ஓமலூர் அருகே உள்ள தலம், ‘சின்னத் திருப்பதி’.
சேலத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. முலவர் ப்ரஸன்ன
வெங்கட்ரமணர். ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
மூலவர் ஸ்வய்ம்பூ என்கிறார்கள். நின்ற நிலைப் பெருமாள்.
நாங்கள் சென்ற சமயம் மதியம் மணி இரண்டு. நடை சாத்தியிருந்தது. அழகான
கோயில், ஒரு கரட்டின் (சிறிய குன்று) மேல் அமைந்துள்ளது.
இங்குள்ள சுற்றுவட்டார
மக்கள் தங்களது எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் அவற்றை வெங்கட்ரமணரிடம் சமர்ப்பித்து,
அனுமதி பெற்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களாம். இதற்காகவே சிறு
பொட்டலங்களில் துளசி-குங்குமத்தை வைத்திருக்கிறார்கள்.
பட்டாச்சார்யார் மூன்று மணிக்கு நடை திறந்துவிட்டார். மூலவர் ப்ரஸன்ன
வெங்கட்ரமணர், சற்றே தலை சாய்த்த வண்ணம் இருக்கிறார். அழகான திருமேனி! பெருமாள் அலங்காரப்
பிரியாரான அல்லவா? இங்கும் அப்படியே!
உற்சவர் மின்னுகிறார்.
பட்டார் நிதானமாக அர்ச்சனை
செய்வித்தார்.
தல வரலாறு: திருப்பதி வெங்கடேசப் பெருமாள் குளிப்பதற்காக வெளியே
வந்தாராம். அவருக்கு உதவி ஸ்ரீதேவி அங்கே இல்லை. எனவே அரப்புப் பொடியினைத்தேடி
வந்தவர் இந்த குன்றில் அரப்புச் செடிகளைக் கண்டதும் இங்கேயே தங்கிவிட்டாராம். இதனை
ஸ்தல புராணமாகச் சொல்லுகிறார்கள்.
தாயார் சன்னதி தனியாக இருக்கிறது. அவரும் அலங்காரப் ப்ரியை போலும்.
அழகு!
நாங்கள் சென்ற வேளையில், அங்கே சரியான உணவு கிடைக்க வில்லை.
ஒரு
இளனீரைக் குடித்துவிட்டு, பசியை மறந்து தரிசனம் செய்யக் காத்திருந்தோம். அங்கே, எங்களைப் போலவே, தரிசனத்திற்கு காத்திருந்த ஒரு பக்த குடும்பம் ஒன்று, கோயிலிலேயே, அன்புடன் சுவையான தேனீர் தயாரித்து வழங்கினார்கள்.
கனிவான
வார்த்தைகளுடன்.
அட.. இன்னமும் சிலரிடம் அன்பும் விருந்தோம்பலும் இருக்கத்தான்
செய்கிறது.
No comments:
Post a Comment