Sunday, September 13, 2015

மீண்டும் வாழ்ந்தால்…

வெளியூருக்குச் சென்றுவிட்டு வந்த எனது நன்பர் ஒருவர், தனது அனுபவங்களை எப்பொழுதும் போல பகிர்ந்து கொண்டார். சென்ற இடத்தில் தனது பேரக் குழந்தையையும் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னார். பொடியனுக்கு இரண்டு வயது கூட நிரம்பி யிருக்காது. எல்லா குழந்தைகளையும் போல, தாத்தா ஊருக்கு கிளம்பும்போது அழுது, ஆர்பாட்டம் செய்திருக்கிறான். குழந்தையின் தாய், நீங்க கிளம்புங்க.... வீட்டுக்குள் போனால் சரியாகிடுவான் என்றிருக்கிறார். அப்படித்தான் நடந்திருக்கிறது. எனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் நிறையவே நிகழ்ந்திருக்கிறது என்றாலும், வீட்டிற்குள் சென்றதும் சடுதியில் தனது ‘மூடை (Mood)’ மாற்றிக் கொண்ட அந்த சிசுவின் மனோபாவம் இப்பொழுது வசீகரிக்கிறது, யோசிக்க வைக்கிறது. குழந்தைகளின் துக்கமும், அழுகையும் Carry forward ஆவதில்லை போலும். அந்தந்த கணத்தில் வாழ்ந்து தீர்த்து விடுகின்றனர்.

உண்மைதான். பாலகர்களிடமிருந்து நாம் (குறிப்பாக பெரியவர்கள்) கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது. சிறுவர்கள் சிரிப்பதற்கும் ஆனந்தமாய் இருப்பதற்கும் வெளிக்காரணம் ஏதும் தேவையில்லை. அவர்களின் இயல்பான நிலையே சந்தோஷமும் சிரிப்பும்தான். அவர்கள் நம்மைவிட தைரியமாகவும், தீவீரமாகவும் வாழ்வது புரிகிறது. நாமும் அப்படித்தானே சிறுவயதில் இருந்திருப்போம்? ஆனந்தத்தில் திளைக்கும் அந்த மனோ நிலை, வயது ஏற-ஏற மாறிப்போய், சிடுமூஞ்சிகளாக மாறிவிட்டோம். நாளில் ஒருமுறையாவது ஆனந்தமா யிருக்கிறோமா, சிரிக்கிறோமா என்றால், தலையைச் சொரிய வேண்டியதாய் இருக்கிறது.

அவர்களிடமிருந்து என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம்?

ஒவ்வொரு நாளும் - புத்தம் புதியகாலை:

அவர்கள் ஒவ்வொருதினத்தையும் புத்தம் புதிதாகத் துவக்குகிறார்கள். அடுத்த தினத்திற்கு ‘அனுபவிப்பதற்காக’ துயரங்களை மூட்டை கட்டி வைப்பதில்லை. புதிய நன்பர்கள், புதிய விஷயங்கள், புதிய அட்வென்ட்சர்கள்... எதற்கும் தயங்குவதில்லை.. நாம் செக்க்ஷன் டிரேன்ஸ்ஃப்ர் போட்டால் கூட, புதிய விஷயங்களைக் கண்டு அஞ்சுகிறோம். புத்ய டெக்னாலஜியைக் கண்டு அஞ்சுகிறோம். கையாள முடியுமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்துவிடுகிறது. அவர்களுக்கு எல்லாமே ஒரு வாய்ப்பாகக் காணுகிறார்கள். கம்ப்யூட்டர்களையும்-பேக்கேஜ்களையும் பெரியவர்கள் கையாளத் தயங்குவதன் காரணம் இதுதான்.


க்ரியேடிவிட்டி:

அவர்களது படைப்பாற்றல் இயல்பானது, அவர்கள் அதை அனுபவித்துச் செய்து, மகிழ்கிறார்கள். அந்தப் பணியில் தங்களை மறந்து இயங்குகிறார்கள். நாம் வயது கூடக்கூட, கிரியேடிவிட்டியை மறந்து தேக்கமடைந்து விடுகிறோம். 65 வயதில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது, ஆர்வத்தைவிட பயமே மேலிடுவதால், எதுவும் நடைபெறுவதில்லை. குழந்தைகளிடம் ஆர்வம் மட்டுமே மேலிடுவதால், மென்டல் ஃப்ளாக்கேடுகள் இல்லை.

அஞ்சுவதில்லை:

நமது உறுதிக்கும் தைரியத்திற்கு ஏற்றாற்போலவே வாழ்க்கையும் விருந்து சுருங்குகிறது என்கிறார் ஒருவர். குழந்தைகள் கீழே விழுவதையோ, மோதிக்கொள்வதையோ, தவறிழைப்பதையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. வெற்றிபெரும்வரை
அவை விடாது. அப்படியே ஜெயிக்காவிட்டாலும் கவலையில்லை. ஆனால், நமக்கு நம் தோல்விகள்மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது; பின் எப்படி வெல்வது?

அவர்கள் சிரிக்கிறார்கள்.

சிரிப்பற்ற ஒவ்வொரு தினமும் வீணாக்கப்பட்ட தினங்களே என்கிறார் சார்லி சாப்ளின். குழந்தைகள் சிரிப்பதற்கு யோசிப்பதே இல்லை. அது பார்க்கோ, பார்டியோ, பள்ளியோ, அவர்கள் சிரிப்பதற்கு காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு
நாசூக்கு,கௌரவம்,இடம்,பொருள் எல்லம் தேவைப்படுகிறதே?

