நீல் தீவு: (Neil Island)
போர்ட் ப் ளெயரிலிருந்து, 36
கி.மீ தூரத்தில் இருக்கும் அழகிய தீவு. ஃபெர்ரி யில் தான் செல்ல வேண்டும். நாங்கள் தேரிந்தெடுத்த தனியார் சொகுசுப் படகு, ‘ஹாவ்லெட் தீவு சென்று
பின் நீல்
தீவுக்கு சென்றதால் 56 கி.மி ஆகியது. இரண்டு மணி
நேர சவாரி. தனியார் சொகுசு படகுகள்
அனைத்தும் ஏ.ஸி வசதியுடன், உள்ளேயே கேன்டீன், டாய்லெட் வசதிகளுடன இருக்கின்றன.
பின் நீல்
ஒவ்வொரு நபருக்கும் சேஃப்டி பெல்ட்கள் வழங்குகிறார்கள். அதை எப்படி அனிந்து கொள்வது,
ஆபத்து காலங்களில் என்ன செய்ய வேண்டும் என டி.வி திரையில் காண்பிக் கிறார்கள். மேக்ரூஸ், கோஸ்டல் குரூஸ் என பல
சிறு கப்பல் கம்பெனிகள்
இருக்கின்றன.
அந்தமானின் பசுமைக் கிண்ணம்
இந்த நீல் தீவு. சிறிய கடைத்தெரு.ஏ .டி எம். வசதிகளெல்லாம் கிடையாது. டிபன், சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்லி
வைத்தால்தான் கிடைக்கும். நம் ஊர்போல நேரே கடைக்குப் போய் ஆர்டர் செய்ய இயலாது. நாங்கள் தங்கியிருந்த ‘ஹவா பில் நெஸ்ட்’ உட்பட.
கடற்கரையோரம் கோரல்கள்
மண்டிக் கிடக்கின்றன. வண்ண மயமான கடல் நீர். ஹாவ்லெட் தீவைக் காட்டிலும்
அமைதியும், அழகும் நிறைந்த தீவு.
‘ஸ்னார்கலிங்’ மற்றும்
‘ஸ்கூபா டைவிங்’ செய்வதற்கு ஏற்ற இடம். இந்த இரண்டையும் முயன்று
பார்த்தோம்.
‘ஸ்னார்கலிங்’ என்றால் கால்களில் ஃபின்களையும், முகத்திற்கு முகமூடி ஒன்றையும் அணிந்து கொண்டு முகத்தை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு நீந்தும் விளையாட்டு. சுவாசிப்பதற்கு முகமூடியுனுள் செருகினாற்போல ஒரு டியூப் வைத்து இருக்கும்; அதனை வாயில் கவ்விக் கொண்டு-வாயலேயே சுவாசித்துக் கொண்டு கடலின் அடிப்பரப்பை தலையை தூக்காமல் நீந்திக்கொண்டே ரசிக்கலாம்.
தெள்ளத்தெளிவான நீராக இருப்பதாலும், நல்ல
சூரிய ஒளி இருப்பதாலும், கடலின் ஆழம் குறைவாக இருப்பதாலும் கடல் வாழ் உயிரணங்களை
ரசிப்பதற்கு ஏற்ற விளையாட்டு.
‘ஸ்கூபா டைவிங்’
‘ஸ்கூபா டைவிங்’ என்பது, முதுகில் ஆக்ஸி ஜன் சிலிண்டரைக் கட்டிக் கொண்டு, உடலில் பிரத்தேகமான ஸ்விம்மிங்க ஸுட் மற்றும் முகமூடி அனிந்து கொண்டு, பயிற்சி பெற்ற டைவர் ஒருவரின் துணை கொண்டு (சுவாசம், முதுகில் கட்டிக் கொண்டிருக்கும் சிலிண்டரிலிருந்து வரும் டியூப் மூலம்), கடலின் அடி ஆழத்திற்கு சென்று பார்ப்பது.
இந்த சாகச
விளையாட்டிற்கான கட்டணம் 3,500 முதல்
4,500 வரை கேட்கிறார்கள். ஆனால் கடலின் அடியில் சென்று பல் வேறு சைஸ்களில்,
டிசைன்களில், பல நிறங்களில் இருக்கும் உயிர் கோரல்களையும், விதவிதமான வண்ண
மீன்களையும், நண்டுகளையும் மற்ற உயிரிணங்களையும் காணும் பொழுது நான் கொடுக்கும்
கட்டணம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. பல நல்ல டைவர்கள் இருக்கின்றனர். பப்படத்தேவையில்லை.
நீர் விளையாட்டைத் தவிர,
லஷ்மண்பபூர் பீச், பரத்பூர் பீச், சீத்தாபூர் மற்றும் Natural Bridge formation என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.
ஹாவ்லாக் தீவு:
நீல் தீவுகளலிருந்து 16
கி.மி. அதே சொகுசு படகுச் சவாரி. விஜய நகர் பீச், யானை பீச் என பல
இருந்தாலும், இங்கு ராதா நகர் பீச் பிரசித்தம். அழகோ அழகு. இங்கும் ஸ்னார்கலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் இருக்கின்றன. இங்கு தனியார் லாட்ஜ்களும், உணவகங்களும் நிறைய இருக்கின்றன.
இருந்தாலும், இங்கு ராதா நகர் பீச் பிரசித்தம். அழகோ அழகு. இங்கும் ஸ்னார்கலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் இருக்கின்றன. இங்கு தனியார் லாட்ஜ்களும், உணவகங்களும் நிறைய இருக்கின்றன.
