1.
காலம்
உங்களிடம் விட்டுச் சென்ற தழும்புகளைப் பற்றியும், கசப்பான அனுபங்களையும் சதா
நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. (இது சம்பந்தமாக
இன்னொரு கட்டுரை). அதே போல உங்கள் நன்பரோ, உறவினரோ,
அலுவலகத்தில் வேலை செய்பவரோ, எப்போதோ ஒரு தவறு செய்திருந்தால், அதே
கண்ணோட்டத்திலேயே அவர்களைப் பார்ப்பது அபத்தம். நீங்கள் எப்படி
பண்பட்டிருப்பதாக நம்புகிறீர்களோ, அதே போல
மற்றவர்களும் ரிஃபைன் ஆகியிருப்பார்கள். எனவே கடந்தகால அபிப்ராங்களை விடாப்பிடியாக
வைத்திருக்க வேண்டாம்.
2.
ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிலை! எங்கே
அது தவறாகிவிடுமோ என பயந்துகொண்டு முடிவெடுக்காமலிருக்கிறீர்கள்! முடிவே
எடுக்காமலிருப்பதைக் காட்டிலும், சில தவறான முடிவுகள் பரவாயில்லை!. ஏனெனில்
ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் சில தோல்வியில் முடிவடைந்த முயற்சிகள் இருக்கின்றன.
எனவே தவறுகளுக்கு பயப்படாதீர்கள்.
3. சில சமயம் தவறான மனிதர்களுடன் பழகியதற்காகவும், தவறான
செய்கைகளுக்காகவும் நாம்
வருந்தியிருக்கிறோம். அந்த அனுபவங் களிடமிருந்து பாடங்கள்தான் கற்றுக்
கொள்ளப்படவேண்டுமே தவிர, அவற்றை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதினால்
பலனொன்றும் இல்லை!
4. மகிழ்ச்சியென்பது விலைக்கு வாங்கும் சரக்கல்ல! எனவே அவற்றை
“பார்களிலும்” மற்ற இடங்களிலும் தேட வேண்டாம். அது
உங்களுள் இருப்பது! கடமைகளை விருப்பமுடனும், காதலுடனும் செய்யுங்கள். ஒரு நாளைக்கு
10 முறையாவது வாய்விட்டு சிரியுங்கள். மகிழ்ச்சி உங்களிடம் வாசம் செய்யும்.
5. உலகில் யாரை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்?
உங்களைத் தானே? உங்களை உங்களுகே பிடித்திருக்கிறதா என (நேர்மையாக) வினவிக்
கொள்ளுங்கள். உங்களை நீங்களே விரும்பாத நிலையில் மற்றவர்கள் உங்களை நேசிக்க வேண்டும் என விரும்புவது சரியில்லை!
6.
சோம்பியிருக்காதீர்கள். சோம்பலான மனது
“இல்லவே இல்லாத” கஷ்டங்களை யெல்லாம் இருப்பதாக்
கற்பித்துக் கொள்ளும். பிரச்சினைகளை சந்திப்பதை தவிர்க்க்ச் சொல்லும். எனவே உடலை
மாத்திரமல்ல; மனதையும் சுறுசுறுப்பாக, பாஸிட்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்!
7.
ஆற்றில் குதிக்காதவரை நீச்சல் வராது!
தயங்கிக் கொண்டே இருந்தீர்களானால், ஆற்றின் கரையிலேயே உட்கார்ந்து கொண்டிருக்க
வேண்டியது தான். எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது புதிய சவால்களை ஏற்றுக்
கொள்ளுங்கள். இத்தகைய சவால்கள்தான் உங்களை திறமையிலும், அறிவிலும் மேலே இட்டுச்
செல்லும். இறங்கிப்பார்த்தால், நாம் அஞ்சும்படியாக அந்த சவாலகள் இருக்காது!
8.
மோசமான நன்ப / நன்பிகளை விட தனிமை பல மடங்கு உத்தமமானது!
அதே போல ஒரு காதலர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவசரம் வேண்டாம். ‘அலைவரிசை’ ஒத்து வரும் பொழுது தானே நிகழும்! தடியால் அடித்து
“கனியவைத்தால்” வெம்பித்தான்
போகும்.
9.
தோல்வி கண்ட பழைய நட்பு / காதலின்
அனுபவக் கண்கொண்டு ‘புதிய நட்புக்களை’ பார்க்காதீர்கள். ஒன்று போலவே
இருப்பதற்கு மனிதர்கள் ‘இயந்திரங்கள் அல்ல’. அவர்கள் தனித் தனியானவர்கள்.
கடந்து போன நட்பு போலவே, புதியது இருக்கும் என்று கட்டாயமில்லை!
10.
வாழ்க்கை ஒன்றும் “கார் பந்தயம்” அல்ல! வழியில் பார்கிறவர்கள்
எல்லோரையும் ‘முந்திச் சென்றாக’ வேண்டும் என வம்படித்துக்
கொண்டிருக்காதீர்கள். எந்த நிலைக்கு உயர்ந்தாலும் / தாழ்ந்தாலும் உங்களை விட
உயர்ந்த நிலையில் / தாழ்ந்த நிலையில் மக்கள் கட்டாயம் இருப்பார்கள். எனவே
எல்லோரையும் வெல்ல வேண்டும் என்பதைத் தவிர்த்து
நீங்கள் ‘உங்களை’ வெல்வதற்கு முயலுங்கள்.
-o-
இத்தொடர் முன்று பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதிக்கு Click here
மூன்றாம் பகுதிக்கு Click here
it is simply appreciating to read these steps for success.
ReplyDeleteyes
i prefer to call these as steps for success.
tk u balram to reprdouce these here
ple
refer the orginal author
it is simply appreciating to read these steps for success.
ReplyDeleteyes
i prefer to call these as steps for success.
tk u balram to reprdouce these here
ple
refer the orginal author