Tuesday, January 18, 2011

சபரி மலை சோகம்


நம் நாட்டில் 100 அல்லது 200 பேர் சாவது என்பது பெரிய
 விஷயமில்லை போலிருக்கிறது. நாம் மறத்துப்
போய்விட்டோமா
அல்லது 120 கோடியில் 
கொஞ்சம் 

போனால் என்ன என்று நினைக்கிறோமா அல்லது நாம் 

சாகாதவரை பரவாயில்லை என் சொரிந்துகொண்டு
போகத்துணிந்து விட்டோமா... ஒன்றும் புரியவில்லை..




பல இலட்சம் பேர் - ஒரே நாளில் - ஒரே நேரத்தில் கூடும் 
சபரிமலையில் எந்த நேரத்திலும் - எந்த இடத்திலும் 
இம்மாதிரியான விபத்துக்கள் நிகழக்கூடும் என்பதினை 
கணிக்க முற்றிலுமாக தவறிவிட்டோம்.

மின் வசதி உட்பட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் 
இல்லாத "புல்மேடு" பகுதியில் லட்சக்கணக்கில் மக்கள் 
குவிய எப்படி அனுமதித்தார்கள்?  4  போலீஸ்காரர்கள்
 போதுமென்றா?  ஒரு மந்திரியோ ஒரு வி.ஐ.பி யோ 
வருவதாக இருந்தால் இப்படித்தான் 4 காவலர்களோடு 
நிறுத்தியிருப்பார்களா?  பல லட்சம்பேர் கூடிய இடத்தில்
இப்படி  ஒரு "மேம்போக்கான" ஏற்பாடா?

வருடா வருடம் கூட்டம் கூடிக்கொண்டே போவதையும் 
அதற்கேற்றாற் போல பாதுகாப்பு  ஏற்பாடுகள் வேண்டும் 
என்பதினையும் யூகிக்கவே  இல்லையா?  
 அரவனை தயார் செய்து "துட்டு" பார்த்தால் போதும் என 
நினைத்தார்களா?

ஒரு ஆபத்து நிகழும்போது - தற்குறித்தனமாக-
 பித்து பிடித்தாற்போல நடந்து கொள்ளும்  நமது 
மக்களின் மனோபவாம் பற்றி ஏதேனும் அறிவார்களா?

சபரிமலை பற்றி தேவஸ்தானக்கமிட்டி தீர்மாணிக்க
 வேண்டிய வேளை வந்து விட்டது. கீழ்க்கண்ட வற்றில் 
ஏதாவது நடந்தால்   எதிர்காலத்திலாவது இம்மாதிரியன
 துயரங்கள் நடவாமல் தடுக்கலாம்.

(1) ஒரு மலைப்பிரதேசத்தில் - ஒரு அளவுக்குமேல் கூட்டம் 
சேர முடியாது   என்பதினை தேவஸம் போர்டு உணர வேண்டும்.
  ஆண்டு முழுவதும் -   வேண்டுமானால் ஒரு சில நாட்கள் 
   நீங்கலாக - சன்னிதானம்   திறந்திருக்க  வேண்டும்.
   Highly Orthodox தந்திரிகள் இக்கால்      தேவைகளையும் -  
   கூட்டத்தினையும் உணர்ந்து ஆட்சேபிக்காமல் - 
    கொஞ்சம் practical ஆக இருக்க   வேண்டும்.

(2)  சீஸன் தரிசனத்திற்கு - முன்னதாகவே பதிவு செய்யதல் 
      கட்டாயமாக்கப் பட வேண்டும்.  குறிப்பிட்ட அளவுக்குமேல்    
      அனுமதியில்லை என கண்டிப்பாக   சொல்லியாக வேண்டும் - 
      குறிப்பாக மகர ஜோதிக்கு!.

 (3)  ISRO - உபயக்கரம் நீட்டியதை பிடித்துக்கொண்டு 
       சன்னிதானத்திற்கு   செல்லவும்- திரும்பவும் மாற்று வழிகளை    
      ஆராய வேண்டும்.

(4)   மலையில் எந்தவொரு இடத்திலும் கூட்டம் சேர 
       அனுமதிக்காமல்        தரிசனம்  ஆனவுடன் "ஆச்சு ....போதும்" 
        என    கீழே அனுப்பிவிட    வேண்டும். இதற்கு   போதுமான 
        காவலர்களை - பக்கத்து    மாநிலத்திலிருந்தாவது கேட்டுப் 
         பெறவேண்டும்.

     ஏதாவது செய்வார்களா...இல்லை அடுத்து ஏதாவது நிகழும் 
    வரை  காத்திருப்பார்களா?


No comments:

Post a Comment