ரோஸ் தீவு: (Ross island) (ராஸ் தீவு என்றும் சொல்கிறார்கள்)
முன்பு ஆங்கிலேயர்களுக்கு 1858
முதல் 1941 வரை காபிடலாக இருந்த இடம் இது. சிறிய தீவு. அவர்கள் பயன்படுத்திய கிளப்கள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், அலுவலகங்கள், தேவாலயம் போன்ற பழைய கட்டிடங்கள்
சிதலமடைந்து கிடக்கின்றன. கட்டிடங்களின் மேல் பிரமாண்டமாய் மரங்கள் வளர்ந்து
கிடக்கின்றன. இன்றைய நிலையில் இந்த மரங்கள் தான் மிச்ச கட்டிடங்களை தாங்கி
நிற்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் பொழுது கட்டப்பட்ட (ஜப்பான் காரர்களால்) பதுங்குக் குழிகள் கூட பல இடங்களில் இருக்கின்றன. அவற்றை
தற்பொழுதும் பராமரித்து சுற்றுலாத் தலங்களாக வைத்திருக்கிறார்கள்.
மான்களும்-மயில்களும் நிறைய இருக்கின்றன.
மௌன்ட் ஹாரியட்:
போர்ட் பிளேயரிலிருந்து
தரைவழி சென்றால் 55 கி.மி, ஃபெர்ரி மூலம் சென்றால் 15 கி.மி தூரம். பெரும்பாலும்
படகையே பயன்படுத்துகின்றனர். டூ வீலர், ஃபோர் வீலர் என அனைத்தையும் படகினுள் ஏற்றிச் செல்கின்றனர்.
தெற்கு அந்தமானிலேயே உயராமன
சிகரம் இங்குதான் இருக்கிறது. உச்சிக்கு
செல்லும் வழியில் காணும் காட்சிகள் யாவும் மிக ரம்மியனவை. உச்சிக்கு செல்ல ஜீப்
வசதி இருக்கிறது.
(டிரெக்கிங்)
கொசுறு:
(1) தீவுகளுக்கிடையே, போக்கு வரத்திற்கென, பல தனியார்
சொகுசு படகுகளும், சில அரசாங்க படகுகளும் இயங்குகின்றன. தனியார் படகுகள் ரூ.800
வரை டிக்கட் வசூலிக்கின்றனர். அரசு படகு செம சீப். உதாரணத்திற்கு மௌன்ட் ஹாரியட்
செல்லும் (16 கி.மி) அரசுப் படகிற்கு கட்டணம் வெறும் ஆறு ரூபாய் தான். ரூ.800 கொடுத்து, தனியார் படகில் செல்லும் பொழுது வாயை மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார்ந்திருக்கும்
பயணிகள், ஆறு ரூபாய் அரசு படகு என்றதும், பார்த்த இடத்திலெல்லாம், இரண்டு
தளங்களிலும், உட்காரும் சீட் உட்பட, பான்பராக் எச்சிலைத்
துப்பிக் கொண்டு,
குப்பைகளை எறிந்து கொண்டு, அழுக்குக் காடாக்கி வைத்திருக்கிறார்கள். படகினுள் டூவீலர், ப்ஹோர் வீலர் என அனைத்தையும் உடன் எடுத்துச் செல்லலாம்
(2) ஸ்னார்கலிங் செய்யும்
பொழுது எங்களது வழிகாட்டி டைவர், ஒரு அப்ஜெக்ஷனையும் எனக்குச் சொல்லவில்லை. திகட்ட திகட்ட
அனுபவித்தோம்.
(3)
ஆனால் 'ஸ்கூபா டைவிங்கில்' என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். ‘அடேய் கிழவா.. உனக்கு B.P, முதுகு வலி, கழுத்து வலி என
எல்லா உபத்ரவங்களையும் வைத்திருக்கிறாய். உன்னை கடலுக்கடியில் கொண்டுபோய், அங்கே
நீ செத்து வைத்தால் யார் பொறுப்பு? பேசாமல் போட்டிலேயே கிட என்றனர். ஆனால்
வழிகாட்டி டைவரை,
விக்ரமாதித்தன் போல விடாமல் அரித்துப் பிடுங்கி, கெஞ்சிக்
கூத்தாடி ஒருவழியார் ‘டைவ்’ அடித்துப் பார்த்து விட்டேன்.
((இவர் தான் எங்களது டைவர்-வழிகாட்டி )
3) ஸ்னார்கலிங்க் , ஸ்கூபா டைவிங் பயமாய் இருக்கிறதென்றால் 'சீ வாக்கிங் ' (கடலுக்கடியில் நடப்பது) என்று ஒரு விளயாட்டு இருக்கிறது. படகிலிருந்து ஏணி வழியே கடலினுள் தண்ணீர் புகா தலைக்கவசத்துடன் இறங்கி (காற்று டியூப் மேலேயிருந்து) கடலினுள் நடைபயிலு வது . சற்று நேரம் மீன்களுடன் பழகி, அவற்றிற்கு உணவளித்துவிட்டு வரலாம். டிக்கட் ரூ. 2500 ஆகிறது.
-அடுத்த கடைசிப் பகுதியில் சந்திப்போம்
அழகிய அனுபவம்
ReplyDeleteVisited & enjoined
ReplyDeleteThanks Nizaar....
DeleteVisited & Enjoyed
ReplyDelete