Wednesday, March 2, 2011

TELECOMMUNICATION COMPANIES


இந்தியாவில் மொபைல் போன் நிறுவனங்கள் குறைந்தபட்சமாக எவ்வளவு 
வருமானம் பெறமுடியும்?
TRAI  கணக்குப்படி 75 கோடி இணைப்புகள் 
உள்ளன.  ஒருவர் நாள் ஒன்றுக்கு 15 நிமிடம்
OG கால் பேசுகிறார் என வைத்துக் 
கொள்வோம். அல்ப கணக்காக வைத்தாலும் 
 1,62,000 கோடி வருமாணம் வாய்ஸ் 
காலிலேயே வந்துவிடும். இது தவிர 
ஐஎஸ்டி,டேட்டா வருமானம் தனி.  
முக்கியமாக இந்த பாட்டு பிடித்தால் "ஸ்டாரை" அழுத்தும் வகையில் லவட்டும் வருமானத்திற்கு யாரும் கணக்கு சொல்வதில்லை.  ஆக கூடி 2,00,000 கோடி ரூபாய்களை தொலை பேசி நிறுவனங்களுக்கு, நமது பொதுஜனம், மொய் எழுதி விடுகின்றனர்.


இந்தியாவின் பெரிய நிறுவனம் பார்த்தி ஏர்டெல். இவர்களது 2009-10 
ஆண்டுக்கான அதன் மொத்த வருமானம்  ரூ. 41,829 கோடி. இதில் 
அனைத்துச் செலவுகளும் போக, வரி கட்டியது போகக் கிடைத்த லாபம்
ரூ. 9,163 கோடி.  இந்த செயல்திறன் மிக்க பார்த்தியிடம் கிட்டத்தட்ட 25% 
மார்க்கெட் ஷேர் உள்ளது.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை எடுத்துக்கொண்டால் மொத்த 
வருமானம்: 12,511.72 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம்? வெறும் 
478.93 கோடி ரூபாய்தான். இதுவே ஓராண்டுக்கு முன்பு (2008-09) 4,802 கோடி 
ரூபாயாக இருந்தது.


ஐடியா செல்லுலார் 2009-10 ஆண்டின் மொத்த வருமானம் 11,896 கோடி 
ரூபாய். வரிக்குப் பிறகான லாபம் 1,054 கோடி ரூபாய்.


வோடஃபோன் நிறுவனத்தின் தாய் கம்பெனி பிரிட்டனில் உள்ளது. அதன் 
ஆன்னுவல் ரிப்போர்ட்டில் தேடிப் பார்த்ததில் 2009-10 வருமானம் சுமார் 
22,500 கோடி.  நிகர நஷ்டம் 266 கோடி.


பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் என்ற அரசு அமைப்பைப் பார்ப்போம்.


எம்.டி.என்.எல் மொத்த வருமானம்: 3,781 கோடி; தொழிலிலிருந்து அடைந்த 
நஷ்டம்: 4694.5 கோடி ரூபாய்!  இந்தக் கொடுமையைப் பாருங்கள். 
எம்.டி.என்.எல்லின் மொத்த வருமானமே ரூ. 3,781 கோடி.
ஆனால் அது தன் ஊழியர்களுக்கு 2009-10-ம் ஆண்டில் கொடுத்த சம்பளம் 
மட்டும் 4,966.25 கோடி! இது தமாஷல்ல. ஆன்னுவல் ரிப்போர்ட்டில் 
பாருங்கள். புரியும். இந்த எம்.டி.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களில், 
மூன்றில் இரண்டு பங்கு உபரி என கூறி, இவர்களை VRS திட்டத்தில் 
அனுப்பி வைக்க சென்ற ஆண்டு அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு 
கடிதம் எழுதிவிட்டது. "விரைந்து" செயல் பட்டு,  எம்.டி.என்.எல்-
நிறுவனமே காணாமல் போனபின்,   மத்திய அரசு ஏதேனும் செய்யலாமா 
என யோசிப்பார்கள்.

சரி, பி.எஸ்.என்.எல் கதை என்ன? மொத்த வருமானம் 32,045 கோடி ரூபாய். 
நஷ்டம் 1,823 கோடி ரூபாய். இங்கேயும் உபரி ஆட்கள் உண்டு. இப்போது 
இந்த உபரிகளை என்ன செய்யலாம் என ஆராய கமிட்டி போட்டுள்ளார் 
களாம்.


இந்த நிறுவனத்தில் உபரி மட்டும் பிரச்ச்னை இல்லை.  திண்ணை தூங்கிகளும்,  "எவன் வீட்டு எழவோ-பாயப்போட்டு அழுவு" என்ற attitude-ம் தான்.  


உள்கதவு, வெளிக்கதவு, நடுக்கதவு, ரேழி,தோட்டம்,,திட்டம் போட, 
போட்டதிட்டத்திற்கு முட்டுக்கட்டை போட,விற்க- மார்க்கட் பண்ண 
(என்ன வித்தியாசமோ?), இன்னும் வாயில் நுழையாத பெயரில் எல்லாம் 
'ஆபீஸர்கள்'  எங்கெங்கினும் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.  வரவு செலவு 
பார்க்க 42 கணக்குப் பிள்ளைகள் வேறு தணியா அமர்ந்திருப்பார்கள். இது 
தவிர ஊழியர்கள் கணக்கு நூற்றுக்கணக்கில்.  அப்படி என்னதான் வேலை செய்வார்களோ தெரியாது.  போன மாட்டையும் தேட மாட்டார்கள். வந்த மாட்டையும் கட்ட மாட்டார்கள். இவர்களது வியாதிகள் சொல்லி மாளாது.

