Saturday, December 24, 2011

சிறார்களுக்கு (16)


ஆயுத பூஜை (16) 

அது ஒரு அலுவலகம். மறுநாள் ஆயுத பூஜை. ஆயுத பூஜையைக் கொண்டாடுவதற்காக, ஒரு மீட்டிங் போட்டார்கள். அலுவலகர்கள் யாவரும் மிகவும் ஊற்சாகத்துடன், ஆளுக்கு ஒரு வேலையினை ஏற்றுக் கொண்டனர்.

ஒருவர், தான் 'சரஸ்வதி' படத்தினை அளிப்பதாகச் சொன்னார். மற்றொருவர் 'சர்க்கரைப்பொங்கல்' கொண்டுவருவதாகச் சொன்னார். மற்றோருவர் 'சுண்டல்', இன்னொருவர் அலுவலகத்தை சுத்தம் செய்வதாகச் சொன்னார். மற்றும் ஒருவர் அலுவலகத்தை அலங்காரம் செய்வதாகச் சொன்னார்.

அந்த அலுவகலத்தில், ‘சோனாசலம் என்று ஒருவர் இருந்தார். எங்கே மீட்டிங்கில் இருந்தால் தானும் ஏதாவது செய்ய வேண்டிவருமோ என அச்சம் எழுந்தது அவருக்கு!. மீட்டிங்கிலிருந்து ‘நைசாக  நழுவினார்.

மறுநாள் ஆயுத பூஜை! ஆளுக்கு ஒன்றாக பங்களிப்பு இருந்ததால் பூஜை மிகச் சிறப்பாக நடந்தது. பூஜையின் முடிவில் அனவருக்கும் பிரசாத ‘பாக்கட்டுகள் அளிக்கப்பட்டன.  அனைவரும் மிக்க மகிழ்ச்கியுடன் பாக்கட்டுகளைப் பெற்றுக்கொள்ள, நமது ‘சோனாசலம் பாக்கட்டை வாங்கிக் கொள்ளும் போது தலை குனிந்தவாறு, சற்று ‘வழிந்தபடி தான் வாங்கிக் கொள்ள முடிந்தது.

நீதி: எவர் பங்களிப்பு செய்வதில்லையோ, அவர் பங்கு பெறுவதிலும், தானாகவே, உரிமையற்றவராகிறார். கடமையைச் செய்யாதவர்கள், உரிமைகளைக் கோருவதிலும்,  தயங்கத்தான் நேரிடும்.



No comments:

Post a Comment