Wednesday, January 26, 2011

போட்டாலும் தெரியல..போடாட்டியும் தெரியல...

சிறு வயதில் மூக்குக் கண்ணாடி மீது ஒரு கிரேஸ். இதை அணிந்தால் "ஒரு அறிவு ஜீவித்தனமான லுக்"  வந்துவிடும் என விரும்பியிருக் கிறேன்.  வயது தேயத் தேய இந்த "எக்ஸ்டிரா அட்டேச்மெண்ட்"  தரும் உபாதைகள்  மறந்து எங்கேயாவது வைத்துவிடுவது, உடைந்துபோவது 
என பல விதமானவை.  "தினமும் இதே வேலயாப்போச்சு" என்ற "இன் சொல்லுடன்"  மனைவி தேடிக்கொடுப்பதும் பழகி விட்டது.


மூன்று மாதமாக கண்ணாடி போட்டால் அருகில் இருப்பதும்போடா விட்டால் தொலைவில் இருப்பதும் தெரியாமல் போக, அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குச்  சென்றேன்.  பழைய கார்டுகள்  (முன்பே அங்கு வந்து சென்றவர்கள்)  பகுதிக்குச் சென்று பதிவு செய்துவிட்டு காத்திருக்க, 
 சற்று நேரத்தில் எனது "கேஸ் ரெகார்டுடன்"  இங்கு 
"பாலாராமன் யார் சார்" மலையாள வாசனையுடன் விளிக்கப்பட்டேன்.  


இந்த ஆஸ்பத்திரியில் "42-கிலோவிற்கு" மேல் போனால் வேலை கிடையாது என்பது போல்,  அனைத்து நர்ஸ்களும் ஈர்க்குச்சி-ஈர்குச்சியாய், பெரும்பகுதி மலையாள உச்சரிப்புடன் உலவுகின்றனர்.


லென்ஸ்களை மாற்றி மாற்றி போட்டுக்காட்டி எது பரவாயில்லை என்று கேட்க, ஒரு கட்டத்தில் எது நன்றாக தெரிகிறது அல்லது இல்லை என குழம்பிப்போனேன். இந்த ஆளுக்கு "டைலேஷன் தான் சரிப்படும்" என தீர்மானித்து,  பாப்பாவை அகலப்படுத்தும் சொட்டு மருந்து போட்டு கண்மூடியிருக்கச் சொன்னார்கள். கண் திறந்தால் அடுத்த  மூன்று மணி 
நேரத்திற்கு உலகமே பிரகாசம்.


ஒருவழியாக எனக்கு வேண்டிய "பவர்" என்ன என்று தீர்மானிக்கப்பட்டு,  
இரண்டு மணி நேரம் காத்திருந்து "கம்ப்யூட்டருக்கு" ஒரு கண்ணாடியும் மற்ற நேரத்திற்கு ஒன்றுமாக இரண்டு பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


"நடந்தது என்ன..?" என்று விவரித்து விட்டு,  சாப்பாடு போடுவாயா என பிராட்டியாரிடம் வினவ,  "அதெல்லாம் சரி...எங்கே கண்ணாடி?"


ஆஹா...  "ரிசப்ஷன்"  டேபிளிலேயே அவற்றை மறந்து வைத்து விட்டு வந்தது நினவுக்கு வர...மீண்டும் ஆஸ்பத்திரிக்குப் போய்..........



No comments:

Post a Comment