Wednesday, May 30, 2012

பிளந்து கட்டுகிறார் திரு.ஆமீர்கான் அவர்கள்!  


தொலைக்காட்சியில், திரு ஆமீர்கான் (ஹிந்தி நடிகர்), இந்திய மருத்துவத் துறை சமீப காலங்களில், சேவைத்துறை என்பதிலிருந்து மாறி,  ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாகி விட்டது குறித்து  கடுமையாகாச் சாடுகிறார்.  


தொலைக்காட்சி மட்டுமின்றி, 28/05/2012 தேதியிட்ட ‘தி ஹிண்டு நாளிதழில், திரு ஆமீர்கான் அவர்கள் ‘பிராண்டெட் மருந்துகள் என்ற பெயரில், நாம் மருந்துக் கம்பெனிகளால், களவாடப்படு வதை விவரமாகத் தொகுத்துள்ளார்.

உதாரணமாக ரூ.1.20 க்கு கிடைக்க்க் கூடிய  ஜலதோஷ மாத்திரைகளை, பிரான்ட் பெயரில் ரூ.35/-க்கும், ரூ.1000-க்கு கிடைக்கக் கூடிய ஹார்ட் அட்டாக்கிற்கான மருந்துகள் ரூ.5000/- விற்கப்டுவதையும், ரூபாய் 25/- விற்கக் கூடிய மலேரியா மருந்தினை ரூ.400/-க்கு விற்கும் அவலத்தையும் தீவீரமாக அலசியுள்ளார்.

சரியாகத்தான் சொன்னீர்கள் திரு.ஆமீர்கான்! இவை யாவும் விளம்பர யுக்திகளாகவோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்களை மனதில் கொண்டோ சொல்லப் பட்டவை அல்ல என உண்மையாகவே நம்புகிறோம்.


அநியாயமாக வசூலிக்கப் படும் மருந்துக் கட்டணங்கள் குறித்தும், ‘கிளினிகலாக டயக்னஸ் செய்யக்கூடிய நோய்களைக் கூட, ‘எவிடன்ஸ் பேஸ்டு மெடிசின் என்று சொல்லி, பல்லாயிரம் ரூபாய்களை ‘டெஸ்ட் என்ற பெயரில் கறந்து (கவர்ந்து) கொள்ளும் உத்திகளையும், சம்பாதிப் பதற்கு வசதியாக, ஒவ்வொரு டாக்டரும், தனக்கென தனியாக ‘லேபரட்டரிகள்’, ‘எக்ஸ்ரே யூனிட்கள், ‘ஸ்கேன் மெஷின்கள், ‘மருந்துக் கடைகள் வைத்துக் கொண்டிருப்பதையும்  பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?


உண்மையிலேயே சுருக்கமாக சொல்வதானால், சர்வ சாதாரணமாக 300%, 400% இலாபம் வைத்து, மருந்துகளை, பன்னாட்டு மருந்துக் கம்பணிகள் விற்கின்றன.

இவர்களின் ஆதார காரணம், நோயாளிகள் எந்த விலை கொடுத்தேனும், இந்த மருந்துக்ளை வாங்கிச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தான்.


இது கார்பொரேட் ‘ஆஸ்பத்திரிகளின் காலம். மக்கள் உடல் நலனுக்காக இந்த மருத்துவமணைகளில் மந்தைகள் போல, அடைபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், ஆஸ்பத்திரிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பவர்கள், என யாவரும் ‘களவாணிக் கூட்டணி வைத்து மக்களை கொள்ளையடிக்கின்றனர் என்பது தான். (கொள்ளை என்பதைவிட கடுமையான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை). இந்த விஷயம் ஒன்றும் ரகசியமானதல்ல!

நோயாளிகளுக்கு, இவர்களை விட்டால் வேறு ஏதும் ‘ஆப்ஷன் இருப்பதாகத் தெரியவில்லை!

