Sunday, September 21, 2014

இரங்கல்..

அன்பு நண்பா... உனக்கு என்னவென்று சொல்ல... எதையென்று சொல்ல! 
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில், என் உடன் பணியாற்றி, ஏ.ஜி.எம் ஆக சென்ற வருடம் தான் ஓய்வுபெற்றார் திரு.லக்ஷ்மிகாந்தன். 1975-லிருந்து இன்றுவரை எனது நெருங்கிய நன்பர். ஒரு கணமும் பதற்றமடையாமல், இன்முகத்துடன் விளங்கும்  நன்பர். அவரது மகளும் எனது மகளும் 12 வருட பள்ளித் தோழிகள். இன்றும் கூட!

இவரது அன்பு மனைவி திருமதி குமுதவல்லி அவர்கள்.   நேற்று (20/09/2014)  இரவு காலமானார். கொள்ளை நோய் போல தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் புற்று இவரையும் பலி கொண்டது. எனது மனைவிக்கு இக்கொடிய நோய் இருப்பது கணடறியப்பட்டு சரியாக ஒன்பது மாதங்களுக்குப்பின் திருமதி குமுதவல்லிக்கு இந்த நோய் இருப்பது, அகஸ்மாத்தாக கண்டறியப்பட்டது. என தன்பு மனைவி மறைந்து சரியாக ஒன்பது மாதங்களுக்கும் பின் இவரும் காலமானார்.

ஒரே கப்பலில் மிதப்பதால், நன்பரின் வலியை நான் அறிவேன். அவரது துயரத்தையும், வேதனையையும், தனிமையையும் உணர முடிகிறது.

அவருக்கு என்னவெறு ஆறுதல் கூற? வார்த்தைகள் வற்றிப் போகும் தருணங்கள், வாழ்க்கையில் ஏராளம்.

நேற்று (20/09/14), மருத்துவமணையில்  அன்று மூச்சுக் காற்றிற்காக அவரது மனைவி பட்ட இம்சை, மனதை உலுக்கிற்று. சுற்றிலும் எத்தனையோ நபர்கள்! எவரால் அவரது வேதனையை வாங்கிக் கொள்ள முடிந்தது? மனிதரால் இயலும் காரியமா அது? இவை புராணங்களில் மட்டுமே சாத்தியமானவை போலும்!

தனியாளாக எனது மனைவியுடன் அவரது கடைசி மாதத்தில் மருந்துகளோடும்-வலிகளோடும்-அவஸ்த்தைகளோடும் போராடிய அனைத்தும் ரீவைன்ட் செய்து பார்ப்பது போலிருந்தது.

இறைவா! உனது திட்டம் என்னவென்று நாங்கள் அறியோம்! ஆயினும் நல்ல மனிதர்களை கவர்ந்து சொல்வதில் உனக்கேன் இவ்வளவு பரபரப்பு! ஆவேசம்!

வாரிசுகளுக்காக, ஓடி ஓடி உழைத்து, குடும்ப சுமைகளயும், கடைமைகளயும் நிறைவேறிவிட்டு, ‘அப்பாடா... இனி நமக்காகவும் சற்றே வாழலாம்... சில இடங்களுக்குச் செல்லலாம்...’ என   நாங்கள் சற்றே ஓய்வாக நாற்காலியில் அமரும் தருணத்திற்காகக் காத்திருந்து, வாழ்க்கைத் துணையை கவர்ந்து செல்கிறாயே? உனக்கு இரக்கம் என்பதே இல்லையா? தனிமைச் சிறையில் சிக்கவைப்பதிலும் – மனச்சிதைவிற்கு ஆளாக்குவதிலும் உனக்கு என்ன இன்பம்?

இறைவா.....! மீளாத்துதுயரத்தை தாங்கி நிற்கும் வலுவினை, தனிமையைத் தாங்கக் கூடிய மன உரத்தை - லட்சுமிகாந்தனுக்கும், இனி பிறப்பே இல்லா நிலையை திருமதி குமுதவல்லிக்கும் தந்தருமாறும் உன்னை  இறைஞ்சுகிறேன்.

இதையாவது செய்வாயா?

4 comments:

 1. //வாரிசுகளுக்காக, ஓடி ஓடி உழைத்து, குடும்ப சுமைகளயும், கடைமைகளயும் நிறைவேறிவிட்டு, ‘அப்பாடா... இனி நமக்காகவும் சற்றே வாழலாம்... சில இடங்களுக்குச் செல்லலாம்...’ என நாங்கள் சற்றே ஓய்வாக நாற்காலியில் அமரும் தருணத்திற்காகக் காத்திருந்து, வாழ்க்கைத் துணையை கவர்ந்து செல்கிறாயே? //
  மிக மிகக் கொடுமை.. ஆழ்ந்த வருத்தங்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஓய்வுபெறும் காலம்வரை காத்திருக்காமல் உழைக்க முடிந்த இளமைக்காலத்திலேயே எல்லாவித ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும்படி நம் இளையசமுதாயத்திற்கு இப்போதே நாம் அறிவுறுத்தி வைக்க வேண்டுமென்ற உங்கள் அறிவுரையை இன்றைய இளைய சமுதாயம் புரிந்துகொண்டு உழைக்கும் இளமைக்காலத்தில் கணவன் மனைவி இருவரும் சுற்றுலாவுக்கும் காலம் வகுக்க வேண்டும்! அருமை! அருமை! உலகத்திற்கு ஓர் உண்மையை நினைவுபடுத்திமைக்கு நன்றி!

   Delete
 2. நண்பர் லக்ஷ்மிகாந்தனை நான் நன்கறிவேன். விருத்தாசலத்தில் அவர் பணியாற்றியபோது அவரது இல்லத்துக்கும நான் பலமுறை சென்றிருக்கிறேன். பழகுதற்கினிய நண்பர். அவரது புதல்வன் பிரசன்னா குட்டிப் பையனாக இருந்தபோது தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்துள்ளேன். அவரது துணைவியார் புற்று நோயால் மரணமுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். ஆற்றமுடியா துயரத்தில் மூழ்கியிருக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - T P Jayaraman

  ReplyDelete
  Replies
  1. Shri T.P Jayaraman ji, Its really good to learn that u know many in BSNL/DOT. R u at Cuddalore or Chennai ?

   Delete