Sunday, May 24, 2015

பழசிராஜா - வயநாடு

பழசி ராஜாவின் சமாதி  

தமிழ் நாட்டில், கட்டபொம்மு போல, கேரளத்தில் பழசி ராஜா. வயனாட்டுச் சிங்கம் என அழைக்கப் படுபவர்.  இவர் கேரளத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்தவர். கோட்டையம் பகுதியை ஆண்ட ஒரு குறு நில மன்னன்.  மைசூர் மன்னன் திப்பு சுல்தானை எதிர்த்த பிரிட்டிஷ் படைகளுக்கு உதவிய மன்னர். திப்பு சுல்தானை ஜெயித்த பின்னர் பிரிட்டிஷ் கம்பெனியின் கண்கள் வளமிக்க கேரளத்தின் மலபார் பகுதிகளின் இயற்கை வளங்களின் மேல் விழுகிறது. அந்தப் பகுதியைக் கைப்பற்றி, தங்களுக்கு கப்பம் செலுத்தவைக்கின்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி இறக்கிறார் பழசி ராஜா.


பிற மன்னர்களின் ஆதரவு எதிர்பார்த்தபடி பழசி ராஜாவுக்குக் கிட்டாதபடியாலும் இறுதிப் போரில் தன் தளபதிகளையும் வீரர்களையும் இழந்த பழசி ராஜா கடுமையான சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷ் படையால் சுட்டுக் கொல்லப் படுகிறார். இந்த ராஜாவின் வீரத்தைக் கண்டு பிரமிக்கும் பிரிட்டிஷ் கலெக்டர் அவரை மாபெரும் வீரனாக மதித்து உரிய கவுரவுத்துடன் அடக்கம் செய்கிறார். அவருடை சமாதிதான் கீழே காண்பது. 
இதுதான் பழசி ராஜாவின் சமாதி 

சுற்றிலும் அழகான தோட்டங்கள் பராமரிக்கப் படுகின்றன. 

அருகே அத்தி  மரம்.


வயனாட்டில் உள்ள மற்றொரு இடம் “பானாசுரா சாகர் அணை” . எழில் மிகுந்த இடம். கபினி ஆற்றின் துணை நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இப்படிப்பட்ட அணைகளில் இந்தியாவிலேயே இதுதான் பெரியது என்கிறார்கள். 


ரிசர்வாயர் பகுதிகளில், ஏராளானமான குன்றுகள். படகுகளில் சென்று இந்த குன்றுகளை (தீவுகளை) சுற்றிக் காண்பிக்கிறார்கள்.  பனிபொழியும் வேளையில், மெல்லிய சாரல் மழையில், அதிவேகமான படகில், பேரிழில் மிக்க தீவுகளைச் சுற்றி வருவது (வீடியோ ) ஆனந்தமல்லவா? படங்கள் கீழே..

செல்லும் வழி 

அணை 

ரிசர்வாயர் பகுதிகளில் தீவுகள். 

படகு சவாரி 

எத்துனை தீவுகள்?


No comments:

Post a Comment