ஒரு தத்துவ மேதை சொன்னார். “20% இலாபம் கிடைப்பதாக  இருந்தால், எங்கு வேண்டுமானாலும், பெரு முதலாளிகள் மூலதனம் செய்வார்கள்! 50% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் திமிர் கொண்டு, மமதையுடன் செயல்படும். 300% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் (முதலாளிகள்) எந்தவிதமான கொலை பாதகச் செயல்களையும், எந்தவிதமான குற்ற உணர்வின்றி செயலாக்க துணியும்” !

கொள்ளை லாபம் கொழிக்கும் மருந்துத் தொழில், இப்படித்தான் மானுடம் அற்றுப்போய், இலாப வெறி கொண்டு அலைகிறது!

நீங்கள் படித்திருப்பீர்கள்! 1970 முதல், கல்லீரல், கிட்னி ஆகிய இடங்களில் வரும் ஒரு புற்று நோய்க்கு Sorafenis Tosylate என்னும் மருந்தினை 'பாயர்' நிறுவனம், Nexavar  என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது! எந்த விலைக்கு தெரியுமா? ரூபாய்.2,80,000/- க்கு! இதே மருந்தினை இந்திய நிறுவனம் NATCO PHARMA  ரூ.8000/- உற்பத்தி செய்ய இப்போது தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது! அப்படியென்றால், இந்த மருந்துக் கம்பனி இதுவரை, எத்தனை கோடிகள் சுருட்டியிருப்பார்கள்!

இது ஒரு சாம்பிள்தான். அப்படி யென்றால், இந்த களவாணிக் கூட்டணி, இன்னும் எந்த-எந்த விதத்தில் எல்லாம், நம்மை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது!

இவர்களை “மருத்துவ பயங்கரவாதிகள் என்று அழைத்தால் என்ன தவறு?

இதற்கு தீர்வுதான் என்ன? பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே தரத்திலான மருத்துவ சிகிச்சை பெறவே முடியாதா? தீவீரமான வியாதிகள் உடையவர்கள், இவர்களின் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாது, சாவதைத் தவிர வழி இல்லையா?

திரு ஆமீர்கான் அவர்கள், பிராண்ட் பெயரில் மருந்துகளை எழுதாதீர்கள், ஜெனரிக் பயரில் மருந்துகளை எழுதுங்கள என்கிறார். இது மருந்துகளின் விலையை பெருமளவில் சரியவைத்துவிடும் என்கிறார்.  அனைத்து தர மக்களும், கட்டுபடியாகும் விலையில் மருந்துகளைப் பெறமுடியும் என்கிறார்.

ஆனால், திரு. ஆமீர்கான் அவர்களே! மருத்துவர்களிடமும், ஆஸ்பத்திரிகளிடமும் மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைப்பதாலோ அல்லது கெஞ்சிக் கேட்பதாலோ ஒரு பொழுதும் பணிய மாட்டார்கள்.

கணக்கில் அடங்காத அளவில் கூட்டுக் கொள்ளை, காட்டு தர்பார் நடத்தும் இந்த பன்னாட்டு மருந்துக் கம்பனிகளும், கார்பொரேட் ஆஸ்பத்திரிகளும், இவர்களுக்கு “இசைவாக நடந்து கொள்ளப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும் டாக்டர்களும் – கோரிக்கைகளுக்கு இசைவார்கள் என நம்புவது பேதமை.

இந்த கொள்ளைக் கூட்டத்தை அடித்து நொறுக்கி (பிஸிக்கலாக அல்ல, அமைப்புகளை மாற்றி/சீர்திருத்தி!), அனைத்து தரப்பு மக்களும், தரமான மருத்துவமும், சுகாதாரமும், சிகிச்சைகளும் பெறவைக்க, அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும்.

யதார்த்தமும், சோகமும் என்னவெனில், நமது அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும் இந்த “களவாணிக் கூட்டதின் ஒரு அங்கமாக மாறிப் போய் விட்டனர் என்பதுதான்!

அப்படியானால், நிலைமைகளை மாற்றவே முடியாதா?

