திருச்சி-சென்னை
நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமம், சேந்தமங்கலம்.
இப்பகுதியை ஒரு குறு நிலமன்னன் ஆண்டுவந்தான். அவரது கோட்டை மற்றும் கோயில் ஒன்று
இக்கிராமத்தில் இருக்கிறது, மிகவும் சிதலமான நிலையில்.
இக்கோயில்
13-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோட்டைக்கோயில்,
ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமாக இருந்திருக்க வேண்டும். தற்போது ஆர்கியாலஜிகல்
சர்வே ஆஃப் இண்டியா. இக்கோயிலைப் புணரமைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்,
ஓரளவிற்குப்பின் பணிகள் தொடரவில்லை. மண்மூடிப் போயிருந்த இக்கோயிலை, மீண்டும் அதே
போல நிர்மாணிக்கின்றனர். நிதி பற்றாக்குறையோ என்னவோ, பணிகள் அப்படியே நிற்கின்றன.
கோயில்
மூன்று பிரகாரத்தைக் கொண்டது. கர்பக்க்ரஹம் மற்றும் அதைச் சார்ந்த மண்டபம், மற்றும்
வெளிப்ப்ரஹாரத்தில் ஓரளவிற்கும் பணிகள் நடந்தேறியுள்ளன. மதில் சுவர்கள், அம்மன் கோயில், வெளி மண்டபம்
யாவும் சிதைந்த நிலையிலே இருக்கின்றன. சிதைந்த இவற்றை வைத்தே, எவ்வளவு மெஜஸ்டிக்காக இக்கோயில் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது.
சிதைந்த கோயிலின் கற்களையே நம்மால், திரும்ப அடுக்க இயலவில்லை. ஆனால், நவீன தொழில் நுட்பம், என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் சில நுட்பங்கள் இல்லாத அந்த நாட்களில் எப்படித்தான் இப்படிப்பட்ட லட்சக்கணக்கான கோயில்களை நிர்மாணித்தார்களோ? அவர்கள் புழங்கிக் கொண்டிருந்த நுட்பம், நிச்சயமாக நேர்த்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
சிதைந்த கோயிலின் கற்களையே நம்மால், திரும்ப அடுக்க இயலவில்லை. ஆனால், நவீன தொழில் நுட்பம், என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் சில நுட்பங்கள் இல்லாத அந்த நாட்களில் எப்படித்தான் இப்படிப்பட்ட லட்சக்கணக்கான கோயில்களை நிர்மாணித்தார்களோ? அவர்கள் புழங்கிக் கொண்டிருந்த நுட்பம், நிச்சயமாக நேர்த்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
தமிழர்களின் கலையும் கோயிலும்
பெருமைகொள்ளவைக்கின்றன என்றாலும், இப்படிப்பட்ட கோயில்களை புணரமைக்க இயலாததும்
சோர்வடைய வைக்கின்றன.
இக்கோயில் போரினால் சிதைவுற்றது என உள்ளூர் மக்கள்
சொல்கிறார்கள். மேல்விவரங்கள்
கிடைக்கவில்லை.
ASI
தனது தளத்தில், வெறுமே எந்தெந்த கோயில்கள் அவர்கள் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன என லிஸ்ட் வாசிக்காமல், அதைப்பற்றிய விபரங்களையும் கொடுத்தால் என்ன?
அந்தப்பக்கம்
சென்றால் அவசியம் போய்ப்பாருங்கள்.
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மி தூரம் தான்.
இறைவன்:
ஆபத்சகாயேஸ்வரர். இறைவி: ப்ரஹண்நாயகி. காலம்: பதிமூன்றாம் நூற்றாண்டு.
சில
புகைப்படங்கள் கீழே:
முண் மண்டபம் |
நுழை வாயில் |
சிதலமடைந்த மண்டபங்கள். |
இது என்னவாக இருக்குமோ? - எவ்வளவு கடினமான வேலை ?? நான்கு அடி அகலம் இருக்கிறது. |
ஆபத் சஹாயேஸ்வரர் - மூலவர் |
அம்மன் கோயில் |
ப்ரஹன் நாயகி |
எப்பொழுது நிறைவுறுமோ? |
இக்கோயில் பற்றிய விபரம் நெட்டில் கிடைக்கும். தொலைக்காட்சியிலும் காட்டுகிறார்கள். 900 ஆண்டுகள் பழமையான கோயில் இது.
அத்திச்வரர். |
திருநாவலூர் -பக்த ஜனேஸ்வரர் |
No comments:
Post a Comment