplyDelete