Sunday, March 27, 2016

சேமித்ததால் விழுந்த அடி...


உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்கா, சில  ஆண்டுகளுக்கு முன் பெரும்  நிதி நெருக்கடியைச் சந்தித்தபொழுது, இந்தியா அதன் பாதிப்பிலிருந்து பெருமளவு தப்பித்தது. அப்பொழுது பொருளாதார விற்பன்னர்கள் யாவரும் இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து  நாட்டைக் காப்பாற்றியது; மேற்கத்திய நாடுகளின் செலவழிக்கும் பழக்கம்தான், செலவழிக்கத் தூண்டும் பன்னாட்டு வங்கிகளின் கொள்கையால்தான் நெருக்கடிக்குள்ளாகியது என வியந்து போற்றினர்.
ஆனால், மோடி அரசு, இதற்கு நேர் மாறாக, அதாவது மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக, ‘சேமிக்கிறாயா..? இந்தா பிடி, மண்டையில் ஒரு அடி!’ என ஏப்ரல் ஒன்றாம்தேதி முதல், சேமிப்புகளுக்கு வட்டிவிகிதங்களை கடுமையாகக் குறைத்துள்ளது. யார் கொடுத்த நெருக்கடிக்கு, மத்திய அரசு அடிபணிந்தது எனத் தெரியவில்லை.

இந்திய மூத்த குடிமகன்கள், குறிப்பாக  மத்திய வர்க்கத்தினர், தங்களது சேமிப்பிலிருந்து வரும் வட்டியிலிருந்து காலம் தள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள். என்போன்ற மூத்தவர்கள், மருத்துவ செலவுகளுக்கும், எதிர்பாராத மற்ற செலவுகளுக்கும் மற்றவர் கையை  நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் (இக்காலத்தில் மரணம் கூட பத்து லட்சம் இல்லாமல் வராதே?) சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். புதிரான ஷேர் மார்கெட்டில் நான் இழந்ததுதான் மிக அதிகம். எனவே, முதலுக்கு மோசமில்லாத பாதுகாப்பான சேமிப்பு முக்கியமாகிறது. அதற்கும் வேட்டு வைத்துவிட்ட்து மோடி அரசு. இது வரை இல்லாத அளவிற்கு வட்டிவிகிதங்களைக் குறைத்துவிட்டது  மத்திய அரசு.
அரசின் இந்த மோசமான முடிவுக்கு, மக்களை “சேமிப்புக்கு  நீங்கள் தபால் அலுவலகத்தை நாடாதீர்கள், நாங்கள் ஒன்றும் தரமாட்டோம், எல்லோரும் பங்குச் சந்தைக்குச் செல்லுங்கள்..” என்று துரத்துவதுதான் காரணம் எனத் தோன்றுகிறது. ஏற்கனவே, ப்ராவிடெண்ட் ஃப்ண்ட் பணம், பங்குச் சந்தையோடு இணைந்துவிட்டது.

லட்சக்கணக்கான கோடிகைளைத் தாண்டும், வாராக்கடன்களை வசூலிக்க வக்கற்ற மத்திய அரசு, மேலும் மேலும் பெருமுதலாளிகளின் கால்களை வருடிக் கொடுக்கும் கொள்கைமுடிவுகளை எடுத்து வருகிறது. அரசு வழங்கும் வட்டிவிகிதங்கள், பங்குச் சந்தை நிலவரத்தோடு  ஒன்றிணைப்பது எவ்வித்ததிலும் மக்களுக்கான அரசாங்கம் செய்யும் காரியமில்லை.


மோடி அரசு, இதை நிச்சயம் திரும்பப் பெற்றாக வேண்டும். கார்பொரேட்களுக்கு சேவகம் செய்ய, மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.

2 comments:

  1. மிக நல்ல பதிவு திரு பலராமன் அவர்களே! முட்டாள்கள் ஆட்சி இது. நீங்கள் சொல்வது உண்மை. அமெரிக்க நிர்பந்தம் அவன் இவன் என எழவெடுத்த எல்லா பயல் ஆட்சியிலும் நடந்து வருகிறது.
    கெட்ட வார்த்தையால் திட்டுவது கூட தப்பில்லை. நாரப்பசங்க. இதுக்கு அவன்......... செய்யலாம் சார்.
    அரசு

    ReplyDelete
  2. நாட்டில் பல கோடி மக்கள் வழியில்லாமல் உள்ளார்கள். அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
    இந்த நடவடிக்கை எல்லாம் அதிகம் சேர்த்து வட்டி வாங்குபவர்களை பாதிக்கும்.
    சாதாரண மக்களை பாதிக்காது, காரணம் அவர்கள் எந்த விதத்திலும் முன்னேற கூடாது, கல்வி பெற கூடாது, இட ஒதுக்கீடு இருந்தாலும் தராமல் இழுத்தடிக்கும் கூட்டத்தையே அதிகம் பாதிக்கும்.
    ஏதேதோ காரணம் கூறி இந்நாட்டில் பிறந்திருந்தாலும் பல கோடி மக்களை எந்த வாய்ப்பும் இல்லாமல் நலிய வைத்து உள்ளார்கள் ஒரு கூட்டத்தினர். அரசு மக்களை காத்தருள வேண்டும் இந்த கூட்டத்தின் பிடியில் இருந்து. கடவுள் பார்த்து கொள்வார் என்பதெல்லாம் எல்லாம் காதில் பூ சுற்றி ஏமாற்றி திரியவே. அப்படி சொல்பவனுக்கு தெரியும் தான் புளுகுவது. ஆக அரசின் கடமை இது வருமானம் வரும் இடத்தில் வாங்கி ஏழ்மைமையை விரட்டுவது.

    ReplyDelete