Monday, May 25, 2015

வயநாடு ஹெரிடேஜ் மியூஸியம் - பூக்கூட் ஏரி.

வயநாட்டு பழங்குடி மக்களின் ஹெரிடேஜ் மியுசியம் ஒன்று, அம்பலவாயல் என்ற இடத்தில்  இருக்கிறது.  சுல்தான் பத்தேரியிலிருந்து, அருகாமைதான்.

நம்ம ஊர் நடுகற்கள் போல நிறைய வைத்திருக்கிறார்கள். முறம், உலக்கை, கூடை போன்றவைகளும் பொருட்காட்சியங்களுக்கு வந்துவிட்டன! பெரும் மியூஸியங்களைப் பார்த்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான். எனினும் இது பழங்குடி மக்களின் உபயோகப் பொருட்கள் அல்லவா?








--------------------------------------------------------------------------------------------------------------------------

வயநாட்டில் பூக்கூட் ஏரி ஒன்று இருக்கிறது. பிரம்மாண்டமோ - பிரமிப்பூட்டும்  அழகோ அல்ல. சிறிய ஏரி தான். ஆனால் "குழந்தையைப்போல " கொஞ்சும், செல்ல  அழகு ! படங்களைப் பாருங்கள்.


ஊட்டி - கொடைக்கானலிலும் இத்தகைய ஏரிகள் இருக்கின்றனதான். இவ்வளவு அமைதியாக இருப்பதில்லை !!


வேறு என்ன? போகும் வழிதான்!!

என்ன ஒரு மோனத்தவம் போல ஒரு நீர் நிலை !!

No comments:

Post a Comment