Saturday, September 24, 2011

கூடங்குளம் - MY VIEWS


 1.      நிலைம:
  
தமிழகத்தின் பீக் அவர் மின்சாரத்தேவை கிட்டத்தட்ட 10000-11000 மெகாவாட். ஊற்பத்தி வெறும் 8000 மெகாவாட். வீடுகளுக்கு இரண்டு மணி  நேரமும், தொழிற்சாலைகளுக்கு 40% மின் வெட்டும் அமுலில் உள்ளன.  தொழிற்சாலைகளை முடக்கி வைத்துவிட்டு நாம் எப்படி தொழில் வளர்ச்சி காணப் போகிறோம் என்பதை  அரசியல் வாதிகள் தான் விளக்க வேண்டும்.
சென்ற ஆட்சியில் திரு கருணானிதி அவர்களும், இந்த ஆட்சியாளர்களும் இந்த வருட இறுதியில், கூடங்குளம் அணு உற்பத்தி நிலையம், 1000 மெகா வாட் உற்பத்தியினைத் துவங்கும் என்றும், பின் மின் பற்றாக்குறை நிலை ஓரளவு சீராகும் என கூறி வந்தனர்.

        2.     போராட்டம்:

இந்த நிலையில், இந்த கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது, ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,  அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.  21.09.2011 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.


       3.      நிஜம்தானா?

அனால் இந்த தீர்மானத்தின், “அரசியல் கலக்காத  நேர்மை குறித்து சந்தேகம் வருகிறது. ஏனெனில், கூடங்குளம் அணுமின்நிலையத் திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த வர்கள் திரு கருணாநிதி அவர்களும், செல்வி ஜெயல்லிதா அவர்களும்.  ஒருவேளை உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப் படாவிட்டால், இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.

அல்லது மக்களை ஒருமுறை போராட்ட்த்தை கைவிடச் செய்துவிட்டு, பின்னால் பல்வேறு அரசியல், அதிகார யுக்திகளைக் கையாண்டு, மக்களை சமாளித்துவிடலாம் என்ற எண்ணமோ தெரியவில்லை. போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இனி எங்களது போராட்டம் மத்திய அரசை எதிர்த்துத்தான், மாநில அரசை எதிர்த்து அல்ல என அறிக்கை வெளியிட்டதலிருந்தே, இனி நட்த்துவதாக்க் கூறப்படும் போராட்ட்த்தின் திசைவழி எப்படி இருக்கும் எனத்தெரிகிறது.  ஒரு வேளை அப்பகுதி மக்கள் அனைவரையும் வேறு ஒரு பகுதிக்கு மாற்றி ‘குடியமர்த்தி விடுவார்களோ என்னவோ?

  
4.        4.            யாரிடம் கேடபது?

சரி... இந்த அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையிலேயே, அணு மின் நிலையங்கள் மூடப்பட வேண்டியது தானா? என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டும். இந்த கேள்விக்கான விடையினை அரசியல்வாதிகளிடம் பெறக் கூடாது.  அவர்கள் ‘எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதில் நிபுனத்துவம் பெற்றவர்கள். ‘எப்படிபேச வேண்டும் என்பது அவர்கள் ‘நாற்காலியில் இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து அமையும்.


தற்போது, இந்தியா - குறிப்பாக தமிழ் நாடு, கடுமையான மின்பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.  கடந்த பல ஆண்டுகளாக புது மின் திட்டன்கள் ஏதும் தீட்டப்படாத்து முக்கியமான காரணம்.  எங்கே மின் நிலையம் கட்ட திட்டமிட்டாலும், உடனே மக்களைத் தூண்டிவிட்டு “கட்டாதே... கட்டாதே.. மின் நிலையத்தினை கட்டாதே...  என கோஷமிட வைத்து, திட்டத்தினையே நிறுத்தி விடுவதில் வல்லவர்கள் ‘சிலஅரசியல் கட்சியினர்.  உண்மையில் நாட்டின் மேலும், மக்களின் மீதும் அக்கறை இருக்குமானால், விவசாயிகளுக்கு, அவர்களுக்கு திருப்தியான, போதுமான நஷ்ட்ட ஈடு வாங்கிக் கொடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்து, மின் நிலையம் அமைய வழிகாண்பதை விட்டு,  இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை அரசியல் ‘பிழைப்பு நடத்த கிடைத்த வாய்ப்பாகவே நமது அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

          5.      வேறு வழி ஏதும் இருக்கிறதா?

புணல் மின் நிலையங்கள், முழுவதுமாக அமைக்கப் பட்டுவிட்டன.  இனி இத்தகைய திட்டங்களுக்கு நதிகளும் இல்லை! தண்ணீரும் இல்லை.  ஜீவ நதிகளும் மிக்க குறைவு.  இதைவிட்டால், அடுத்து இருப்பது அணல் மின் நிலையங்கள்.  இந்திய நிலக்கரி தரம் குறைந்தவை.  ஹீட் எனர்ஜி குறைந்தவை. இறக்குமதியான கரிகள் தரமானதாய் இருக்கின்றன.  அது சரி... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நிலக்கரி கிடைத்துக் கொண்டே இருக்கும்? அதிக பட்சமாக ஐம்பது வருடம் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.  அதற்குப் பின்?

காற்றாலைகள் மின் உற்பத்தி, ஒரு சீராக இருக்காது!  மேலும் எல்லா காலத்திலும் கிடைத்துக் கொண்டே இருக்காது. சூரிய சக்தி, மிகுந்த செலவு பிடிக்க்க் கூடியது.  ஏராளமான இடம் தேவைப் படுவது.

