சென்ற முறை மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’
என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கும் ‘பரிமள
ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது, கதவு
சாத்தியிருந்த்தால் அருகில் சென்று தரிசிக்க முடியவில்லை.
கதவுகளுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தது
திருப்தியளிக்காததால் மீண்டும் அங்கே சென்று வர தீர்மாணித்தோம். திவ்யதேசங்களுள்
ஒன்று என்பதும், வேதங்களை மீட்டு புனிதமாக்கியதால் (பரிமளம்) பரிமள ரங்கநாதர்
என்று பெயர் பெற்ற பெருமாள், இங்கு சயன கோலத்தில், சதுர்புஜங்களுடன், தலைக்கு மேல்
சூரியனும் - நாபிக்கு மேல் ப்ரம்மாவும், திருவடியில் சந்திரனும் வீற்றிருக்க,
தலைமாட்டில் காவிரியும் – திருவாடிக்கருகே கங்கையும் காட்சிதரும் அழகிய தலம்
என்பது அனைவரும் அறிந்ததே.
தை அமாவாசையன்று, சுவாமிக்கு தாயார் போலவும்,
தாயாருக்கு சுவாமி போலவும் அலங்கரிப்பர். இதனால் இந்த அலங்காரத்திற்கு ‘மாற்று
திருக்கோலம்’ என்று சொல்வார்களாம்.
காவிரிக்கரையில் பெருமாள் சயனித்திருக்கும்
ஐந்து திருத்தலங்களை ‘பஞ்ச ரங்கரங்கம்’ என்று கூறுவர். அந்த வரிசையில் இத்தலம்
ஐந்தாவது ‘ரங்கத்தலம்’.
இங்கே வெளி மண்டபத்தில் இருக்கும் தூண்களில்,
வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் யாவும் உன்னதம். அனைத்தும் உள்ளத்தைக் கொள்ளை
கொள்கின்றன. சிற்பக்கலைகளுக்கு பேளூர்,
ஹளேபேடு என்று சொல்கிறோமே, அதற்கு சற்றும் சளைத்ததல்ல இக்கோயிலின் சிற்பங்கள்.
ஆஹா... காணக் கண்கள் இரண்டு போதாது. அற்புதம். கீழே உள்ள படங்களை பெரிது செய்து
பாருங்கள். காலம் 1500 வருடங்களுக்கு முற்பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பெற்றது. தாயார்: பரிமள ரங்கநாயகி . தீர்த்தம்: இந்து புஷ்கரணி. செல்லும் வழி: மாயிலாடுதுறைக்கு மிக அருகே!
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே
பதிவும் படங்களும் மிக அருமை!
ReplyDelete