இவர்களது லேண்ட்லைன் ஃபால்ட் அகாமல் இருக்கவும், பிராட் பேணட் 
கேட்டு இரண்டு மாதத்திலாவது கிடைக்கவும் நீங்கள் இஷ்ட தெய்வத் 


தினை வேண்டிக் கொள்வது பலன் தரும்.  உபரி ரூபாய் 40,000  கோடியையும் கரைத்துக் 
குடித்துவிட்ட மஹானுபாவர்கள் ஆயிற்றே! 



அரசாங்கமே தனது நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வழிதேடும் விந்தையும் இங்கே பார்க்கலாம். 

மேலே சொன்ன கம்பெனிகள் கையில்தான் சுமார் 85% சந்தை உள்ளது.  சில்லுண்டிகம்பெனிகளை மறந்துவிட்டு மேலே சொன்னவற்றைப் பட்டியலிட்டால்:


நிறுவனம்  ......................வருமானம்...............லாபம்/நஷ்டம்


பார்த்தி ஏர்டெல்            41,829 .........................9163
வோடஃபோன்                 22,500 ......................... -266
ரிலையன்ஸ்                     12,512.........................  479
ஐடியா                                   11,896........................1,054
பி.எஸ்.என்.எல்                32,045..................... -1,823
எம்.டி.என்.எல்                    3,781 ....................  -4,695


ஒரு கால்குலேட்டர் கையில் இருந்தால்,  நோண்டி நோண்டி வித விதமான எண்ணிக்கைகளைக் கொண்டுவந்துவிடலாம். 


இப்போது நாம் அனைவரும் நிஜமாகவே கவலைப்படவேண்டிய 
விஷயம், எப்படி பி.எஸ்.என்.எல்லையும் எம்.டி.என்.எல்லையும் 
காப்பாற்றப் போகிறார்கள் என்பதுதான்! அவை அடையும் நஷ்டத்துக்கு 
இன்று யார் காரணம்?


அடுத்த மாசம் சம்பளம் இல்லை என்று சொல்லப்படும் வரை 'மழை' பெய்தாற்போலத்தான் இருக்கப் போகிறார்களா? 
இந்த லட்சனத்தில் 'சம்பள ஸ்கேல்'  உயர்த்திக் கொடுக்க போராட்டம் 
வேறு நடத்துவார்கள்!


 விரைவில் மற்றுமொரு ஏர் இந்தியாவையோ அல்லது ஐ.டி.ஐ யோ எதிர்பாருங்கள்!

3 comments:

  1. இந்த கணக்கு பிள்ளைகளின் கொட்டம் தாங்க முடியல சார். இந்த கம்பெனி உருப்பட ஒரே வழிதான் உண்டு. அது... தலப்பாகட்டு சிங்(கம்) காட்டும் வழி. .. வித்துடுங்க..சிம்பிள்.

    ReplyDelete
  2. Are the employees ready?? has there been any frank discussion of the company's status by the management with the employees? are the employees willing not to get bonus for a year? whatever I am reading here in my MBa is not happening.. Everyone is coming to office, doing his/her work and leaving at 5.15.. Very few of you are willing to work extra or take some initiative or work with the well being of the organisation in mind. Correct me if I am wrong

    ReplyDelete
  3. நன்பரே! BSNL 2000-OCT வரை மத்திய அரசு இலாக்காவக (DOT) இருந்தது. பின்னர் BSNL ஆக மாறியது. இங்கிருக்கும் மேனேஜர்களும், ஊழியர்களும் மத்திய அரசின் அலுவலர்களாக பழக்கப் பட்டவர்கள். அதாவது வேலை செய்தாலும்-செய்யாவிட்டாலும் சம்பளம் வாங்கியவர்கள். கார்ப்போரேஷன் ஆனபின் தனது சம்பளம் தங்களது உழைப்பில்தான் உள்ளது என்பதை இக்கணம் வரை உணராதவர்கள். இரண்டு வருடங்களாக போனஸ் இல்லை. இதற்காக யாரும் அலட்டிக் கொள்ளவும் இல்லை. அனைவரும் வருமானத்திற்கு "வேறு வழி" பார்த்துக்கொள்கின்றனர். சம்பளம் கொடுக்க காசு இல்லை என்றால் கூட வரவேண்டிய கோபம் வராது.

    அரசே தன் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட எல்லா வழிகளையும் கையாள்கிறது. CEO -கூட BSNL ஆள் இல்லை. இவருக்கு எப்படி நிறுவன முன்னேற்றத்தில் ஆர்வம் வரும்.

    உபரி ஆட்கள் ஏராளம். That too most incapabale-right from top to bottom. வருமானத்தில் 50%-க்கு மேல் ஊதியம். இதில் ஏற்கனவே நொடித்துப் போன MTNL,ITI ஆகியவற்றை merge பண்ணப் போகிறார்கள். BSNL நிறுவனத்திய கடைத்தேற்ற SAM PITRODA கொடுத்த அனைத்து பரிந்துரைகளைகளையும் குப்பத் தொட்டியில் வீசி விட்டனர்.

    குழப்படியான திட்டங்கள்!. எப்படி கரையேறுவது.

    ReplyDelete