Sunday, September 6, 2015

மோடியும் – தமிழும்.


மோடியைப் பிடிக்காது. எனவே அவர் என்ன சொன்னாலும் எதிர்த்தாக வேண்டும். எது செய்தாலும் ரகளை செய்யனும் என்பது நம்மைப் பீடித்துள்ள சின்ட்ரோம்.

தனது கடுமையான நிகழ்ச்சி நிரலிலும், தலை நகரிலிருந்து ஒரு பிரதமர், ஒரு புத்திசாலி தமிழ்ப் பெண்ணிடம் உரையாடுகிறார், என்பதை மறந்துவிட்டு, அந்த பெண் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஏன் இந்தியில் பதில் சொன்னார் என ஆரம்பித்துவிட்டனர்.

அவர் ஒரு தமிழ் மாணவியிடம்தான் உரையாடினார் என்பதை சௌகரியமாக மறைத்துவிடுவர். அந்தப் பெண் என்ன பேசினார் என்பதைப் பற்றி ஒரு ரிப்போர்டிங் இல்லை. அதற்கு பிரதமர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பற்றியும் அக்கறையில்லை. அவ்வளவுதான் நாம்.

அந்தப் பெண் தமிழிலா பேசினார்? இல்லையே? ஒரு அயல்மொழியில் தானே? அதற்கு பிரதமர் ஸ்பேனிஷிலோ, ஃபிரஞ்சிலோ பதலிளித் திருந்தால் கோபப்படலாம். அட... குஜராத்தியில் பதில் சொல்லியிருந்தால் கூட ஆட்சேபிக்கலாம். இந்தியில்தானே சொன்னார். அந்தப் பெண்ணிற்கு இந்தி தெரியாது என யாராவது சொன்னார்களா?

சரி.. அவர் பேசியது நாட்டிற்கே புரியனும் என்று ஆரம்பித்தால், எந்த மொழியில் பேசினால் அதிகம் பேருக்கு புரியும்? பரவலாகப் பேசப்படும் மொழி எது? அதில்தானே பதில் சொன்னார்?

அந்த பெண் ஏன் தமிழில் பேசவில்லை என யாரும் ஆட்சேபிக்க வில்லை? அப்படி கேட்டிருந்தால், தமிழ்நாட்டில் அனைவருக்கும் புரிந்திருக்குமே? மோடி கூட இதை வரவேற்றிருக்கக் கூடும். ஒரு இன்டர்ப்ரட்டர் போட்டு, மோடி பேசியதும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இந்தியில் பேசுவது ‘திணிப்பு’ என்றால் அன்னிய மொழியில் பேசுவது எந்த வகையில் சேர்ப்பது?

வெளினாட்டு ஆங்கிலம் கற்றாலும் கற்றுக்கொள்வொமே தவிர இந்திய மொழிகள் வேண்டாம் என்பதுதான் நிலைபாடு என்றால், அது தமிழுக்கு நல்லதல்ல. இந்த நிலைபாட்டினால்தான், தமிழக பள்ளிகளில் தமிழே இல்லாமல் போய்விட்டது.

இந்தத் தலைமுறையினருக்கு தமிழில் தொடர்ச்கியாக பேசவே வரவில்லை. அவர்களது வொகபலரி ஐம்பது வார்த்தைகளுக்குள் அடக்கம். அதுவும் சென்னைத் தமிழ் என்றால், அந்த ஐம்பது வார்த்தைகளுமே படுகொச்சையாக இருக்கும். கனவான்களே, கொஞ்சம் பள்ளிகள்-கல்லூரிகள் பக்கம் போய்ப் பாருங்கள். அவர்கள் வாயில் தமிழ் வருகிறதா என்று கவணியுங்கள்.

அட.. புத்திசாலிகளே! தமிழுக்கு ஆபத்து இந்தியினால் அல்ல; ஆங்கிலத்தால்தான். இதை எந்த காலத்தில் புரிந்து கொள்வீர்களோ தெரியவில்லை! ஒருவேளை தமிழ் வெறும் பேச்சு மொழியான பின்னால் புத்தி வருகிறதோ என்னவோ?

