Thursday, April 19, 2012

கேன்ஸரின் அறிகுறிகள்:

அருமைத் தோழர்களே!

உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு கீழ்க்கண்ட சிம்டம்ஸ் இருப்பின் உடனடியாக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், கேன்ஸர் எவ்வளவு ஆரம்பத்தில் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு எளிதில் குணப்படுத்தக் கூடியது. பெண்கள் பலர் இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்துகிறார்கள். பெரும்பாலும், காலம் தவறித்தான் கேன்ஸர் நோய் இருப்பதைக் கண்டறிகிறோம். சிம்டம்களை அலட்சியப்படுத்தாதீர்கள்! பின்பு என் போல வேதனைப் படாதீர்கள்!

1.       காரணமற்ற எடை இழப்பு: எடை இழப்பு என்பது பெண்களுக்கு இனிப்பான செய்திதான். ஆனால், திட்டமிடாத எடை இழப்பு (மாதத்திற்கு 4 அல்லது 5 கிலோ) கவணத்தில் கொள்ளப்பட வேண்டியது.

2.       அடிவயிறு காரணமற்று பருப்பது / வலிப்பது / இறுக்கமாக இருப்பது. இது ஓவரியன் கேன்சராக இருக்க்க் கூடும்.

3.       மார்பக அமைப்பில் மாற்றம். மார்பகங்களில் சிகப்பு திட்டு இருந்தாலோ, ஏதேனும் கட்டி போல தென்பட்டாலோ, மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்கள் எப்படி தாங்களே சுய சோதனை செய்து கொள்ளலாம் என்ற தகவல் பரவலாக வலையில் கிடைக்கிறது.

4.       பீரிடியட் களுக்கிடயே, அசாதாரணமான உதிரப்போக்கு மற்றும் மெனோபாஸுக்குப் பின் சில சமயங்களில் உதிரப்போக்கு. மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் மகளிர், இது சாதாரணமானதுதான் என எண்ணுவார்கள். உண்மை அப்படியில்லை! இதை கைனகாலிஜிக் ஆங்காலஜிஸ்ட் உறுதி செய்யட்டும்.

5.       சரும நிறம் மாற்றம். சருமம் திட்டாக நிறம் மாறினாலோ (மச்சம் போல)  அல்லது இரத்தப் போக்கு இருந்தாலோ, மருத்துவரை அணுகுங்கள்.

6.       விழுங்குவதில் சிரமம். இது அலட்சியப்படுத்தக்கூடிய விஷயம் இல்லை. நோட் கேன்ஸராக இருக்கக் கூடும்.

7.       அஜீரணம் / பசியின்மை. காரணமின்றி இவை இருப்பின் செக் செய்து கொள்ளுங்கள்.

8.       வாயினுள் ஏதாவது வெள்ளைத் திட்டு இருந்தாலும் சந்தேகியுங்கள்.

9.       வலி. காரணம் கணடறியப்படாத வலி எதுவாக இருப்பினும் அது தீர ஆராயப்பட வேண்டியது.

10.   நெறிக்கட்டிகளில் வீக்கம் / மாற்றம். (Lymph Nodes) லிம்ப் நோட்களில் வீக்கமோ இருந்தால், குறிப்பாக கழுத்து / அக்குள் / மார்பகம் எங்கே இருந்தாலும் அது கவலைக்குறியது.

11.   ஜுரம் / இருமல்.  விளக்கம் அடிக்கமுடியாத ஜூரம் மற்றும் இருமல் தொடர்ந்து இருந்தால் அதுவும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டியதே.

12.   காரணமற்ற களைப்பு / மலச்சிக்கல். இவைகளையும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மேற் சொன்ன சிம்டங்கள் இருந்தால், அது புற்று நோயாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் இவை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கக் கூடும். காலத்தே கவணித்து சிகிச்சையளித்தால், நோய் எளிதில் குணமாகக் கூடுமல்லவா?


Read this artilce also. It is more informative.CLICK HERE

(செய்தி மூலம்: வெப் எம்.டி) 

6 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு..!!

  ReplyDelete
 2. ஹலோ
  இந்த ஜப்பான் இருந்து யோஷினோ உள்ளது.
  ஆண்டுகள் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றி நான் ஆராய்ச்சி.
  நான், உன் மொழி புரியவில்லை
  ஆனால் நான் உங்கள் வலைத்தளம் சூழ்நிலையை நன்றாக உணர்கிறேன்.
  நான், மீண்டும் பார்க்க நன்றி மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 3. -உபயோகமான குறிப்புகள்.
  -எங்கள் ப்ளாக்கிலும் கேன்சர் பற்றி முன்பு இரண்டு பதிவுகள் எழுதியுள்ளோம்.
  -வீடு திரும்பல் மோகன் குமார் பதிவில் சுட்டி பிடித்து இங்கு வந்தேன்.

  ReplyDelete
 4. அருமையான எச்சரிக்கைப் பதிவு. நன்றி சார்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  திரு மோகன் குமார் பதிவில் உங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. Good . It is all usefull hints. Beyond this cancer may come .

  ReplyDelete