மாயூரத்திற்குச் சென்று, மயூரனாதரை
தரிசித்துவிட்டு, அருகில் உள்ள அஷ்ட வீரட்டான
தலங்களுள் ஒன்றான திருவழுவூர் செல்லத் திட்டம். இந்த தலம் மயிலாடுதுறைக்கு அருகில்
உள்ளது. அட்ட வீரட்டான தலங்கள் என்றால், எட்டு
இடங்களில், துஷ்டர்களை அழித்த இடங்கள். மற்ற ஏழு இடங்கள்: திருக்கண்டியூர்,
திருவதிகை, திருக்கோவிலூர், திருப்பறியலூர், திருவிற்குடி, திருக்குறுக்கை மற்றும்
திருக்கடவூர். கோயிலினுள் சென்ற உடனேயே, அர்ச்சகர் ஐயப்பன் அவதரித்த தலம் இதுவே
என்றார். இது கேள்விப்படாத தகவல்.
தருகாவனத்தில், தவமியற்றிக் கொண்டிருந்த முனிவர்களுக்கு தாங்கள்தான் தவ வலிமையில் உயர்ந்தவர்கள் என்றும், ரிஷி பத்தினிகளுக்கு தாங்கள்தான் கற்பு நிலையில் மிக உயர் வானவர்கள் என்ற அகந்தை ஏற்பட்டதாகவும், அவர்களது ஆனவத்தை அழிக்க சிவனும்-விஷ்னுவும் அவதரிக்க (பிச்சாடன்-மோகினி), அவர்கள் ஈன்றெடுத்த மகவுதான் ஹரிஹரபுத்திரன் (ஐயப்பன்) என்றார் அர்ச்சகர்.
மோகினி, ரிஷிகள் இருக்குமிடத்தை அடைய, அவர்களது தவம் மோகினியின் அழகால் கலைகிறது. சினங்கொண்ட ரிஷிகள், ஹோமம் வளர்த்து, ஒரு மதம் கொண்ட யானையை ஏவ, அந்த யானையை அழித்து, ரிஷிகளுக்கும் ஞானத்தை அளித்தாராம். அதனால் இந்த தலத்திற்கு ‘ ஞானசபை ‘ என்ற பெயரும் உண்டு.
மிகப் புராதனமான கோயில்.இறைவன்: வீரட்டேஸ்வரர். இறைவி: இளங்கிளைநாயகி (என்ன அழகான தமிழ்ப்பெயர்!!)
இந்த கோவிலில் பித்தளையால் செய்யப்பட்ட நடராஜர் சிலை, மேற்சொன்ன கஜசம்ஹாரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. காலடியில் யானையின் தலை. கூடவே பால முருகனை கையில் ஏந்திக்கொண்டிருக்கும் பார்வதி தேவியாருமாக மூர்த்தங்கள் தத்ரூபமாக இருக்கிறது. நடராஜர் மூர்த்தியின் சிலையில் வேறு எங்கும் காண முடியாத வகையில் சிவபெருமானின் உள்ளங்காலை இங்கே காணலாம்.
இங்கே கஜசம்ஹார
மூர்த்தி தான் முக்கியமாக கருதப்படுகிறார்.
மூலவருக்கு "கீர்த்திவாசர்
" என்றும் அம்பிகைக்கு "பாலகுராம்பிகை" என்ற பெயரும் உண்டு.
சிதம்பரம் நடராஜராஜரைக்கூட இவ்வளவு அருகில் பார்க்க முடியாது. இங்கு மிக அருகில் தரிசிக்க முடிகிறது. அது மாத்திரமல்ல. நடராஜருக்கு பின்னால் அமையப்பெற்ற ‘சக்கரத்தை’ பார்த்தாலே புன்னியம் என்றார். அர்ச்சகர். மாயூரத்திலிருந்து 10 கி.மீதான். முடியும் பொழுது தரிசித்து வாருங்கள்.
இனி சில புகைப்படங்கள்:
No comments:
Post a Comment