Friday, January 1, 2016

ஆண்டின் இறுதியில் ...

என்னைக் கவர்ந்த எழுத்தாளர் Paulo Coelho. இவரது புத்தகங்களை ஆரம்பித்தால், வைக்க முடியாது. 2015ம் வருடம் முடியும் நேரத்தில் அவரது செய்தி:
-0-

“நாம் உட்பட, எல்லா விஷயங்களுமே, ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும். அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் (அல்லது அதே நிலையில்) இருக்க விரும்பினால், நாம் கடக்க வேண்டிய அடுத்த கட்டத்திற்கான அர்தத்தையும் , ஆனந்தத்தையும் இழக்கவேண்டியிருக்கும். அதனதன் நேரத்தில் - அவையவை, கடந்து போவதை ஏற்றுக்கொள்வதே, நாம் செய்யக் கூடிய காரியம்! “

“நாம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் கண்ணால் காணும் இந்த ஸ்தூல உலகு, கண்ணுக்குத் தெரியாத சூட்சம சக்தியின் வெளிப்பாடே! மனம் உருவாக்கிய, இந்த மாயா எண்ணங்களிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வது, உண்மை சொரூபத்தை தரிசிக்க ஏதுவாகும்”.

“வாழ்வில் சில சமயம் வெற்றியும் சில சமயம்தோல்வியும் வரும்தான். உங்களது மேதமை உண்மையானால், அதை உலகு தானாகவே அடையாளம் கண்டுகொள்ளும். உங்களது அன்பு பரிசுத்தமானதென்றால், பிறர் தாங்களாகவே புரிந்துகொள்வார்கள். எனவே, பிரதிபலன் கருதி எதையும் செய்ய வேண்டாம்."

"உங்களது சாதனைகளையும், முயற்சிகளையும் உலகோர் கிலாசிக்க வேண்டும், புகழ்ந்துரைக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். “

உங்கள் வாழ்வில் நடந்துபோன கசப்பான நிகழ்வுகளை, திரும்பத் திரும்ப ரிவைன்ட் செய்து பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனால் உங்கள் மனது மேலும் மாசுபட்டுப் போகும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் நிகழாது.

கடந்துபோன காலத்தில் என்னவாக இருந்தீர்கள் என்பதைவிட, இன்று எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

- Paulo Coelho

One always has to know when a stage comes to an end. If we insist on staying longer than the necessary time, we lose the happiness and the meaning of the other stages we have to go through. Things pass, and the best we can do is to let them really go away.

Everything in this visible world is a manifestation of the invisible world, of what is going on in our hearts – and getting rid of certain memories also means making some room for other memories to take their place. Let things go. Release them. Detach yourself from them.

Sometimes we win and sometimes we lose. Do not expect anything in return, do not expect your efforts to be appreciated, your genius to be discovered, your love to be understood.

Stop turning on your emotional television to watch the same program over and over again, the one that shows how much you suffered from a certain loss: that is only poisoning you, nothing else.

Before a new chapter is begun, the old one has to be finished: tell yourself that what has passed will never come back.
Shut the door, change the record, clean the house, shake off the dust.

Stop being who you were, and change into who you are.”
-Paulo Coelho

No comments:

Post a Comment