தீபாவளியும்-மழையும், ஊழலும் அரசியலும் மாதிரி. இன்றும் (26/10/2011) அப்படியே. முதல் நாள் இரவு பிடித்த மழை, தீபாவளியன்று மதியம் வரை நீடித்தது. எனவே ஊரில் யவரும் காலையில் சரியாக ‘வெடிக்க’ முடிய வில்லை போலும். மாலை நான்கு மணிக்கு வெடிக்க ஆரம்பித்தார்கள். இரவு 12 மணி வரை வெடித்து தீர்த்தனர்.
உண்மையிலேயே காது வலிக்க ஆரம்பித்து விட்டது. சப்தம் என்றால் லேசாக இல்லை! வீட்டின் “போர்ட்டிக்கோவில்” போடப் பட்டிருந்த விளக்கின் ‘டோம்’ படால் என கீழே விழுந்து நொறுங்கும் அளவிற்கு! அப்படியென்றால் காதின் “ஜவ்வு” என்ன கதியாகி யிருக்கும்?
தீபாவளியென்றால், இந்திய சூழ்நிலையில், பட்டாசுகள் தவிர்க்க இயலாது தான். ஆனால் ஒலிக்கு ஒரு அளவு வேண்டாம்? அரசாங்கத்தினால், ‘வெடியின் சப்த்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெடிகள் மட்டுமல்ல, நமக்கு மிக நெருங்கிய உறவினரான ‘லவுட் ஸ்பீக்கர்கள்’, மற்றும் ‘ப்ப்ளிக் அட்ரஸிங் சிஸ்டங்க ளுக்கும் கூட அரசின் ஒலி அளவு கட்டுப்பாடு இதோ:
Area/Zone | Day Time | Night Time |
Industrial Area | 75 dB (A) Leq | 70 dB (A) Leq |
Commercial Area | 65 dB (A) Leq | 55 dB (A) Leq |
Residential Area | 55 dB (A) Leq | 45 dB (A) Leq |
Silence Zone | 50 dB (A) Leq | 40 dB (A) Leq |
ஆனால் சர்வ சாதாரணமாக நமது வெடிகள் 200 db ஐ த்தாண்டி வெடிக் கின்றன. ஸ்பீக்கர்கள் ‘அன்பார்ந்த பொது மக்களே!’ என பெருங்குரலில் அதட்டுகின்றன.
தற்போதுதான் உள்ளாட்சி தேர்தல் முடிந்தது. நாமினேஷன் தாக்கல் செய்ய போகும்போது வெடி. தாக்கல் செய்துவிட்டு வந்தவுடன் வெடி. ஜெயித்து வந்ததும் வெடி. ஒவ்வொரு தடவையும், 10000 வாலாக்கள். தாங்கொணா சப்தத்தால், தலை கிறுகிறுத்துப் போய் உட்காரும் சமயம், வெடிவளி (தீபாவளி அல்ல) வந்து விட்டது, நமது துரதிர்ஷ்டம். இந்த சித்திர வதையை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
சிவகாசிக்காரர்கள் இந்த ஒலி அளவு கட்டுப்பாடு பற்றி, யவரையோ ‘கண்டு கொண்டதால்’, கண்டு கொள்வதில்லை போலும். வருடா வருடம் ஒலியின் அளவு கூடிக் கொண்டே போகிறது. தாள இயல வில்லை.
பொதுவாகவே நாம் சப்தம் விரும்பிகள். சாலைகளில் ஓடும் வண்டி களின் ஹாரன்கள் கூட, ரயில்களுக்காகவோ அல்லது கப்பல் களுக்காகவோ செய்யப் பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன்.
லவுட் ஸ்பீக்கர்கள் நமது குடும்ப உறுப்பினர். குழந்தை பிறந்தால் பாட்டு, வயசுக்கு வந்தால் பாட்டு, கல்யாணத்திற்கு பாட்டு, இறந்தால் பாட்டு.
இனி ஐயப்பன் சீசன் வரப்போகிறது. காலை மூன்று மணி முதல், இரவு எவ்வளவு நேரம் வரையிலும் “காது செவிடாகும் வரை” அனைத்து பெரிய/பிளாட்பார கோயில்களிலும் உச்ச ஸ்த்தாயி பாடல்கள் உறுதி. ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்கிரிர்களா? அமைதி வடிவான ‘ஐயப்பனுக்கு கூட’ மலையில் “வெடிவழிபாடு” என்று ஒன்றை வைத்து விட்டனர். நீங்கள் சற்றும், எதிர்பாராத தருணத்தில், அந்த வெடி எழுப்பும் மகா பிரளய சப்தத்தில், இதயம் நின்று விடாமல் இருக்க ஐயப்பன் தான் அருள் செய்ய வேண்டும்.
ஆடி மாசம் என்றால், அனைத்து அம்மன் கோயில்களிலும் எல்.ஆர். ஈஸ்வரி, ஒருமாதம் குத்தகை எடுத்து விடுவார். அருகில் ஆஸ்பத் திரியோ? அலுவலகமோ? எதுவானல் என்ன? அவர் கத்தலாம்.
பஸ்ஸில் பயணம் செய்யும் போது கூட, பேருந்தில் சக்கரம் இருக்கிறதோ இல்லையோ, ஸ்பீக்கர் இருந்தாக வேண்டும். இலவச இணப்பாக வீடியோவும். நெடுதூரம், பேருந்தில் இரவு ரங்களில் போக வேண்டியிருந்தால், உங்கள் நிலைமை என்ன வாகும்?
நான் மேற்சொன்ன, லிஸ்ட்டில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் வால்யூம் தான் ஹீரோ! மிக உச்சமாக, இதற்கு மேல் திருகவே முடியாது என்ற அளவுக்கு, வால்யூம் இருக்க வேண்டும். இல்லா விடில் ரகளை.
நாய்ஸ் பொல்லியூஷன் பற்றி நமது விழிப்புணர்வு சந்தேகத்திற் கிடமானது.
இதே வலைப்பூவில் இது குறித்து எனது முந்தைய இடுகைக்கு
இந்த இம்சையை பலமுறை அனுபவித்திருக்கிறேன்.காவல்துறையினருக்கு இதை கேட்கும் அதிகாரம் உள்ளது.ஆனால்,அவர்களை வைத்துக்கொண்டே ஸ்பீக்கரில் கத்துவார்கள். :(
ReplyDelete"செவி"ட்டில் அறையும் பதிவு!
ReplyDeleteஎங்கே போனாலும் கால் கிலோ பஞ்சு எடுத்துட்டு போகணும் போல!