எனதருமை சக உறவுகளே! நட்புக்களே!
நீங்கள் விரும்ப மாட்டீர்கள் எனத் தெரியும். வந்துவிட்டானா வேலையற்ற
மற்றொரு ஆள் என நீங்கள் நினைப்பது புரிகிறது; இருந்தும் சில வரிகளைச் சொல்ல வேண்டியது என்
கடமை என நினைக்கிறேன்.
உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிக..மிக..மிக மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். அது தானய்யா உங்களது தாய் மொழி.
அவ்வளவு தொன்மையான மொழியாயினும் ஆகச் சிறந்த இலக்கியங்களை
உள்ளடக்கியது நமது தமிழ்.
இவ்வளவு தொன்மையான, வளமான மொழியை உலகின் வேறு எந்த நாடு பெற்றிருந்தாலும், அதன் மாண்பு குறித்து பெருமிதம் கொண்டிருப்பார்கள். போற்றிச்
சீராட்டி இன்னமும் செழுமைப் படுத்தி வளர்த்திருப்பார்கள்.
நமக்கு தமிழின் அருமையும் அறியாது;
பெருமையும் புரியாது;
தொன்மையும் தெரியாது.
கோர்வையாக பேசவும் வராது.
நமக்கு மட்டும் ஏன் இந்த வினோத மனப்போக்கு?
நாம் ஆங்கிலேயர்களுக்கு கால் கழுவிவிட்டே, அவனது மொழி, அவனது உடை,
அவனது இலக்கியம், அவனது கலாச்சாரம் ஆகியவற்றை சிக்கெனப் பற்றிக் கொண்டுவிட்டோம்.
‘அடிமைப் புத்தியை’ பெருமிதமாகக் கொள்ளும் நமது விந்தைக் குணத்தால்
பேரழிவிற்கு உள்ளாகப் போவது நமது தாய்மொழி தமிழ்.
உலகில், எந்தெந்த நாடுகள் எல்லாம், ஒருகாலத்தில் இங்கிலாந்து – ஃப்ரானஸ்
- ஸ்பெயின் போன்ற ஏகாதிபத்தியத்திற்கு காலணியாக
இருந்தனவோ, அந்த நாடுகள் எல்லாம், மதியிழந்து போய், தாய் மொழியினை புறந்தள்ளி,
ஆங்கில மோகத்தால் பித்து பிடித்து அலைகின்றனர். அவர்கள் கையில் வைத்திருக்கும் தாய் மொழியின்
அருமை கூடத் தெரியாத பதர்களாக உள்ளனர்.
உங்களது கனவு நாடான, அமெரிக்காவிலும் கூட, சீன மொழி பேசாத சீனன்
இல்லை; ஃப்ரென்ச் பேசாத ஃப்ரான்ஸ்காரன் இல்லை. ஜெர்மானி பேசாத ஜெர்மனியன்
இல்லை. ஆனால் தாய் மொழி அறியாத
இந்தியர்கள் உண்டு; அது தெலுங்கோ-கன்னடமோ-தமிழோ.. அவரவர்கள் வீட்டில் தாய்
மொழியினைப் பேசுவதில்லை..
அமெரிக்கா போக வேண்டாம்...! வெளி
மானிலங்களில் வசிக்கும் தமிழர்கள் கூட இந்தி பேசுவர்-ஆங்கிலம் பேசுவர்; தவறியும்
தமிழ் பேசார். தற்போது, இந்த அடிமைப்
புத்தி சென்னையையும் பற்றிக் கொண்டுவிட்டது. சென்னையில் தமிழில் பேசும் குழந்தைகள் இல்லை.
தங்கள் குழந்தைகளுக்கு ‘டமில்’ பேச வராது’ என்பதில் பெற்றோர்களுக்குப்
பெருமை வேறு...
தாய் மொழியினை இகழ்வது போல ஈனச் செயல் ஏதுமில்லை. தாய்-தந்தையை யார்
எனத் தெரியாது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு பாவ காரியம் தமிழில் பேச
மறுப்பது.
நமது கலாச்சாரம், மொழியின் வழியேதான், அடுத்த தலைமுறைக்கு பாய
வேண்டும். நீங்களே வீட்டில் தமிழில் பேச மறுத்தால், தமிழ்க் கலாச்சாரத்தினை, உங்கள்
குழந்தைகளுக்கு எவ்விதம் சொல்லிக் கொடுப்பீர்கள்?
‘தமிழ் தெரியாது’ என்பது கௌரவம் அல்ல; பெருமை அல்ல; அந்தஸ்து அல்ல;
உயர்குடியினராய் மாறிவிட்டோம் என்று பொருள் இல்லை. மாறாக அவ்விதம் சொல்வதும் -
நினைப்பதும் கேவலம்; அவமானம்; அசிங்கம்.
உலகின் மிகத் தொன்மையான மொழியினைக் கொல்லும் பாவச் செயலைச்
செய்யாதீர்கள். குறைந்த பட்சமாக வீட்டிலாவது
தமிழ் பேசுங்கள். குழந்தைகளை தமிழில் பேச ஊக்கப் படுத்துங்கள். புதிய சொற்களைச் சொல்லிக் கொடுங்கள். தமிழில் ஆங்கிலத்தைப் போலவே கனமான சொற்கள் இருக்கின்றன என்பதைத் தெரியப் படுத்துங்கள்.
உங்கள் சிறார்களுக்கு எளிய தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். உங்களுடன் பணி புரிபவர், கடைக்காரர் இப்படி எவராக இருப்பினும், அவர் தமிழராக இருந்தால் தமிழில் பேசுங்கள்.
