Saturday, January 4, 2014

தீபம் அணைந்தது!


டிசம்பர் 17, 2013. மாலை ஆறு மணி. எனது அன்பு மனைவி மூச்சு விடுவதற்கு திணறிக் கொண்டிருந்தார். உள்ளூர் மருத்துவ மணைக்கு ஆம்புலன்ஸ்க்கு சொல்லியனுப்பினோம். ஸ்ட்ரச்சரை நாங்கள் குடியிருக்கும்  மாடிக்கு எடுத்துச் செல்வதில் சிரமம். ஒருவழியாக எடுத்துச் சென்றபின் ஸ்ட்ரெச்சரில் படுப்பதற்கு பிடிவாதம் பிடித்தார். 35 வருடங்கள் வாழ்ந்த வீட்டை கடைசியாகப் பார்க்கப் போகிறோம் எனத் தெரிந்து கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. எனது நண்பர்கள் உதவியுடன் படுக்க வைத்து, மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றோம். உள்ளூரில் தங்களால் பார்க்க இயலாது எனக் கைவிரித்தனர். அருகில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மணைக்கு அழைத்துச் சென்றோம். அவர்களும் கைவிரித்தனர்.வேண்டுமானால் சென்னைக்கு "ஆக்ஸிஜன்" வைத்து ஆம்புலன்ஸில்  அனுப்புவதாக தெரிவித்தனர். வேறு வழியில்லை. சென்னை அப்போலோ மருத்துவ மணைக்கு இரவு 2 மணிக்கு
வந்தோம். இரவு முழுக்க அவரை சித்திரவதை போல சகட்டு மேணிக்கு டெஸ்டுகள் எடுத்தனர். மதியம் வந்த மருத்துவர் 12 மணி நேர கெடு கொடுத்தார். ஆணால் நாள் மாலை நான்கு மணிக்கு தனது இறுதி மூச்சை விட்டார். பாழாய்ப்போன புற்று நோய் அவரை மாய்த்து விட்டது. கடைசி சில மாதங்கள் அவர் பட்ட வேதனை, வலி, மனத்துயர்... சொல்லி மாளாது..  அப்பப்பா...உலகில் எவருக்கும் இந்த வியாதி வரக்கூடாது. கிட்டத்தட்ட ஒருவருடம் எட்டு மாதங்கள், தன்னால் ஆன மட்டும்  நோயுடன் போராடினார். இறுதியில் நோயே வென்றது.

எப்பேர்பட்ட பெண்மணி அவர்! 

அன்பு, கம்பீரம், அடக்கம், அறிவு.. நகைச்சுவை உணர்வு, சுய தம்பட்டம் ஏதுமின்றி அனைவருக்கும் கொடுக்கும் உத்தம குணம் - அனைத்தும் நிறைந்தவர்.

தொழிற்சங்க போராளி,

அனைவரிடமும் தன்மையான பேசுபவர்.

அவர் இருக்கும் இடமே கலகலப்பாகி விடும். 

ஒவ்வொருவரையும் தனித்தனியாக நினைவில் கொண்டு அன்பு செலுத்தும் மணம்.  

அவர் உதவாத சுற்றமோ, நட்போ இல்லை. 

அவரிடம் குறை காண்பதற்கு எதுவுமே இல்லை. உன்னதமான பெண்மணி. "அவரது பொற்குணங்கள் சொல்லி மாளாது. 

இவ்விலகில் என்னை பரிதவிக்க விட்டுவிட்டு அவச அவசரமாக சென்றுவிட்டார். 

சீக்கிரமாக வேலைக்கு வந்தார். சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டார். சீக்கிரமாக ஒரு பெண்ணைப் பெற்றார். விரைவாக திருமணம் செய்வித்தார். விரைவாக பேரன்களைப் பார்த்தார். எல்லாம் 50 வயதிற்குள்! அப்படி என்ன விஜி அவசரம்? விரைவாகவே விடைபெற்று விட்டாய்?

அவர் இடத்தை எவரேனும் நிரப்ப இயலுமா? அவதாரப் பெண்மணியல்லவா அவர்! 

அவர் நோய்வாய்ப்பட்ட காலத்திலிருந்து, நான் பெற்ற பாடங்கள் பல.  எதிர்பாரத இடங்களிலிருந்து உதவிகளைப் பெற்றோம். குறிப்பாக நண்பர்கள். குறிப்பிட்ட சில உறவினர்கள். அவர்களின் பாதார விந்தங்களுக்கு எனது வணக்கங்கள். 

எங்களிடமிருந்து மிகுந்த உதவிகளைப் பெற்றுக் கொண்ட பலர், கண்டும் காணாமல் சென்றனர். அவர்கள் வாழ்க!

இப்பிறவியில் தனது மனதறிந்து எந்த தவறுகளும், கெடுதல்களையும் எவருக்கும் செய்யாதவர். 
ஆணால் இப்பிறவியின் இறுதியில் அனுபவிக்காத துயர் இல்லை. 

கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், இனி அவருக்கு பிறவிகள் இருக்கக் கூடாது.

ஜனக்கூட்டத்தின் நடுவில் - தனியனாக - அனாதரவாக நிற்பதாக உணர்கிறேன்.

எனது மனைவியைத்தவிர வேறு ஏதுவும் தெரியாத மனிதனாக வாழ்ந்து விட்டேன். 

கேஸ் கணக்ஷன் நெம்பர் கூடத் தெரியவில்லை.

அவரது கையைப் பிடித்துக் கொண்டே இத்துனை வருடங்களை ஓட்டி விட்டேன்.

திடுமென அடுத்த அடி வைப்பதற்கு இடமில்லாமல்-அனைத்தும் இருள் மயமாக உள்ளது!

என் செய்வேன்?

நான் ஏன் அவருடனே செல்லாமல்-இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?

6 comments:

 1. மிக வருந்துகிறேன். இது ஆற்ற முடியாத துயர் தான்.

  மீண்டு வாருங்கள்....உங்கள் மனைவி விரும்புவதும் அதுவாக தான் இருக்கும்

  ReplyDelete
 2. பிறவிப் பிணி நீக்கி அவர் நீத்தார். நமக்கான வேளை வரும்வரை நாம் கிடந்து உழல்வோம்.

  அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 3. சார் ஆழ்ந்த இரங்கல்கள்.

  ஈடு செய்ய முடியாத இழப்பு தான். உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மனைவி மேலும் சிரமம் அனுபவிக்காமல் இருக்க கடவுள் அழைத்துக் கொண்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. தற்போதுதான் பார்க்கிறேன். அவ்வப்போது உங்கள் மனைவி ஞாபகம் வருவதுண்டு - புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால். உங்கள் மனத்துயரம் புரிகிறது. என் பிரார்த்தனைகள். சீக்கிரமே இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 5. I am really sorry to hear this news. Even though I spent only a few months along with her in office during my early training period, still I remember the help she extended to me on understanding the basics. Pray God to Rest her in Peace. Let God will give you enough strength to pull on days keeping her memory alive.
  Srinivasan, New Delhi

  ReplyDelete
 6. I am really sorry to hear this news. Even though I spent only a few months along with her in office during my early training period, still I remember the help she extended to me on understanding the basics. Pray God to Rest her in Peace. Let God will give you enough strength to pull on days keeping her memory alive.
  Srinivasan, New Delhi

  ReplyDelete