மாயூரத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் இருக்கிறார்,
வானமுட்டி பெருமாள். இந்தப் பெருமாள் 14
அடி உயர ஒரே ‘அத்தி’ மரத்தாலானவர். இக்கோயில்
அமைந்திருக்கும் ஊர் ‘கோழிகுத்தி’, காவிரி வடகரை வைணவத் தலங்களுள் ஒன்றாகத்
திகழ்கிறது.
பலமுறை மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தாலும்,
வானமுட்டிபெருமாள் எனப்படும் ஸ்ரீனிவாசப்பெருமாளைக் காணும் வாய்ப்பு
கிடைக்கவில்லை. பிதுர்தோஷம், ஹத்தி தோஷம்
நீங்கப்பெரும் தலம். முன்பு ஒருகாலத்தில்
குட்ட நோயால் பீடிக்கப்பட்ட ஒரு மன்னனின் நோய் குணமுற்று, அவனது ஹத்தி (பாபங்கள்
நீங்கப்பெற்றதால்), கோடிஹத்தி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் ‘கோழிகுத்தி’
யாகிவிட்டது.
கோடிஹத்தி என்றால் சகல பாபமும் நீங்கும் இடம் என்றுபொருள். பின்னர்
இம்மன்ன் தவமிருந்து பின்னாளில் ‘பிப்பல மகரிஷி’ என அழைக்கப்பட்டார்.
மூலவர் (பெருமாள்) அத்தி மரத்தால் ஆனவர்.
அபிஷேகம் இல்லை. சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே! சங்கு, சக்ரம், கதை, அபயஹஸ்தத்துடன் பெரிய
ஆகிருதியுடன் காட்சியளிக்கிறார். விஸ்வரூப தரிசனத்தால், ‘வானமுட்டி பெருமாள்’
என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன
என்கிறார்கள். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி ஸ்மேதமாக ‘ஸ்ரீனிவாசப் பெருமாளாக’
காட்சியளிக்கிறார்.
வெளிப்பிரகாரத்தில், விஷ்வேக்ஷனர், பிப்பல
மகரிஷி, ராமானுஜர் ஆகியோர் உள்ளனர். குடைவடிவ மூலவர் விமானம். இங்கே உள்ள ஹனுமன் சிலையில் ஏழு இடங்களில்
தட்டினால் ஓசை எழும்புமாம். பார்க்கவில்லை. கதவு சாத்தியிருந்தது. வாலில் கட்டப்பட்ட மணியைத் தூக்கி தலையில்
வைத்துள்ளார்.
ஆகா. பலராமரும், செந்திலாதிபதியும் ஞாயிறு காலை பயணம் என முடிவெடுத்து ரொம்ப நாளாச்சு போல. மகிழ்ச்சி. அரிய புகைப்படங்கள். பார்க்க வேண்டிய கோவில்கட்கு வழிகாட்டும் கட்டுரை. பிரமாதம். வாழ்க.
ReplyDeleteதிருநாவுக்கரசு