Saturday, November 12, 2011

என்ன தவம் செய்திட்டோம்!

“வசூல்ராஜா M.B.B.S  என்ற திரைப்படத்தில், கமல், தனக்கு பதிலாக, M.B.B.S நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக, வேறு ஒருவரை மிரட்டி, செட்டப் செய்வார். சினிமா என்பதால் சிரித்து விட்டு போய்விட்
டோம். ஆனால் நிஜமாக ஒருவர் பத்தாவது தேர்வு எழுதுவதற்காக, “டூப்போட ஆள் பிடித்தார். தேர்வுக் கூடத்தில் டூப் போட்டவர் மாட்டிக்கொண்டார். 

தேர்வு எழுதியிருக்கவேண்டியவர் மீது, கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டது. உடனே காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ஒளிந்து கொண்டாராம்.


இந்த செயலைச் செய்தவர் ஒரு பள்ளி மாணவன் என்றால், புரிந்து கொள்ள முடியும். இந்த வேலையை செய்தவர் சாதாரணமானவர் அல்ல! ஒரு எம்.எல்.ஏ.  அது மாத்திரமல்ல... அவர் ஒரு ‘கல்வி அமைச்சரும்’ கூட!

இவர் தனக்கு பதிலாக தேர்வு எழுதச் சொல்லி மிரட்டினாரா இல்லை வேறு ஏதாவது ‘பசைவைத்தாரா எனத்தெரியவில்லை!

இவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனவாம்! ஆனால் இவரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் தயங்கி ‘மௌனம் சாதிக்கிறாராம்! சம்பந்தப் பட்ட அமைச்சர் பதவி விலக மறுக்கிறாராம்.

நம்மை ஆண்டுகொண்டிருக்கும், இப்படிப்பட்ட அரசியல் வாதிகளைப் பெறுவதற்கு, நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?

No comments:

Post a Comment