உங்கள் சிறார்களுக்கு எளிய தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். உங்களுடன் பணி புரிபவர், கடைக்காரர் இப்படி எவராக இருப்பினும், அவர் தமிழராக இருந்தால் தமிழில் பேசுங்கள்.
தமிழ் வாழ்க.. மற்றதெல்லாம் ஒழிக.. எனக் கூவும் கிறுக்கன் (Fanatic) அல்ல
நான். எதையும் கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் தமிழில் பேசுங்கள்.
கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பைத் தொடருங்கள்..
இது ஒரு அருமையான குறும்படம்..
தமிழ் இனி.....
For those who did not know to read Tamil:
Colette Grinevald : “Speaking your mother tongue is not a disability!”
As a specialist in endangered languages, what is your view on International Mother Language Day?
Mother Language Day should literally celebrate the languages of all the mothers of the world and send them the message that they have the right to speak their own language to their children, because they have important things to say in that language to their children. It should be the day of all the languages in the world including the “little languages”. Out of about 6000 languages no more than 200 have the status of national languages and a few hundred more have established literacy.
How do you record endangered languages?
I use a method called “research action”. It is an exchange – the people give me their language and I give something back. We work as equals and I recognize the speakers are the real experts! I have worked this way at writing the grammar of two languages: Jakaltek Popti' of Guatemala (Maya) and Rama of Nicaragua (Chibcha). And I have been supervising many doctoral students working in other countries that way. Understand that as a linguist I don’t “invent” the grammar, I transcribe the way people talk, and analyze the rules of grammar they follow when they talk. I write then scientific studies for the linguists but also materials for the community, to show them some of what I have learned of their language, to show them their grammar.
What are your views on bilingual education?
Bilingual education is complex and needs clear goals and adapted messages. There are in fact many models that do not all equally support mother languages. The most common bilingual education model used to be a transitional model, using the mother language at first to help the child adapt to the school and not drop out too soon, but then switching to the dominant language and discontinuing the mother tongue altogether. A newer model aiming at more respect for the mother languages is that of the intercultural bilingual education that allows children to be educated in their language longer, while teaching also in the national language, and promotes the mother languages in their cultural context. One hears also talks of bilingual education often coming under the category of “inclusive” education, i.e. an education meant to help the children integrate society, a model thought originally for the integration of children with disabilities, but speaking your mother tongue is not a disability! We must go beyond this narrow idea of inclusion when talking of mother tongues.
How then can we make inclusion more “inclusive”?
The real challenge of a truly bilingual education is to educate speakers of the dominant language group as well as speakers of indigenous languages about each others’ cultures, that is what the term ‘intercultural’ means really. What we have learned from 50 years of practice is that the problem is not really about languages at all, it’s all about discrimination and respect for other cultures. But even schoolteachers who speak indigenous languages have to feel convinced that their languages are good. This is what I see as part of my job as linguist, to show to them, and others, that their language is OK, even if it does not follow the structure of the national language. And to think of inviting native speakers in to the classrooms, even if they have not been schooled themselves, because they know the language and the culture and can help teach them to the children.
What is the place of literacy in mother language teaching?
There has been a real focus on literacy as the answer to education, and pressure to turn mother languages into literate languages, following standards of national languages. But we are now re-thinking the centrality of writing, as the real life of languages is naturally in speaking and listening. One shouldn’t see illiterate people as ignorant people, and indigenous languages as primitive languages in need of writing to be real languages. People confuse written form and “true form” as if the mother tongues could only be languages once reduced to writing. .Writing and literacy are very valuable, there is not doubt, but we must remember that the natural state of languages is the spoken word, and value also the spoken word in education. In any case we see more and more how new technologies can give back the oral forms of languages their place.
How does technology facilitate minority languages?
The explosion of new technologies is fast changing the situation of minority languages. For one thing, they allow oral transmission of those mother languages across continents. In the Guatemalan village where I worked I saw the development of technologies that enabled immigrants maintain better contacts between USA and the family at home. Before the 70s there was little contact - only occasional letters written by “public writers” to be read aloud to the family back home. Then I remember the miracle of cassette recorders and the family messages in the local language that travelled back and forth on cassettes. I even paid sometime people in cassettes, to support this communication! Today there is internet in town and people can telephone or Skype each other, although the local language is less used now. Beyond this private use of technologies that can help maintain languages, more and more communities around the world are using them for teaching programmes. From Canada to Colombia, from Norway to New Zealand, mother languages are documented and taught in more attractive and efficient ways.
In fact UNESCO is catching on. At the last meeting on endangered languages in March 2011 in Paris, we discussed how the Internet has great potential in influencing the sustainability of languages and considered ways to encourage and support the use of new technologies in general on behalf of mother tongues.
You have worked with minority languages in Latin America. What is the legal status of those languages today?
There have been astonishing changes in the status of minority languages on that continent in the last twenty years. Today practically all Latin American countries have declared themselves multiethnic and multilingual and have granted linguistic rights including bilingual education to all their languages. The difficulty now is how to implement them. Most countries have turned into vast laboratories of work on these indigenous languages today. See for instance the case of Colombia, and the work of linguist Jon Landaburu for the recognition and promotion of the languages of that country, for which he just won the Linguapax Award 2012. Today, in countries like Mexico, or Guatemala or Ecuador, more and more linguists and educators are native speakers, and are busy giving new life and prestige to their languages through new forms of education.