Saturday, June 6, 2015

கடவுள் நடிகர்கள்.

நெஸ்லே கம்பெனியின் “ நூடுல்ஸ் “  விளம்பரத்தில்  நடித்ததற்காக (Endorsing the  Product)  சில செலிப்ரைடிஸ்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள்.

நாம் எவற்றையெல்லாம் சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என்று வரையறுக்கும் தகுதி, இந்திய உணவுக் கழகத்திடம்தான் இருக்கிறது என நம்புகிறேன்.

மக்கள் ‘மாகி’ சாப்பிடுவதோ அல்லது வேறு எதையோ விழுங்கி வைப்பதோ, நடிக-நடிகைகள் போன்ற செலிபரைட்டிகள் சொல்லி விட்டார்கள் என்பதாலா அல்லது இம்மாதிரியான பொருட்களை கம்பெனிகள் விற்பதற்கு முன்னால் தேவையான  சோதனைகள் அனைத்தையும் அரசாங்கம் செய்துவிட்டிருக்கும் என நம்புவதாலா?

நூடுல்ஸ் பற்றிய ‘எச்சரிக்கை செய்திகள்’ நெடுங்காலமகவே உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் துயிலிலிருந்து எழாத அரசு, பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது.  சரி .... ஆனால், பரிசோதனைக் கூடங்களில் “சோதித்துப் பார்த்து”, மாகியினை உற்பத்தி செய்ய  அனுமதி வழங்கிய இந்திய அரசு அதிகாரிகளுக்கு எப்பொழுது நோட்டீஸ் அனுப்பப் போகிறார்கள்? அரசு இயந்திரங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா, இல்லையா?

பிரபலங்கள் என்டார்ஸ் செய்யும் பொருட்களுக்கு, அவர்கள் (என்டார்ஸ் செய்பவர்கள்) எந்த அளவிற்கு பொறுப்பேற்க முடியும் என்பது  சிக்கலா கேள்வியாக இருக்கிறது!

சர்வ வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் செய்யத்தவறிய சோதனைகளை ஒரு சில பிரபலங்கள் செய்துவிட முடியும் என நம்புகிறோமா?

‘மாகி’ தெரிந்த விஷயம்.  

ஆனால், நாம் எவ்வளவோ மருந்துகளை அனுதினமும் விழுங்கி வைக்கிறோம். அவையெல்லாம் நெறிமுறைகளுக்குட்பட்ட மருந்துகள் தானா அல்லது தீய விளைவுகளை உள்ளடக்கியதா என்பதை, அரசு தானே தீர்மாணிக்க வேண்டும்? அற்பம், மாகியையே சரியாக சோதனையிடாதா அரசாங்கங்கள், மருந்துகளை தீர சோதித்துவிட்டன என எப்படி நாம் நம்புவது?

சினிமா நடிகர்களையும், கிரிக்கெட் விளையாடுபவர்களையும் கடவுளுக்கு நிகராக வைக்கும் இந்த  விந்தை தேசத்தில், பிரபலங்கள் இன்னமும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
நெஸ்லேவுக்கு நோட்டீஸ் அனுப்புவிட்டார்களா, நிறுவனத்தின் மேல் (மாகியை தடை செய்ததைத் தவிர) ஏதேனும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்களா?

மார்க்கெட்டில் உலவும் இதுமாதிரியான உடனடி தின்பண்டங்கள் அனைத்தையும் சோதிப்பதற்கு, அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?

அரசு பதில் சொல்ல வேண்டும்!

அது சரி.... நூடுல்ஸை, என்டார்ஸ் செய்த அமிதாபுக்கு,  நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள்... இங்கே சாம்பிராணி, கற்பூரம் போன்றவைகளுக்கு ‘வெங்கடாஜலபதியையே’, அவரது படத்தைப் போடுவதன் மூலம்  “என்டார்ஸ்” செய்ய வைக்கிறார்களே,  மாகியில் அதிகமான க்ளூடமைன் இருக்கிறது என கண்டுபிடித்தது போல, நாளைக்கு யாரேனும் ஒருவர், கற்பூர / சாம்பிராணி புகை  ‘புற்று நோயினை’ உருவாக்கும் என கண்டுபிடித்து சொல்லிவிட்டால், யாருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள்? சாமிக்கா?

கொசுவிரட்டிகளுக்கு, கொசுக்களே விளம்பரதாரர்கள். அவைகளுக்கும் நோட்டீஸா?

இந்திய அரசாங்கம் இனிமேலாவது, இம்மாதிரியான பொருட்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னால், தீர சோதிக்க வேன்டும்.



1 comment:

  1. கலப்படத்தை பற்றி, அரைத்த மசாலாக்களை பற்றி ஒருவர் எழுதியிருந்தார், யாரும் கவனிக்க வில்லை. இலவச கண் சிகிட்சையில் மருந்திட்டு, கண் தெரியாமல் இருப்பவர்களை கேட்பார் இல்லை. செத்த பிணத்தை, உயிருடன் இருப்பதாக சொல்லி பணம் பிடுங்கும் மருத்துவர்களை, மருத்துவ மனைகளை க்ண்டுகொல்வரில்லை.......

    யாருக்கோ கிடைக்க வேண்டியது கிடைக்கக் வில்லை, பன்னாட்டு நிறுவனம் பகடைக்காய் ஆக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete