Sunday, May 10, 2015

பெரியண்ணே!!

அண்ணே! அமெரிக்கா அண்ணாச்சி அண்ணே! காலுல வுழுந்து கும்புடறேனுங்க! வணக்கமுங்க... நல்லா இருக்கீகளா?

நீங்க சொன்னபடி, “அம்மா தினத்தில”,  ‘மாஞ்சு’, ‘மாஞ்சு’ எழுதிக் குவிச்சுட்டோமுங்க! ‘பொக்கே’, ‘கிப்புட்டு” ன்னு சகட்டு மேனிக்கு, வாங்கித் தள்ளீட்டம்ல.... ஆனா பாருங்க, எங்க கிராமத்துல இருக்குற அம்மாக் காரிங்களுக்கு ஒரு மண்ணும் தெரியலிங்க! “அட போடா போக்கத்தவனே” - ன்னு சொல்லிப்புட்டு, வயலுக்கு ‘களையெடுக்க’ பொறப்புட்டு போயிட்டாளுங்க..  அக்குரமுங்க...  சின்ன “ரிடர்ன் கிப்புட்டு” கூட  குடுக்கலீங்க.. என்ன பொம்பளீங்களோ தெர்லீங்க...

அத்த வுடுங்க... ஊர்க்காரவுங்க.. விவரமில்லாதவங்க... அப்படித்தான் இருப்பாங்க...

அமெரிக்க அண்ணாச்சி, ஒங்க கூட கோவமுங்க... எங்க சனத்தையும், எங்க ஒறவு மொறைகளையும் கொஞ்சம் பாக்கப் படாதுங்களா?  எதுக்கு சொல்றேன்னா, கொஞ்சம் ‘நாத்தி தினம்’, ‘கொழுந்தியா தினம்’, ‘மச்சான் தினம்’, ‘மாமன் தினம்’, ‘ஓரக்கத்தி தினம்’ அப்படீன்னு கொண்டாட எங்களுக்கு  சொல்லித்தரக் கூடாதுங்களா?

நாங்கல்லாம்  இந்த மாதிரி ‘தினங்களுக்காக’  ‘கவித’, ‘கட்டுரை’ யெலாம் தயார் பண்ணி வச்சுட்டோமுங்க.. பொங்கரதுக்க தயாரா இருக்கோமுங்க.. நீங்க ‘சரின்னு’ சொல்ல வேண்டியது தாங்க பாக்கி....

என்ன நாஞ்சொல்றது?


No comments:

Post a Comment