Sunday, December 27, 2015

மாயவரம்.

இவ்வளவு நாள் இங்கே இருக்கிறோம்;  நூறு கி.மீ, அருகே உள்ள மாயூர நாதரை தரிசிக்காமல் இருக்கிறோமே என்று தோன்ற, இன்று காலை மாயூரம் பயணம். (மயிலாடுதுறை). போகும் வழியில், 108 திவ்ய தேசத்துள், 22வது வரிசையில் வரும் பரிமளரங்கனாதர் கோயிலைப் பார்த்தால் என்ன எனத் தோன்றவே, வண்டியை இந்தளூர்-பரிமள ரங்கனை நோக்கித் திருப்பினோம்.

ஏற்கனவே அலங்காரப் ப்ரியரான மஹாவிஷ்ணு இங்கே சயன கோலத்தில் மிகுந்த அழகுடன் இருக்கிறார்.


இறைவன்: பரிமள ரங்கநாதர் தல இறைவி : பரிமள ரங்கா நாயகி தீர்த்தம் : இந்து புஷ்கரணி. பட்டாச்சார்யார் இக்கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார். திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.பஞ்சரங்க திருத்தலங்களுள்ஒன்று. பஞ்சரங்க ஸ்தலங்கள்: ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), ஸ்ரீரங்கம், ஆதிரங்கம், கும்பகோணம் மற்றும் இக்கோயில்
திருஇந்தளூர்

.
பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்ட அம்பரீசன் என்ற அரசனது ஏகாதசி விரதத்தை முறியடிக்க தேவர்கள், துர்வாச முனிவரை வேண்ட, அவரும் சம்மதிக்க, முனிவர் சில சதிவேலைகளில் ஈடுபட, அரசன் பெருமாளை வேண்ட, பெருமாளும் அரசனை ரட்சித்து, துர்வாசருக்கும் தவறைஉணர்வித்தார்.  பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம். மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன.

அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கோயில்.  சிலவற்றைக் காணூங்கள்.


















----------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து சென்றது புகழ்பெற்ற மயூரநாதர்  திருக்கோயில் . மிகழப் பழமையான, அழகான கோயில். அம்மன் மயில் ரூபத்தில், இறைவனை வழிபட்ட இடம். இத்தலத்தைப் பாடாத புலவர்கள் இல்லை என சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.





மயூர நாதர் / அபயாம்பிகை / பிரம தீர்த்தம். 1500 ஆண்டுகள் பழமையானது.

அதென்ன, ஒரு சன்னதியிலும் ஒரு சிவாச்சார்யாரும் இல்லை?. பூட்டிய கதவுகளுக்கிடையேதான் தரிசனம், காலை ஏழரை மணிக்கே.

தரிசனம் முடித்துவிட்டு, அக்கால நினைவில் 'காளையாக்குடி' சென்று காலைச் சிற்றுண்டி முடிக்கத் திட்டமிட்டேன். ம்ம்..ஹூம்..  மிக, மிகச் சாதாரணமாகி இருக்கிறது. 

(திருவாரூர் சாலையில்  இருந்தஇன்னும் சில கோயில்களையும்  தரிசித்தேன்.. அவை அடுத்த பதிவுகளில் ....)

2 comments:

  1. மாயவரம் கோவில்கள், மாயவரம் ஆன்மிக பயணம் போன்ற விரிவான தலைப்பு கொடுத்திருக்கலாமே. குட்டி சிங்கப்பூரை பற்றி எழுதியிருப்பீர்கள் என்று வந்து பார்த்தால் உங்கள் கோவில் பயணத்தை எழுதியிருக்கிறீர்கள். மயூரநாதரை குறிப்பிடாமலும் மயிலாடுதுறையை பற்றி எழுத முடியாது. ஊரின் பெயர்காரணத்தோடு தொடர்பு கொண்ட கோவிலைப் பற்றி எழுதியிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  2. I am really thankful to the holder of this web page who
    has shared this enormous article at here.

    ReplyDelete