நீங்கள் "பாஸ்போர்ட் அப்ளிகேஷன்" பூர்த்தி செய்திருக்கிறீர்களா? சென்ற வாரம் எனது உடனுரை நன்பர் ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டது. அவர் தனது குடும்பத்தாருக்கு பாஸ்போர்ட் வேண்டி, ஒரு விண்ணப்பம் வாங்கிவந்து விட்டார். அதில் 'Surname' என்பது முதலிலும், Given name என்பது பின்பகுதியிலும் இருந்து விட்டது.
இதில் 'Surname' என்பதில் எதைப்போட? தமிழராகிய நமக்கு பெயர் என்பது ஒரு இனிஷியல்-அப்புறம் ஒரு பெயர்-அவ்வளவுதான். 'R. பலராமன்' ல் வரும் 'R' என்பது அப்பாவின் பெயர் அவ்வளவே!
தென்னிந்தியர்களில் சிலர், இரண்டு இனிஷியல் வைத்திருந்தால் முதல் எழுத்து என்பது ஊரையும், இரண்டாவது எழுத்து தகப்பனாரின் பெயரையும் குறிக்கும். வெளி நாட்டில் இந்த "Surname"-ஐ வைத்துத்தான் கூப்பிடுவார்கள். எவரேனும் 'கொலைகாரன்பட்டியில்' பிறந்து அதை இனிஷியலாகவும் வைத்துவிட்டாரெனில் தீர்ந்தது! வெளி நாட்டில் தயங்காமல் 'மிஸ்டர் கொலைகாரன்' சார் என கூப்பிட்டு விடுவார்கள்.
இந்த "Surname" குழப்பம் தவிர, first name, middle name, last name என்று 'தலை சுழல வைக்கும் மூன்று வகையறாக்களும் நம்மிடம் உண்டு. திரும்பத் திரும்ப தெரிந்து கொண்டாலும் புரியாத ஒரு விஷயங்களில் தலையாயது இந்த மூன்றும். முதல்,நடு,கடைசி பெயர் என்பது எதைத்தான் குறிக்கிறது?
இருக்கும் குழப்பம் போதாதென்று, ஒருதடவை நான் 'Net Banking' பாஸ்வேர்டை மறந்துவிட்ட போது, இந்த மூன்று பெயர்களோடு, அம்மாவின் பெயரையும் கேட்டனர். விபரீதமாக, உங்களது 'Pet Name' என்னவென்று வேறு கேட்டார்கள். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலை சுற்றாமல் என்ன செய்யும்?
நம் குடும்பங்களில், குழந்தைகளுக்கு, அழகான பெயர் ஒன்றை வைத்துவிட்டு, அதைச் சொல்லி கூப்பிடாமல், ஒரு செல்லப் பெயர் வைத்து கூப்பிடுவார்கள். 'வெங்கடராமன்' வெங்கி ஆவதும், 'பிச்சுமணி' பிச்சை ஆவதும், "கிருஷ்ணமூர்த்தி" கிட்டு அவதும் கூட பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவரின் மகனின் செல்லப் பெயர் 'அக்குண்டு!' ஒரு நாள் அவரைத்தேடிக் கொண்டு அவரது அலுவலகம் போக நேர்ந்தது. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் 'யாரைப் பார்க்க வேண்டும்" என வினவ, அவரின் உண்மைப் பெயர் மறந்து போய், பழக்க தோஷத்தில் 'அக்குண்டு' என்று சொல்லி விட்டேன். அந்தப் பெண் பதறிப்போய், 'என்ன அணுகுண்டா?' என சீட்டை விட்டு எழுந்துவிட்டாள். நல்ல வேளையாக, அந்த பெண் 'போலீசையோ அல்லது வெடிகுண்டு நிபுனரையோ கூப்பிடுவதற்குள், நிஜப்பெயர் ஞாபகம் வந்துவிட்டது. 'கிருஷ்ண மூர்த்தி!!'
என்ன சம்பந்தம்?
ஹர்பஜன் எப்படி பஜ்ஜி ஆனார்?
உங்கள் சுவாரஸ்யத்திற்கு எனக்கு தெரிந்த செல்லப் பெயர்கள் சிலவற்றை கொடுத்திருக்கிறேன்.
அடைப்பில் உள்ளது நிஜப்பெயர்
சேமா (சந்தம்மா)
டொம்மி (பிருந்தா)
சீச்சு (ஸ்ரீதர்) -
சேமியா (ரம்யா)
கோச்சி (கோதாவரி)
விக்கி (விக்னேஷ்)
தச்சு (சரஸ்வதி)
கோண்டு (கோவிந்தராஜ்)
குக்கி (ஷ்ரவன்)
====================================
No comments:
Post a Comment