Monday, May 4, 2015

எய்தனூர் – நெல்லிக்குப்பம்

எய்தனூர் – நெல்லிக்குப்பம் ஆதி புரிச்வர்வர் திருக்கோவில் 

கடலூர், நெல்லிக்குப்பத்தின் அருகே உள்ளது எய்தனூர். திரிபுரசம்ஹாரம்
நடைபெற்ற திருவதிகையுடன் சம்பந்தப் பட்ட தலம் இது. இங்கே பத்மதள நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. தாருகாதன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களை அழிப்பதற்காக,  திருமாலை அம்பாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் வைத்து, திருவதிகை புறப்பட்டார் ஈசன். அவர் புறப்பட்ட இடமே எய்தனூர்.


இக்கோவிலே போர்க்களக் கோவிலாக இருக்கிறது.  துர்க்கை, வினாயகர் உட்பட அனைவரும் ஆயுதம் தரித்துள்ளனர்.  ஆலய விமானத்தில், சப்தரிஷிகள் தவநிலையில் இருக்கின்றனர். லிங்கோத்பவர் வழக்கமாக இருக்கும் இடத்தில் பெருமாள். அவரும் ஆயுதபாணியாகவே.

இராவனனை, தன் வாலால் கட்டிப் போட்ட ‘வாலியின்’ சிற்பம் இங்குள்ளது. கோவிலைச் சுற்றி நவ தீர்த்தங்கள் இருந்தனவாம். இராமேஸ்வரத்திற்கு ஈடான தீர்த்தங்கள் அவை என்கிறார் கோவில் அர்ச்சகர். தற்போது நான்கு தான் இருக்கிறது. மிகப் பழமையான கோவில். முழுமையாக பிரித்தெடுக்கப்பட்டு, புணருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. புண்ணியத் தலம். ஆனால் க்ஷீண கதியில் இருக்கிறது. கோவில் மூர்த்தங்களுக்கு எண்ணெய் கொடுங்கள் என்கிறார் அர்ச்சகர். கோவிலுக்கு செல்லும் போது, ஐந்து லிட்டர் நல்லெண்ணை வாங்கிக் கொண்டு செல்லுங்கள்.

எனது நன்பர் செந்தில்

நான்


கோவில் முகப்புத் தோற்றம்
வாலி ராவணனை வாலால் கட்டுகிறார்-ராவணன் சிவன் இருக்கும் இடத்தைக் காட்டுகிறார் (விரலைக் கவணிக்க)

தட்சணாமூர்த்தி - ஆயுதபாணி

லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் - திருமால்
சக்ராயுதத்தை ஏவும் விதமாக


துர்கைகூட ஆயுதங்களுடன் - எருமை வாகனத்டில்


பன்றி யானையை விரட்டுகிறது


 பெரிசுபண்ணி படிக்சுப் பாருங்க!
 நேர் வாசல் வழியே உள்ளே நுழைய முடியாது. தெற்குமுகமாகத்தான் உள் நுழைய முடியும்.

ஜன்னலின் வழியே ஆதிபுரீஸ்வரர் தரிசனம். ஜன்னலில் உள்ள சிறிய வினாயகரைக் கவணியுங்கள்

நந்தியின் சிலை சாய்திருக்காது

ஈசன் - மேல் தாரா பாத்திரம்






No comments:

Post a Comment