சுறுசுறுப்பு:

அப்பொழுதான் பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். “போய்த் தெருவில் விளையாடிவிட்டு வா” என்ற ஒரு வார்த்தை போதும். சிட்டாக பறந்துவிடுவார்கள் (நகர குழந்தைகள் இதில் கணக்கில் வராது) எனக்கு டயர்டாக இருக்கு என்ற வார்த்தை அவர்களிடமிருந்து வராது. நமக்கு ‘ஆபீஸுக்கு’ போய்விட்டு வந்தாலே ஓய்ந்துவிடுவோம். பலருக்கு ஆபீஸ்
நேரம்போக மீதி நேரத்தில் கனிசமான பகுதி படுக்கையில்தான். ரெக்ரியேஷன் என்பது வேறுவேலை செய்வதுதானே தவிர, படுத்துக் கிடப்பது அல்லவே! இனிமேல் தவறாது உடற்பயிற்சி செய்தாகனும் என வாரத்தில் ஏழு நாளும் தீர்மாணம் செய்தாலும் ஒன்றும் நடக்காது.

இயல்பான நட்பு:

குழந்தைகள் நட்புக்கு ‘ நன்பர்கள் ‘ வேண்டும் அவ்வளவே! அனுபவி ராஜா..அனுபவிதான். நமக்கு நன்பர்கள் என்றால், ஸ்டேடஸ் வேணும், ஈகோ அனுமதிக்கனும், ‘நான் உன்னைவிட ஏதாவது ஒருவிதத்தில், (அறிவில், அனுபவத்தில்,
செல்வத்தில், கௌரவத்தில்) ‘உயர்வானவன்’ என நிரூபித்தாக வேண்டும். நமக்கே ஆமாஞ்சாமி போடனும். எங்கே நட்பை அனுபவிப்பது?

ஈகோ அற்ற ஹீரோ:

குழந்தைகளின் பள்ளிக் கதைகளைக் கேட்டுப் பாருங்கள். எல்லாக் கதைகளிலும் அவர்கள்தான் ஹீரோவாக இருப்பார்கள். கதையே அவர்களைச் சுற்றி இருந்தாலும், அதில் ‘அகந்தை’ இருக்காது. என்னால் ‘இந்த வயதில் என்ன முடியும்’ என்ற புலம்பலில்தான் நம் கதையையே ஆரம்பிப்போம். அப்படியே ஏதேனும் சாகஸம் செய்துவிட்டால், கூடவே அடுத்தவரை இகழ்வதையும் கலந்தே செய்வோம்.


தழும்புகள் கௌரவமானவை.

அவர்கள் கீழே விழுந்து ஏற்படுத்திக் கொண்ட தழும்பைக்கூட ஒரு
கௌரவமாக (Honour) ஆகச் சொல்லுவார்கள். நாம் நமது தழும்புகளை (உடல் தழும்புகளை மட்டுமல்ல.. மனத் தழும்புகளையும் தான்) கூடுமானவரை மறைக்கவே முயலுகிறோம். அவை ரகசியத் தகவல்களாகிவிடும். என்ன சார் காலில் காயம், கீழே விழுந்துட்டீங்களா? (கேட்பவருக்கு, உனக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை என்ற இளக்காரம் மறைந்திருக்கும்) இல்லையே.., கதவு இடித்துவிட்டது (கௌரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது)


முயற்சி:

சிறுவர்கள் புதியனவற்றை முயல தயக்கம் காட்டுவதே இல்லை. புதிய கருவிகள் அவர்களுக்கு வசமாவத்ன் ரகசியமே இதுதான். நாம் நமது கம்ஃப்ர்ட் Zone ஐ விட்டு வெளிவர ஏகத் தயக்கம் காட்டுவோம். புதிய முயற்சிகள் என்பது கிட்டத்தட்ட இருக்காது.

அலுவலகங்களில் புதிய பேக்கேஜ்கள் அறிமுகமாகும்போது, அவற்றை குறைச்சொல்லாத பெரிகள் இருக்காது. இளசுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வமே இருக்கும். தனியாக டூர் சென்று பார்ப்பதில் கூட தயக்கம். புதிய முயற்சிகளே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்.


கவனிப்பு:

குழந்தைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பார்ப்பவற்றை தவறாது திரும்ப செய்து பார்ப்பார்கள். குழந்தைகள் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது. ‘அம்மா... அந்த காமேஷ் இருக்கானே, அவனோட பேண்ட் பாக்கட் கிழிஞ்சு போயிருந்துச்சு பாத்தியா?...’

நாமும் சின்னஞ்சிறு விஷயங்களையும் கவனித்து ரசிக்கக் கற்றுக் கொள்ளனும். அட.. குறைந்தபட்சம் பறவைகளையாவது கவனியுங்களேன். எனது நன்பர் ஒருவர் அரை நாள் முழுசும் ஒரு எறும்புக் கூட்டத்தையே கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால்
எத்தனைபேர் இப்படி இருக்கிறார்கள்?

இசை, புத்தகங்கள் இப்படி எதிலாவது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாமே?

மீண்டும் குழந்தைகளாக முடியாதுதான். அவர்களது மனோ நிலையை, கூடுமானவரை கடைப்பிடிக்கலாமே?

1 comment:

  1. Nice posting. Enjoyed of course as an elder only since it may not be possible to enjoy as a child...

    ReplyDelete