Saturday, January 8, 2011

CELL PHONE

தமிழன் என்று ஒரு இனமுண்டு ...தனியே அவருக்கு என்று ஒரு "செல்" உண்டு!!!

1 "டமால் டுமால் - தகர டப்பா" என்று விபரீதமா "ரிங்" டோண் வைத்துகொள்வார். அதையும் உச்ச ஸ்தாயியில் அலற விடுவார்.

2. தினம் ஒருதடவை - முடிந்தால் ஒரு காலுக்கு ஒரு தடவை ரிங் டோன் மாற்றுவார்.

3. கல்யாண வீடு அல்லது கருமாதி வீடு அல்லது மீட்டிங் - எதைப்பற்றியும் கவலை இல்லாமல் பெருங்குரலெடுத்து உரையாடுவார் . மெதுவாக பேசினாலும் அடுத்த முனையில் இருப்பவனுக்கு காதில் விழும் என்பதெல்லாம் இவருக்கு தெரியாது. . பேருந்தில் இவர் பக்கதில் 
உட்கார்ந்தவன் தீர்ந்தான்.

4. அடுத்த முனையில் இருப்பவன் காதில் இரத்தம் வரும் வரையிலோ அல்லது அவுட் ஆஃப் கவரேஜ் வரும் வரையிலோ விடமாட்டார்.

5 இரண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவையாவது யாரிடமாவது பேசாவிட்டால் - அய்யாவுக்கு தலையில் பிராண்டல் ஆரம்பமாகிவிடும்.

6 சில விந்தை ஆசாமிகள்  அந்த முனயில் இருப்பவர் கட் பண்ணி விட்டால் கூட இவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருப்பார். கொஞ்சம் ஃபிலிம் காட்டுவார்.

7 ரோடில் சைக்கிள் பெல்  அடித்தால் கூட தனது செல் ஃபோனை தொட்டுப் பார்த்துக்கொள்வார்.

8 ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது செல் ஃபோனை மாற்ற வேண்டும். அதுவும் இரண்டு சிம் மாடலாக இருந்தால் ரொம்ப நல்லது.

9. குறைந்த பட்சமாக  நாலு "சிம்" மாவது ஸ்டாக் வைத்து இருப்பார்.

10. "மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி" முழுசுமா வந்து விட்டால் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ - தெரியாது.

1 comment: