வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு கட்டத்திலும், ‘..ஆல்’ ஒரு
மௌனமான திருப்பு முனை. இன்னும் கொஞ்சம்
படித்திருந்தால்,இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், வேறு
மௌனமான திருப்பு முனை. இன்னும் கொஞ்சம்
படித்திருந்தால்,இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், வேறு
மாதிரி முடிவெடுத்திருந்தால், இந்த புத்தி
அப்போதே
இருந்திருந்தால், அட.. அல்பமா டிரைவிங்கில்
சற்று அவசரப்படாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு
'ஆலும் ..' ஒரு மௌணவெடியல்லவா? பெர்முடேஷன்-
காம்பினேஷன் போல, முடிவில்லா சாத்தியங்களுடன்,
ஒவ்வொரு ‘..ஆலும்..’, வாழ்க்கை திசைமாறிப்
போகவைக்கும் வலு கொண்டது.

ப்ரோக்ராம்களில் வேண்டுமானால் if... else போட்டு எப்படி
விரும்புகிறோமோ அப்படி முடிவெழுதிக் கொள்ளலாம்.
நிஜத்தில் if க்குள் இருப்பதா else க்குள் செல்வதா
விரும்புகிறோமோ அப்படி முடிவெழுதிக் கொள்ளலாம்.
நிஜத்தில் if க்குள் இருப்பதா else க்குள் செல்வதா
என்பது ஒவ்வொரு
கட்டத்திலும் திணறும் குழப்பம். அடுத்த
else க்குள் என்ன இருக்கிறது என்பது மர்மவெடி. மகிழ்ச்சிக்
கொத்தாய்ப் பூப்போமா அல்லது வெடித்துச் சிதறுவோமா?
லூப்பின் முடிவு யார் கையில்? இறைவனிடத்தா? தெரிய
வில்லை. எனினும், தத்துவங்கள், அனுபவ மொழிகள்,
பட்டறிவு, கல்வியறிவு, சான்றோர்கள் வழிகாட்டுதல்
கொண்டு , எந்த சமயத்தில் எப்படித் தீர்மாணிப்பது என
ஓரளவே யூகித்துச் செல்லலாம்.

