நான்கு தூண்களின் அஸ்திவாரமும் அசைக்கப்படுவதை, மெல்ல, மெல்ல இப்போதுதாவது
உணர்ந்து கொண்டால் சரி.
கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்டிருந்தாலும், அது ஒரு ஜாலத் துணி!
வல்லான் வரும்போது, திரை விலகாமலேயே, கடாக்ஷம் கிட்டும்.
இல்லான் வரும்போது, கருப்புத் துணி, அவன் கண்களுக்கு கட்டப்படும்.
எல்லா ‘நாட்டாமை’ களுக்குப் பின்னாலும், சாமானியனின் கண்களுக்குப்
புலப்படாத ‘சாவி’ ஒன்று இருந்தே தீரும். பூட்டைத்
திறக்கும் சாமர்த்தியமும், சந்தர்ப்பமும் வாய்க்கும் “பொழுது தர்மம் வென்றது”
எனவும், திறக்க இயலாது போனபோது ‘வளைக்கப்பட்ட தர்மம்’, ‘சூது கவ்வியது’ எனவும்
வியாக்யானம் சொல்லப்படும்.
அரசியல் தூண்களின் ஆபாசம் வெளிச்சம் வெட்டவெளி.
மீடியாக்களின் சாமர்த்தியம் அசாத்தியம். வெல்லம் கொடுத்தே கொல்லும்
வித்தகர்கள். ‘தின்பது விஷம்’ என்பதைக்கூட அறியாமல் செய்யும் வல்லமை
வாய்ந்தவர்கள். கருத்துக்களை சாதுர்யமாக உருவாக்குபவர்கள்-சிலருக்கு சார்பாக!
அரசு இயந்திரம் தனது அடையாளங்களை இழந்து வெகு நாட்களாகின்றன. ஏவல் செய்வதே இலட்சியம்.
இது ரகசியமெல்லாம் இல்லை. அவ்வப்போது நினைவூட்டிக் கொள்ளும்படியான
சந்தர்பங்கள் அமைகின்றன.
No comments:
Post a Comment