இத்தாலியில் சோனியா பேசினால் ஒத்துக் கொள்வார்கள். இந்தியை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, பாராளுமன்றத்தில் பேசும் நபர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பிரதமர் இந்திய மொழியில் பேசினால் கொலைபாதகச் செயல்.. இல்லையா?

இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமர், ஒரு 15 வயது சிறுமியிடம், அவரது புத்திசாலித் தனத்திற்காகவே, கூப்பிட்டு பேசியிருக்கிறார்? இதையே காங்கிரஸ் செய்திருந்தால், ஒரு தமிழ்ப்பெண்ணிடம் ராகுலோ-சோனியாவோ பேசிவிட்டார் என தம்பட்டம் போட்டிருக்க மாட்டார்கள்?


நம்மைப் போல ஆங்கில அடிமைகள் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். 

3 comments:

 1. மோடியைப் பிடிக்காது. எனவே அவர் என்ன சொன்னாலும் எதிர்த்தாக வேண்டும். எது செய்தாலும் ரகளை செய்யனும் என்பது நம்மைப் பீடித்துள்ள சின்ட்ரோம்.

  இதை இப்படியும் கொள்ளலாம் தானே!

  மோடியைப் பிடிக்கும். எனவே அவர் என்ன சொன்னாலும் எதிர்க்கக் கூடாது. எது செய்தாலும் ரகளை செய்யக் கூடாது என்பது நம்மைப் பீடித்துள்ள சின்ட்ரோம்.- இல்லையா!

  எனக்கு மோடியோ, எவரிலுமோ பிரமையில்லை. ஆனாலும் இவ்விடயத்தில் அச்சிறுமி பிரதமருக்கு தமிழ் தெரியாதென்பதால் , ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அதற்கு சிறுமிக்குத் தெரியாத இந்தியில் பதில் , இடறுகிறது.

  நான் பிராஞ்சுக்கு வந்த புதிதில், ஆங்கிலத்தில் பிரஞ்சியரிடம் சில தெரியாத விடயங்களைக் கேட்பேன். அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்தில் பதில், தெரியவில்லையா? ஆங்கிலம் புரியவில்லை என கூறுவார்கள். என்றும் பிரஞ்சில் பதில் கூறி என்னைச் சங்கடப்படுத்தவில்லை.

  இது தவிர , நீங்கள் இங்கு குறிப்பிட்ட தமிழை அழிப்பவர், ஒழிப்பவர் யாரென்ற விவாதத்துக்குள் நான் வரவில்லை.
  ஆனால் மோடி தமிழை வாழவைக்க வந்தவரில்லை. தமிழர்களே ! தமிழை வைத்து இரட்டை வேசம் போடுகிறார்கள். இவர் எம் மாத்திரம்.
  நம்மைப் போல ஆங்கில அடிமைகள் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். - மிக உண்மை.

  ReplyDelete
 2. சரியாக சொன்னீர்கள். பிரதமர் தமிழில் பேசியிருக்க வேண்டும் என்பது அல்ல குற்றம் சொல்பவர்களின் எதிர்பார்ப்பு. அந்த தமிழ்ப் பெண்ணிடம் பிரதமர் அந்நிய நாட்டு பாஷை ஆங்கிலத்தில் பேசவில்லை என்பதே அவர்கள் கவலை.

  ReplyDelete
 3. இவ்வளவு ஏற்பாடு பன்னுனவுக அந்த சிறுமியிடம் நீ உனது தாய் மொழியில் பேசு அவர் அவரது தாய்மொழி குசராத்தில் பேசுவார் English sub title போடுவதற்கு வழி வகை செய்திருக்க வேண்டும்...எங்களுக்கு இந்தியும் வேண்டாம் இங்கிலீசும் வேண்டாம்..22+ மொழியையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்குங்கள்..இல்லாட்டி பிரிட்டிசு இந்தியாவிற்கு முந்தய நிலைக்கு இந்தியா போக முயற்சிக்கும்..தேவை அய்க்கிய இந்திய குடியரசு(United States of India)

  ReplyDelete