Saturday, June 11, 2016

அமெரிக்காவை நோக்கி.......

மோடிக்கு எத்தனை தடவை எழுந்து நின்று கைதட்டினார்கள், அவர் மானிட்டரைப் பார்த்துப் படித்தாரா இல்லையா என்ற விஷயங்களைத் தவிர்த்து, மோடியின் உரையைக் கவனிக்கும் பொழுது, சில விஷயங்கள் ஊர்ஜிதமாகிறது.

1. India is clearly and visibly disowned its independent foreign policies of Pre-Cold war period. No more ‘Non-aligned’ nations. ‘அணி சேரா’ என்ற கோஷங்கள் யாவும் பரணையில் ஏற்றப் பட்டுவிட்டன.

2. அணுசக்தி மற்றும் ஆயுத வியாபாரத்தின் Strategic பார்ட்னராக இந்தியா உருவெடுத்து விட்டது.

3. பாதுகாப்புத் துறையில், அமெரிக்க டிசைன் Strategy ல் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.

4. எரிபொருள் நிரப்பிக்கொள்ளுதல், பாதுகாப்பு தகவல்களை பரிபாறிக் கொள்ளுதல், ராணுவ சம்பந்தமான உபரி பாகங்கள், பாதுகாப்பு தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் பரஸ்பர உதவிகள். (LOGISTIC EXCHANGE MEMORANDUM OF AGREEMENT)

5. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில், இந்தியாவும்-அமெரிக்காவும் ப்ரையாரிட்டி பார்ட்னராகுகிறார்கள். (இந்த அம்சம் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கிறது. பல ஆப்பரிக்க நாடுகள். கல்ஃப் நாடுகள், மற்றும் சீனா இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சீனாவைக் கட்டுப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில், அமெரிக்கா இதை நம்மீது வலியுறுத்தியிருக்கலாம். விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்) அனால்யா, யாருக்கு மாற்றாக அல்லது யாருக்கு எதிராக நாம் அமெரிக்காவிற்கு ‘ப்ரையாரிட்டி பார்ட்னர் ‘ என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டும்.

6. இந்தியா முக்கியமான டிஃபன்ஸ் பார்ட்னர் என, இந்தோ-அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. இது மிகப்பெரிய கொள்கை மாற்றம். இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப் படவேண்டும். இது இந்தியாவிற்கு பாதகமா அல்லது சாதகமா, இந்த ஒப்பந்தத்தின் மூலம், எந்தெந்த வகையில், நாம் அமரிக்காவிற்கு கடமைப்பட்டவர்களாகிறோம் என்பது தெளிவாக்கப் படவேண்டும்.

7. பாதுகாப்பான AP1000 ரியாக்டர்களை, இந்தியா வாங்கவிருக்கிறது. பாதுகாப்பு மிக்கதாயினும், ஒரே இடத்தில் (ஆந்திரா) ஆறு அணு உலைகளை நிர்மாணிப்பது எந்த அளவிற்கு புத்திசாலித்தனமானது என்பது தெளிவு படுத்தப் படவேண்டிய விஷயம். இதன் விலை கட்டுப்படியாகக் கூடியதுதானா என்பதும் விவாதிக்கப் படவேண்டும்.

மொத்தத்தில், மன்மோகன் காலத்தில் ஆரம்பித்த ‘அமெரிக்காவின் பக்கம் நகர்ந்து செல்வது’ என்ற கொள்கை, இப்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது போலத் தெரிகிறது. ஆனால், நாம் அவ்விதம் செய்யவில்லையென்றால், அந்த இடத்தை நமது எதிரி நாடுகள் நிரப்பிக் கொள்ளும். அது நமது பாதுகாப்பிற்கு மேலும் ஆபத்தை உருவாக்கும்.

அமெரிக்காவுடன் சல்லாபித்துக்கொண்டு, சீனாவுடனும் நல்லுறவு என்பது கத்திமேல் நடக்கும் சமாச்சாரம். பிஜேபி அரசு, சீனாவை எவ்வளவு எச்சரிக்கையுடன் கையாள்கிறது என்பது இனிமேல்தான் தெரியும். ஆனால், இதுவரை ‘சீனா’ மோடியின் அமெரிக்க விஜயத்திற்கு எதிராக, பெரிய அளவில் ஏதும் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். (சீனா தொலைக்காட்சி, மோடியின் அமெரிக்க விஜயத்தை லைவ்-டெலிகாஸ்ட் செய்த்து).



சர்வதேச அரசியல் நிபுனர்களும், பாதுகாப்பு டிப்ளமேட்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

3 comments:

  1. "பாதுகாப்பு மிக்கதாயினும், ஒரே இடத்தில் (ஆந்திரா) ஆறு அணு உலைகளை நிர்மாணிப்பது எந்த அளவிற்கு புத்திசாலித்தனமானது என்பது தெளிவு படுத்தப் படவேண்டிய விஷயம்." // அணு உலையில் உபயோகித்த எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கும் பாதுகாப்பாகப் புதைப்பதற்கும் இந்தியாவில் தகுந்த இடமோ வசதிகளோ கிடையாது.

    ReplyDelete
  2. இந்தியா கூறு போட்டு கண்ணு முன்னே விக்கிராணுக... தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  3. இந்தியா அமெரிக்கப் பாதையில் வேகமாக முன்னேறலாம் என்ற மாயையில் மோடி சிக்கிவிட்டார்.! இது பாரத ஆன்மாவின் முழு வீழ்ச்சி.!

    ReplyDelete