தத்துவங்கள் ரெடிமேட் சட்டையா, அப்படியே
அணிந்து பயணிக்க? அவை கானகத்தில், காரிருளில்
கையிலிருக்கும் ஒளிவிளக்கு போல. ஒளிகொண்டு வழியை
அணிந்து பயணிக்க? அவை கானகத்தில், காரிருளில்
கையிலிருக்கும் ஒளிவிளக்கு போல. ஒளிகொண்டு வழியை
நாம்தான் தேடிக்கொள்ள
வேண்டும். கிணற்றில் விழுவதும்
கிழக்கில் வெளியேறுவதும் நம் கையில்.
கிழக்கில் வெளியேறுவதும் நம் கையில்.
-- ஆல் .....
உன்னைச் சுற்றியோரது விரல்கள் யாவும்,
விளைந்தனவற்றிற்கு நீயே பொறுப்பென சாட்டும் பொழுது,
உலகு உனைச்
சந்தேகிக்கும் பொழுது,
உன்மேல் நீ நம்பிக்கை கொண்டு தலைஉயர்ந்து
நிற்பாயேயானால்...
நிற்பாயேயானால்...
காத்திருந்து காத்திருந்து உடலும் மனமும் சோராதிருந்தால்..
பொய்யுரைகள் யாவும் உன்னிடம் பொய்த்துப் போனால்,
வெறுப்புரைகள் யாவும் உன்னை வீழச்
செய்யாதிருக்குமானால்,
செய்யாதிருக்குமானால்,
உன் கனவுகளுக்கு நீயே பொறுப்பேற்றால்,
உச்சமும் நீச்சமும் எளிதாக உன்னைக் கடந்துபோனால்,
முட்டாள்களின் - சுய நலமிகளின் வலையில் தப்பித்தால்,
உன்மைகள் உன்னை வைதாலோ வாழ்த்தினாலோ
நீ உடைந்து போகாமலிருப்பாயேயானால்,
மீந்த சக்திகளைத் திரட்டி மீண்டுடெழுவாயானால்,
உச்சத்தில் தலை கனமாகாமலும், நீச்சத்தில் தலை
கவிழாமலும் இருக்க முடியுமானால், மாந்தரிடமும்
மந்திரியிடமும் நிலையிழக்காமல் பழக முடியுமானால்,
கவிழாமலும் இருக்க முடியுமானால், மாந்தரிடமும்
மந்திரியிடமும் நிலையிழக்காமல் பழக முடியுமானால்,
உற்றமும் துரோகமும் உனைக் காயப்படுத்த
அனுமதிக்காமலிருப்பாயேயானால்,
அனுமதிக்காமலிருப்பாயேயானால்,
கற்றவர்களை நாடி கலந்துரையாட முடியுமானால்,
எவரும் உன்னைத் தூசியென வீசியெறிய முடியா
எவரும் உன்னைத் தூசியென வீசியெறிய முடியா
நிலையில் இருப்பாயானால்
எதையும் எப்போதும் மன்னிக்கும் மனம்
பெற்றிருப்பாயானால்,
பெற்றிருப்பாயானால்,
நீயே மனிதன்..
உலகு உனக்கே!
---
எனக்கும் ஒரு ‘ஆல்’ பற்றிய ஒரு மயக்கம்
இருக்கிறது. அது
என் துணைவிபற்றியது. அவர் மறையாமல் இருந்திருந்தால்.
26/06/16 - ஞாயிறு அன்று மறைந்த, என் மனைவியின்
என் துணைவிபற்றியது. அவர் மறையாமல் இருந்திருந்தால்.
26/06/16 - ஞாயிறு அன்று மறைந்த, என் மனைவியின்
பிறந்த நாள்.
அவர் இருந்திருந்தால் அன்றுடன் அவருக்கு அறுபது வயது
நிறைவு. அவர் இம்மாதம் பணியிலிருந்து ஓய்வு
பெற்றிருப்பார்.
அவர் இருந்திருந்தால் அன்றுடன் அவருக்கு அறுபது வயது
நிறைவு. அவர் இம்மாதம் பணியிலிருந்து ஓய்வு
பெற்றிருப்பார்.
பணி ஓய்வுகுறித்தும், ‘பணிஓய்விற்குப் பின்...’ எனவும் என
அவர் வைத்திருந்த நிரல்கள் ஏராளம். ஆனால் இறைவன்
அவருக்கு நிரலில் இறுதியை சீக்கிரமே கொடுத்து விட்டான்.
அவர் வைத்திருந்த நிரல்கள் ஏராளம். ஆனால் இறைவன்
அவருக்கு நிரலில் இறுதியை சீக்கிரமே கொடுத்து விட்டான்.
அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்! “எனது
ஆரோக்கியத்தின் இலட்சனத்திற்கு, நான் வெகுசீக்கிரமே
போய்விடுவேன். உனை வெறுப்போர் உலகில் இல்லாத
படியால், நீ சுற்றங்களோடு இறுதிவரை பத்திரமாக
இறுதிவரை இருக்கலாம்.” என்று.
நாம் போடும் ‘ஆல்’ களுக்குப் பொருள் இருக்கிறதா என்ன?
இப்பொழுது எல்லாம் தலைகீழ்.

உன் பிறந்த நாளில் உனை வணங்குகிறேன். உடன்
வணங்கவும் ஆளின்றி!
வணங்கவும் ஆளின்றி!
நல்ல வேலை சரியான நேரத்தில் கண்ட"ஆல்" படித்துவிட்டேன்... அருமை
ReplyDeleteஉங்களோடு சேர்ந்து நாமும் வணங்குகிறோம் அய்யா.! இந்நிகழ்வு மட்டுமே நிஜம்.! இப்பொழுது அவர் இருந்திருந்தால் ஒருவேளை நாம் வேறு எதையோ எழுதிகொண்டிருப்போமோ என்னவோ.!
ReplyDelete