Tuesday, May 5, 2015

கூத்தாண்டவர் கோவில்

திருவெண்ணை நல்லூர் செல்லும் வழியில், அகஸ்மாத்தாக பார்க்க முடிந்த இடம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில். இந்தியா முழுவதிலிருந்து திருநங்கைகள் கூடும் இடத்தினை பார்க்க வேண்டும் எனத் இதுவரை தோன்றியதே இல்லை.

மகாபாரத அர்ச்சுணனால் கர்ப்பமாக்கப்பட்ட  நாகக்கன்னியின் மகன் அரவான்.  யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க "எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய" ஒரு  நரபலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்" என ஜோசியம் சொல்ல.... பாண்டவர் தரப்பில் சகல சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாக இருப்பவர்கள் அர்ஜுனன், அவன் மகன் அரவான், கிருஷ்ணர் ஆகியோரே!

கதா நாயகர்களையே பலியாக்கிவிட்டால், அப்புறம் கதை என்ன ஆவது? எனவே அரவானை பலிகொடுக்க திட்டமிட்டனர்.  அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். எவளும் சிக்க வில்லை.அடுத்த   நாள் காலையே விதவை என்பதை யார் ஏற்றுக் கொள்வார்?

இறுதியாக  நம்ம ஹீரோ கிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.

கூத்தாண்டவர் கோயில்

கோயிலைச் சுற்றி

இதுவும் கோயிலைச் சுற்றியே



ஊர் திரும்பும் வழியில் கொசுறாக ஒரு கோயில் பூலோக நாதர் ஆலயம். சிவன்-விஷ்னு இருவரும் இருக்கிறார்கள்


பூலோக நாதர்

ப்ரசன்ன வெங்கடாஜலபதி

தாயார்.





No comments:

Post a Comment