இந்த 'தனி வலை' அல்லது "பிலாக்கில்" ஏன் எழுத வேண்டும் என
யோசித்தால் சிறு வயதில் 'கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில்"
எழுதிப்பார்த்த 'வெண்பாக்களின்' அல்லது கட்டுரைகளின் - ஆசைத்தொடர்ச்சி போல் தெரிகிறது. கிட்டத்தட்ட ஆரம்ப எழித்தாளர்கள் அனைவரும் முயன்று பார்த்த "கையெழுத்து பத்திரிகை" போல. நானும் எழுதுவேன் என கிணற்றுக்குள்ளிருந்த்து கத்தும் முயற்சியோ என்னவோ? "சுஜாதா" சொன்னது
போல 15 நிமிட புகழுக்கு ஆசையா? அல்லது தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளும் ஆசையா? வடிக்கட்டிப் பார்த்தால் தோன்றியதை
யோக்யமாக எழுதிவைக்க ஒரு இடம்..என்னைப்பொருத்தவரை அவ்வளவுதான்.
======================================================
கடந்த ஒரு மாதமாக BSNL -ல் "தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான" பிரச்சாரங்கள்
ஒரு திருவிழாபோல நடந்து முடிந்தது. எது வெல்லப் போகிறது என்பது 03/02/2011
அன்று தெரியும். போட்டியிடும் இரு முக்கியமான சங்கங்களும் ஓரளவு 'இடது'
சிந்தனை உள்ளவர்கள் தாம். "உலகத் தொழிலாளர்களை" ஒன்று படச்
சொல்லிவிட்டு 'உள்ளூர் தொழிலாளர்களுக்காக' தேர்தல் நடத்துகிறார்கள்.
BSNL- ன் மார்க்கெட் அதல பாதாளத்தை நோக்கி! நிதி நிலை படு மோசம்.
வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டு லட்சம் பேருக்கு சம்பளம்
கொடுக்கவேண்டும்! கருவிகள் வாங்க வேண்டும் ! ஊதாரி செலவுகள்
செய்யவேண்டும்! நேர்மைக்கு புறம்பான வழியில் சம்பாதிக்க முயற்சிகள் தனி!
அரசாங்கமே தன்னுடைய நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் வினோதம்!
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது - காலத்தை ஓட்டும் - பொறுப்பற்ற நிர்வாகம்!
மேல் முதல் கீழ் வரை பணிக்கலாசரம் மறந்த நிலை!
வேடிக்கை என்னவென்றால் BSNL காக்கப்பட வேண்டும் என "அனவரும்"
"கோட்-சூட்" போட்டுக்கொண்டோ.."ஜோல்னா பை" போட்டுக்கொண்டோ விடாது
உபதேசிக்கின்றனர்.
இருவரது பிரச்சாரங்களை கவனித்தால் ....
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கான்பது அறிவு" என்ற குறளில்...
"அறிவு" என்பதினை "அரிது" எனப்படித்தால் சரி எனத் தோன்றுகிறது.
ம்ம்ம்ம்ம்..........................................
=========================================================