Sunday, May 24, 2015

திருநெல்லி - வயனாடு

திருநெல்லி என்னும் திருத்தலம்,  சுல்தான் பத்தேரியிலிருந்து (வயநாடு,) சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது, இந்த ஊர் ‘சகாயமாலா க்ஷேத்ரம்’ என்றும் ‘தக்ஷின காசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே அமைந்துள்ளது ஒரு பெருமாள் கோயில். 

திருநெல்லி’ கோவில்.‘பித்ரு’ காரியங்கள் செய்வதற்கு உகந்த இடம். (முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம்)  

இவ்வூர்  அமைந்துள்ள இடம் ‘பிரம்மஹிரி மலை’ என அழைக்கப்படுகிறது. இங்கு விசேஷம் என்ன வென்றால், எந்த நாளிலும், எவரும் முன்னோர்களுகு ‘தர்பணம்’ செய்யலாம், பெண்கள் - குழந்தைகள் உட்பட.

அனேகமாக, பெண்களையும் தர்பணம் செய்விக்கச் செய்யும் இடம் இது ஒன்றுதான் என நினைக்கிறேன். அமாவாசைக்காகவோ, திதிக்காகவோ காத்திருக்கக வேண்டாம். 

மூலவர் பெருமாள். இகோயிலில் தர்பணம் செய்ய, ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டால், மூலவரை தரிசனம் செய்வித்து, பின் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் கீழே உள்ள  (டிரெக்கிங் தான்)  ‘பாபவிநானாசினி’ என்ற சிறிய அருவிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கையில்  ஒரு  பொட்டலம்  தருகிறார்கள் .  அதில் தர்பை, அரிசி, எள், துளசி,  என , தர்பணத்திற்கு தேவையான  அனைத்தும் இருக்கும் .


அந்த அருவிக்கு செல்வதற்கு தோராயமாகா, கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் டிரெக்கிங் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் வழியெங்கும் அற்புதமான இயற்கைக் காட்சிகள். ஒரு சிவா கோயிலும் / ஒரு தீர்த்த குளம் உள்ளது. வழியெல்லாம் என்னே அழகு! மழைக்காலங்களில் ‘அட்டைகள்’ மிகுதி. எனவே கவணமாகச் செல்ல வேண்டும். 



கீழே சென்றால், பாபவினாசினியில் ஒரு சிறிய அருவி கொட்டுகிறது. அது சிறிய தேக்கமா தேங்கி நிற்கிறது. அதில்தான் குளிக்க வேண்டும். வறட்சி காரணமாக அருவியில் தண்ணீர் இல்லையென்றால், ஒரு மோட்டரும் வைத்திருக்கிறார்கள்.

தர்ப்பணம் செய்வோர்  அனைவரும் அந்த அருவியில் குளித்தாக வேண்டும். பின்னர் பள்ளமான நீளமாக அமைந்துள்ள ஒரு வாய்க்காலில் இறங்கி, , அனைவரும் வரிசையாக நின்ற பின், பேட்ச் பேட்சாக தர்ப்பணம் செய்விக்கின்றார் தந்தரி.

குறைந்த பட்சம் ஐம்பது பேராவது அந்த வாய்க்காலில், ஒரே  சமயத்தில் தர்பணம் செய்யலாம்.

தட்சனை நாமே கொடுத்தால்தான் உண்டு. அவர்களாக எதுவும் கேட்பதில்லை. தர்பண காரியங்களை சிரத்தையாக செய்விக்கின்றனர். என்னைப் பார்த்த்துமே “நீங்கள் தமிழோ?” என வினவி, காத்திருக்க்ச் சொல்லிவிட்டு, நாலு மலையாள பேட்ச் செய்வித்துவிட்டு, பின் தமிழ் முறைப்படி தர்ப்பணம் செய்வித்தனர். என்ன ஒரு டெடிகேஷன்?

தர்பணம் முடிந்ததும், மீண்டும் மேலே திருநெல்லி கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கே சில ‘சங்கல்பங்களை’ செய்வித்து, சுவாமி தரிசனம் செய்விக்கின்றனர். ஆஹா.. அற்புதமான அனுபவம். வயநாடு சென்றால், பெற்றோர்கள் இல்லாதவர்கள் இங்கே , அவசியம் சென்று வாருங்கள்.


இனி புகைப்படங்கள் கீழே!

நுழைவாயில்

பிரதான கோயில் கோபுரம்


முழுத்தோற்றம்

வெளியே முகப்பு

வெளியெ 'நட்டு' வைத்திருக்கும் ஒரு சில்


அப்ரோச் ரோடு 
தர்பணம் செய்யும் இடம்

போகும் வழி

போகும் வழி


தர்பணம செய்விக்கின்றனர்

வழியில் உள்ள ஒரு சிவன் கோயிலும் தீர்த்தமும்.

2 comments:

  1. Beautiful pictures and narration. Can you tell the major city nearby? I would like to include this in my wish list. Thanks

    ReplyDelete
  2. Shri Kalai Van.. Kozhikode (Calicut) is the near by City.. You can approach wayanad (Sulthan Bathery) from Mysore and Ooty also. From Kozhicode it is 100 km. From Ooty it is 80 KM and from mysore it is 85 KM..

    ReplyDelete