பல ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பான நூலகத்தை ‘தீ’ வைத்து எரித்தனர், சில இன/மொழி வெறியர்கள். இன்று மற்றொரு விதத்தில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, புதைகுழி தோண்டி யுள்ளது தமிழக அரசு!
கட்சியின் பெயரிலேயே ‘அண்ணா’வை வைத்திருப்பவர்கள், 'அண்ணா' அவர்கள், ஒரு அதிசயத் தக்க, 'புத்தகவிரும்பி' என்பதை அறிவார்களா?
அரசின் முடிவு மக்களனைவருக்கும், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக் கிறது! அதிர்ஷ்ட வசமாக, அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் (கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட), எழுத்தாளர் சங்கங்களும், அரசின் இந்த கொள்கை(!!) முடிவினை எதிர்த்திருக்கின்றனர்.
இவ்வாறு ‘வெறி கொண்டு’ ஆட்டம் போட்டால் மக்களின் ஆத்திரத் திற்கும், அதிருப்திக்கும் ஆளாவோம் என்பது கூடவா தெரியாது? ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறார்களா?
மேற்படி நூலகம் இருக்கும் கட்டிடத்தை, குழந்தைகள் சிறப்பு மருத் துவ மனையாக மாற்றப் போகிறார்களாம். (அறிவுக்) கண்களை நோண்டி எடுத்துவிட்டு, ஆரோக்கியத்தினை வழங்கப் போகிறார் களாம்.
சிலர் என்றுமே திருந்தப் போவதில்லை, என்பதற்கு இந்த மாதிரியான "தர்பாரே' சாட்சி!
தற்போது இந்த நூலகத்தை மூட வேண்டிய நிர்பந்தம் என்ன? தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ‘மருத்துவமணை அமைப்போம்’ என்பது எல்லாம் சும்மா சால்ஜாப்பு! குழந்தைகள் மருத்துவ மணை கட்ட, இடமே இல்லையா? சும்மா கிடக்கும் ‘பதிய செக்ரடேரியட்டை’ என்ன செய்யப் போகிறார்கள்? அங்கே கட்ட வேண்டியது தானே? அல்லது இருக்கும் வேறு குழந்தைகள் மருத்துவமனையினை 'மேம்படுத்தலாமே'?
மேலும் நூலகத்தின் கட்டமைப்பு வேறு! மருத்துவமனையின் கட்ட மைப்பு வேறு. எப்படி ‘இதை’ , ‘அது’ வாக மாற்றப் போகிறார்கள்?
- பல வெளி நாட்டினரும் பார்வையிட்டு, பாராட்டிச் சொன்ன ஒரு நூலகம்,
- ஆயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தும் ஒரு நூலகம்,
- தமிழகத்தின் பெருமைச் சின்னங்களுள் ஒன்றாக இருக்கும் நூலகம்,
- ஒரே நேரத்தில் 5000 பேர்கள்கூட அமர்ந்து படிக்க வசதிகளைக் கொண்ட நூலகம்,
- கணினி தொழில் நுட்பங்களைக் கொண்ட நூலகம்,
- மாற்றுத் திறனாளிகள் கூட, வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணம் வடிவமைக் கப்பட்ட ஒரு நூலகம்,
- ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று என்ற சிறப்பபினை பெற்றது!
- நகரின் மையமான இடத்தில், நல்ல இட வசதியுடன் அமைக்கப் பட்ட நூலகம்!
- எவ்வாறு அமையவேண்டும், என்பதற்கு இலக்கணமாக திட்டமிட்டு, அமைக்கப்பட்ட நூலகம்!
- ஐந்தரை லட்ச்ம் புத்தகங்களைக் கொண்ட நூலகம்!
- ஓலைச்சுவடிகள் கூட, ஆய்வுக்காக பாதுகாத்துப்படும் நூலகம்!
- சிறந்த கூட்ட அரங்குகளை உள்ளடக்கிய நூலகம்!
- ஆயிரமாயிரம் பேர்கள், ஆர்வத்துடன் புத்தக நன்கொடை அளித்த நூலகம்!
--இதைத்தான் இன்று பிய்த்துப் போடுவேன் என்கின்றனர்.
வெட்டிகௌரவம் பார்த்து, சமச்சீர் கல்வித்திட்டம் வேண்டாம் என்றார்! புதிய செக்ரடேரியட் வேண்டாம்-அதனை ஆஸ்பத்திரியாக மாற்றுவேன் என்றார்! அந்த லிஸ்ட்டில் தற்போது நூலகம்!.
கட்சியின் பெயரிலேயே ‘அண்ணா’வை வைத்திருப்பவர்கள், 'அண்ணா' அவர்கள், ஒரு அதிசயத் தக்க, 'புத்தகவிரும்பி' என்பதை அறிவார்களா?
அரசின் முடிவு மக்களனைவருக்கும், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக் கிறது! அதிர்ஷ்ட வசமாக, அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் (கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட), எழுத்தாளர் சங்கங்களும், அரசின் இந்த கொள்கை(!!) முடிவினை எதிர்த்திருக்கின்றனர்.
தனது அமைச்சரவையில் ஆறு பேரை சேர்த்துக்கொள்ளட்டும்! அறுபது பேரை நீக்கட்டும். அது அவர்களது கட்சியின் விவகாரம். ஆனால், இதுபோன்ற ஒரு விஷயங்களிலாவது, கொஞ்சம் ‘புத்தியை’ உபயோகிக்கவேண்டும் விழைகிறோம்.
அரசாங்கமே நூலகத்தை ஒழிக்கும் வினோதம் ‘தமிழகத்தை’ தவிர, வேறெங்கும் நடக்கவொண்ணா அதிசயம்! இதுவே மேற்கு வங்கத் திலோ, கேரளத்திலோ நடந்திருந்தால், அரசியல் கட்சிகள் அல்ல-மக்களே இந்த நேரம் தெருவிற்கு வந்திருப்பார்கள்.
பாடம் கற்றுக்கொள்ள மறுப்பவர்களை நினைத்து பரிதாப்பட வேண்டி யுள்ளது.
அரசின் விபரீத முடிவினை எதிர்த்து 'மக்கள்' வீதிக்கு வரவேண்டும்!
-0-
No comments:
Post a Comment