Tuesday, May 5, 2015

திருமுண்டீஸ்வரம்

திருமுண்டீஸ்வரம் திருவெண்ணை நல்லூர் அருகே அமைந்துள்ளது.
இறைவன்:   சிவலோக நாதர் 
இறைவி:       சௌந்தர்ய நாயகி 
காலம் : 1000 அணுகளுக்கு முன் 

ஸ்தல விருக்ஷம்: வன்னிமரம் 

தற்போது கிராமம் என்றே அழைக்கப்படுகிறது இவ்வூர்.

சிவனின் காவலர்கள் திண்டி,முண்டி வழிபட்டதால், முண்டீச்வரம் எனப்பட்டது. 


முடீச்சரம் என்பதே இத்தலத்தின் புராணபெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் திருமுண்டீச்சரம் ஆனது என்பர். துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான்.

தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவர கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரை பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது.  அந்த மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கத்தை 
பிரதிஷ்டை செய்தான்.









No comments:

Post a Comment