நமக்கு இருக்கும் ஒரே தேர்வு, ‘அணு மின் சக்தி தான்.  குறைவான செலவில், குறைவான இடத்தில், கணிசமாக உற்பத்தி செய்யக் கூடியது.  

       6.      மூடத்தான் வேண்டுமா?

விஷயம் என்ன வென்றால், அணுமின் நிலையங்கள் முற்றிலும் பாதுக்கப்பானவைஎன எவரும் உறுதி கூறிட முடியாது.  அதுவும் ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து, அணுகதிர்வீச்சினால், அப்பகுதி மக்கள் சில பாதிப்புகளை அடைந்த பின்னரும், பிரான்சில் சிறிய அளவில் ஒரு அணு மின் நிலையத்தில், ஏற்பட்ட விபத்துக்குப் பின்னரும் மக்கள் கவலைபட ஆரம்பித்து விட்டனர்.


ஆனால், மின்சாரமின்றி உலக இயக்கமே இல்லை என்ற நிலையில், அணுமின்சக்திக்கு மாற்றாக உலக விஞ்ஞானிகள் ஏதேனும் கண்டுபிடிக்கும் வரை, அணு உலைகளை மூடுவது உசிதமாகத் தெரியவில்லை.  உண்மை என்னவெனில், அணல் மின் நிலையங்கள் வெளியிடும் புகையும், சாம்பலும் மனித குலத்திற்கு தீராத கேடுகளை செய்து கொண்டுள்ளது.

புவிக்கோளத்தின் துருவங்களில் உள்ள ஐஸ் பாளங்கள் காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன!  இதற்கு இம்மாதிரியான தொழிற் சாலைகள் காரணமில்லையா?  புவி வெப்பமடைவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்தியர்களாகிய நமக்கு விழிப்புணர்வு குறைவுதானே!

இருக்கட்டும்! நிலக்கரி,கச்சா எண்ணெய் கொண்டு மின்சாரம் தயாரித்தால், அதன் நச்சுக்கள் புற்று நோயினை உண்டாக்காதா என்ன?  அணல் மின்சாரம் மெல்ல சாகடிக்க, ‘அணு உடனடியாக!. வித்தியாசம் அவ்வளவே!

ஏற்கனவே, தமிழகத்தில் 2008 முதல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்ற்கு 40 - 55 சதம்  மின் தடை. பெருமாலான உற்பத்தித் தொழில்கள் 2 ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன! கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல தொழிற்சாலைகளை மூடி விட்டால், அதன் பின் விளைவுகள் பயங்கரமானது என்பது, நிஜமான அரசியல், பொருளாதாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.  


7 என்ன தான் முடிவு?

உண்மையில் விஞ்ஞானிகள், மற்றும் அதிகாரிகளின் கூற்றின்படி பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டம் மனித சக்திக்கு உட்பட்டு, பத்திரமானதாகவே கட்டப் பட்டுள்ளது என அறிய வருகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் விஞ்ஞானிகள மின்சாரத்திற்கும், எரிபொருளுக்கும் (பெட்ரோல் / டீசல்) மாற்று ஏற்பாடு கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுவரை நமது அணு உலைகளை பத்திரமாக இயக்கத்தான் வேண்டும் – நாட்டின், நாட்டு மக்களின், தொழில் துறையின் நலன் கருதி!


8.  வேறு ஆபத்துகளே இல்லையா?

மக்களை தூண்டிவிட்டு, அணு உலைகளை பற்றி இவ்வளவு கவலைப்படும், அரசியல் வாதிகள்,  இந்த பூமிக் கோளை, ஆயிரம் முறை திரும்ப திரும்ப அழிக்கும் அளவுக்கு உலக நாடுகள் சேர்த்து வைத்துள்ள ‘அணு ஆயுதங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? (இந்தியா உட்பட)

இத்தகைய ஆயுதங்கள் ஏதேனும் ஒரு ‘தீவீர வாதி யிடம் கிடைத்து விட்டால் என்னவெல்ல்லாம் நடக்கும் என விவாதிப்பார்கள?  

நாளும் பொழுதும் இந்த தீவீர வாத்த்தால் உயிரழ்ந்து கொண்டி ருக்கும் நூற்றுக் கணக்கான ‘அப்பாவி பொது மக்களைப் பற்றி ஏதேனும் கவலை உண்டா?


(நேற்று ஒரு டி.வி சேனலில் பார்த்தேன்.  ஒரு கிராமத்துப் பெண் கோபாவேசமாக மைக்கின் முன் பேசுகிறார்.  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடந்த ஒரு வெடி விபத்தில், பல பேர் கை-கால் இழந்து, பரிதாப மாக கிடக்கிறார்களாம்! அதேபோல கூடங்குளத்தி லும் நடந்துவிடுமாம்!  இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை மக்களிடம் எப்படி கட்டவிழ்த்து விட முடிகிறது? உண்மையில் அணு உலைகளைவிட ‘அணுக் கழிவுகள் தான் அபாயமானவை)


எனவே அரசியல் பிழைப்பு உத்திகளை கொஞ்சம்  தள்ளி வைத்து,  மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும் வரை அணு உலைகளை அனுமதித்து, தக்க சமயத்தில் அனைத்து அணு உலைகளையும் மூடுவது தான் சரி. 
  
உணர்ச்சிப் பிழம்பாக மாறாமல், சம்ப்ந்தப் பட்டோர் யோசிப்பார்களா?


No comments:

Post a Comment