Saturday, February 6, 2016

பஞ்ச நரசிம்ம ஸ்தலங்கள்

பிரதோஷகால பூஜை, பொதுவாக சிவன் கோவில்களில்தான் விசேஷம்.  சீர்காழியை அடுத்துள்ள ஐந்து நரசிம்மர் கோவில்களிலும் இந்த பிரதோஷ கால பூஜை சிறப்பாகச் செய்யப்படுகிறது. 

இந்த ஐந்து நரசிம்மர் கோவில்களும் ‘பஞ்ச நரசிம்ம ஸ்தலங்கள்’ என அழைக்கப்படுகின்றன. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், இந்த ஐந்து ஸ்தலங்களையும் வழிபட்டிருக்கிறார். இந்த ஐந்து நரசிம்மர் கோவில்களும் சீர்காழிக்கு அருகிலேயே  திருநகரியைச் சுற்றி அமைந்துள்ளது.  

இன்று (06/02/2016) பிரதோஷ காலத்தில் ஐந்து நரசிம்மரையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.  ஹிரண்யனை வதம் செய்ய, பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக அவதாரமெடுத்த காலம் ‘பிரதோஷ காலம்’ என்பதால், இந்த ஐந்து  நரசிம்மர் கோவில்களிலும்  பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

1.  திருக்குறையலூர். ஏழரை அடி உயரத்திற்கு இங்கே நரசிம்மர் உக்ர மூர்த்தியாக இருக்கிறார். இந்த இடம்,  மங்கை மடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது இப்பொழுது கோவிலைச் செம்மைப்படுத்தி, அழகாகச்  செய்திருக்கிறார்கள். (மூலவருக்கு பின்னால், சுவற்றில் குடியிருக்கும் நூற்றுக் கணக்கான கரப்பான் பூச்சிகளை எவராவது சரி செய்யக் கூடாதா?)




-------------------------------------------------------------------------------






2.  மங்கைமடம்: இங்கே ‘வீர நரசிம்மராக’ காட்சியளிக்கிறார்.

திருமங்கையாழ்வார் வைணவ  நெறியைப் பின்பற்றி 
பக்தியில் சிறந்து விளங்கிய 12 ஆழ்வார்களுள் இளையவர்.
இறுதியானவர். 



--------------------------------------------------------------------------

சோழ நாட்டில் உள்ள சோழ நாட்டில் உள்ள திருவாலி-
திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள 
திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 
'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு 
படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் 
இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு 
சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில 
மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை 
மன்னன்" என அழைக்கப்பட்டார்.

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் 
வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் 
விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் 
அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் 
ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் 
தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் 
செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க 
இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் 
கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது 
அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும்
திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் 
செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் 
களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு 
வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.





யோக நரசிம்மர் 


3 & 4 திரு நகரி:  இங்கே உள் கோபுரத்தின் ஒரு பகுதியில் 
ஹிரண்ய நரசிம்மராகவும், மூலவரின் (கல்யாண 
ரெங்கநாதர்) பின் புறமாக உள்ள சன்னிதியில், யோக 
நரசிம்மராகவும் காட்சி தருகிறார். இது 108 திவ்ய 
தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
 -------------------------------------------------------------------
5.  திருவாலி. இங்கே லட்சு நரசிம்மராக காட்சியளிக்கிறார். 
லட்சுமியை ஆலிங்கனம் செய்தவாறு (லட்சுகி இருகரம் 
திருவாலி 
கூப்பிய தோற்றத்துடன் இருக்கிறார் – நரசிம்மரை சாந்தம் 
செய்ய) இருப்பதால், இது திருவாலியாயிற்று.

மேற் கண்ட  அனைத்துக் கோயில்களுமே  850  - 
1200வருடங்கள்  பழமையானது   என்கிறார்கள்.

திருவெண்காடு: இங்கே அமைந்திருக்கும் 
அதிஷாடான்ங்களைக் காண வேண்டும் என்பது அவா. 
இந்த  க்ஷேத்ரத்தில்தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 
57-வது ஆச்சார்யாளான ஸ்ரீ பரமஸிவேந்த்ர ஸரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. பெரியவர் 
தன்னுடைய 57-வது குருநாதரின் அதிஷ்டானத்துக்கு 
சென்று தரிசனம் பண்ணிக் கொண்டார். இதே இடத்தில் 
சதாசிவ பிரமேந்திரரின் அதிஷடானமும் உள்ளது. இவர்ஏக 
காலத்தில் ஆறு இடங்களில் முக்தியடைந்ததாக்ச் 
சொல்வார்கள். இந்த இடமும் அதில் ஒன்று. 





சதாசிவபிரமேந்திரர் மதுரையில் 17-18 ஆம் நூற்றாண்டில் 
ஒரு சதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை 
சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். 
சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் 
என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் 
நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேசய்யர் 
ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். 
பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் 
திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை 
சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் 
சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத 
திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் 
குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் 
வாயெல்லாம்  அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை 
அடக்க கற்றுக்  கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். 
உடனே மைசூர்  மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை 
துறந்து இனி  பேசுவதில்லை என்று முடிவு செய்து 
மவுனத்தை  கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் 
நடமாட்டம்  அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று 
வசிக்க  ஆரம்பித்தார். 

தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் 
விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் 
பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் 
லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. 
ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை 
இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக 
நடமாடத் துவங்கினார்.

இந்த இடத்தில்  நுழைந்தாலே, அந்த மண்ணில் ஒருவித 
சக்தியை உணர முடியும்.

நினைத்தபடியே, எல்லா இடங்களையும் தரிசனம் செய்த 
திருப்தியில் இருக்கும் பொழுது, இங்குதான் 108 திவ்ய 
தேசங்களில் ஒன்றான ‘பார்த்தசாரதி’ கோவில் இருப்பதாகச் 

Thiruparthanpalli1.jpgசொல்ல, உடனே 
அங்கேயும் போய்வர 
எண்ணம் தோன்ற, 

‘திருப்பார்த்தன் 
பள்ளியை நோக்கிப் 
பயணம்’ 
அமைதியான 

கோவில், திவ்யமான   நின்ற நிலை 
சொரூப, பார்த்தசாரதி.  
ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த 
கோவில் என்கிறார்கள். 

 திருனாங்கூரைச் சுற்றியிருக்கும் 11 திவ்ய தேசங்களில் 
இதுவும் ஒன்று.



                                 நிறைவான பயணம் 

1 comment:

  1. ஆகா, கோவில்கட்கு பஞ்சமில்லை, அண்ணா பலராமனார் ஆலய தரிசன விஜயங்களுக்கும் பஞ்சமில்லை, எங்களுக்கு கிடைக்கும் கட்டுரைகளுக்கும் பஞ்சமில்லை.அருமையான வாழ்வு. வாழ்க
    திருநாவுக்கரசு

    ReplyDelete