நேற்று தமிழக அரசு DTH சேவைக்கான வரியினை 30% உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு DTH மார்க்கெட்டினை, குறிப்பாக சன் டைரக்ட், மற்றும் சன். டி.வி யினை அழிக்கும் நோக்கத்தோடு அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கும் நோக்கத் தோடு செய்யப்பட்டுள்ளதா என சந்தேகமாக உள்ளது.
சன் டி.வி, தனது வருமானத்தில் 60% ஐ, சன் டைரக்ட் அமைப்பு மூலம் பெறுகிறது. (CNBC-TV18’s Ekta reports) நிதியாண்டு 2011-ல், சன்.டிவி யின் சந்தா வருமானம் 47% சதவிகிதம் உயர்ந்து, அதாவது 502 கோடி ரூபாய்களை தொட்டுள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், DTH தான். அதாவது DTH மூலம் கிடைக்கும் நடப்பு வருமானம் 288 கோடி உயர்ந்துள்ளது. கிட்ட்த்தட்ட 40% DTH வருமானம், தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. அதாவது 120 கோடி வருமானம், தமிழ் நாட்டிலேயே!
எனவே இந்த 30% வரி உயர்வு, அனைத்து DTH ஆபரேட்டர் களையும், முக்கியமான சன் டைரக்டையும் (அதன் மூலமாக சன் டி.வி யையும்) நிச்சயம் பாதிக்கும்.
தமிழ் நாட்டு பயனீட்டாளர்கள், DTH –னை விட்டுவிட்டு, பழையபடி, கேபிள் டி.வி க்கு மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த வரி உயர்வினால் பாதிக்கப்படும் இன்னோரு நிறுவனம் டிஷ்.டி.வி. இது தமிழகத்தில் 4% மார்க்கட் பங்கினைக் கொண்டுள்ளது. தமிழக அரசு கொணர்ந்துள்ள ‘அரசு கேபிள் அமைப்பு’ மக்களுக்கு சகாய விலையில் தொலைக்காட்சி சானல்களை வழங்குவதற்காகவா அல்லது DTH சேவை தருபவர்களை, குறிப்பாக “சன் குழுமத்தை” நசுக்குவதற்காகவா என்பது அனைவரும் யூகிக்கக் கூடியது தானே?
பார்ப்போம்! DTH சேவை தருபவர்கள் தனது லாபத்தினை குறைத்துக் கொண்டு, பழையபடியே கட்டணம் வசூலிக்கப் போகிறார்களா அல்லது இரண்டு மாதத்திற்கு முன் தான் "சன் டைரக்ட்" தனது மாதச் சந்தாவினை ௨௦ ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில், போடப்பட்டிருக்கும் வரிக் கேற்றாற்போல சந்தா கட்டணத்தை மீண்டும் உயர்த்தி, வாடிக்கையாளர்களை இழக்கப் போகிறார்கள் எனபதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
ஆயினும், தமிழக அரசு, தனது அரசியல் விளையாட்டில், தரம் குறைந்த கேபிள் ஒளி பரப்பினை விரும்பாமலும், நீக்கமற அனைத்து சேனல்களில் அடியில் கேபிள் டி.வி காரர்கள் வருமானத்திற்காக "ஸ்குரோல்" செய்யும் விளம்பர வாசகங் களை சகிக்காமலும் "DTH " க்கு மாறிய பொதுமக்களை கவணத்திற் கொண்ட்தாகத் தெரியவில்லை!.
No comments:
Post a Comment