முடியும். 'நமக்கு எந்த வகையான அரசு வேண்டும்' எனத் தீர்மாணிக்கும் சக்தியும், தெளிவும் நமது மக்களுக்கு வேண்டும்! அரசாங்கம் என்பது   நமக்காகத்தான் என்பது புரிய வேண்டும்! 'அத்தகைய அரசினை யாரால் அளிக்க முடியும்' என்ற தெளிவு வேண்டும். அரசியல் விழிப்புணர்வு வரவேண்டும்!

அதுவரை?

நமக்காக யாராவது, எங்கிருந்தாவது போராடுவார்கள் நம்பிக் கொண்டு நாம், சாராயக் கடைகளிலும், இலவசங்களிலும், சினிமாவிலும் தாராளமாக மூழ்கிக் கொண்டிருக்கலாம்.

ஜெய் ஹிந்த்!

7 comments:

 1. There may be mistakes in the field, like there are in any other field, but do not use harsh wordings against any one without understanding all the aspects involved. Bayer would have spent millions in research and development of the drug, where as a company like NATCO doesn't. How do you think the money spent on research will be recovered?.

  ReplyDelete
 2. திரு.அழகன் அவர்கட்கு!

  உண்மை, இந்த மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக, 'பாயர்' சில மில்லியன் டாலர்களைச் செலவழித்துள்ளார்கள். ஆனால் எவ்வளவு வருடங்களுக்கு,அவர்களுக்கு அந்த மருந்தைத் தயாரிக்க லைசென்ஸ்?

  ஏதாவது ஒரு 'கட்-ஆஃப்' தேதி வேண்டாமா? பாயர் அல்லது அது போன்ற கம்பெனிகளுக்கு 'ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்' -க்காக எவ்வளவு செலவழித்துள்ளார்களோ அதை WHO போன்ற அமைப்புகளோ அல்லது அரசாங்கங்களோ ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? அமெரிக்காவில் இது போன்ற ஆராய்ச்சிக்ளுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறதே!

  அதன்பின், நியாயமான இலாபம் வைத்து விற்பதை எவர் மறுக்கக் கூடும்? மக்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு மருந்து கிடைக்கும்தானே?

  மேலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்களே, பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு "லேபரேட்டரி எலிகள்" தான். அமெரிக்காவில் தடைசெய்யப் பட்ட மருந்துகள் வளர்ச்சியடையாத நாடுகளில் விற்றுக் கொண்டுள்ளனவா, இல்லையா?

  கட்டுரையின் நோக்கம், மனித இனம் முழுமையும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் மருந்துகளைப் பெறவேண்டும் என்பது தான்.

  தாங்கள் சொல்லும் 'பாயர்' சுப்ரீம் கோர்டின் தீர்ப்பினை எதிர்த்து, அப்பீல் செய்துள்ளதாகத் தெரிகிறது! பன்னாட்டு நிறுவனங்கள் சாமானியமானவர்கள் அல்ல! 'எவ்வகையிலாவது' அப்பீலில் வென்று விடுவார்கள்!

  மீண்டும் அந்த மருந்தின் விலை ஏறத்தான் போகிறது!

  ReplyDelete
 3. தமிழில் ஏன் அதிகமாக யாருமே கண்டுக்காம இருக்காங்களே , என்று வருத்தப்பட்டேன்.. அந்த குறை இப்போ தீர்ந்தது.

  பார்த்த இடங்களை பற்றியும் , கடந்த கால பெருமைகளை பற்றியும் , தெய்வ லீலைகளை பற்றியும், பல பதிவுகள் .
  ஆனால் மக்களை பற்றியும் அவர்கள் சோகங்களை தீர்க்கும் வழிகளை பற்றியோ, அதிகம் இல்லை.

  பாயரோ, மான்சாடோவோ, இந்த மாதிரி, 'யார் எப்படி போனால் எனக்கென்ன?' சமூகத்தில் ஏன் கொழிக்க மாட்டார்கள்?

  ReplyDelete
 4. 'ஆனால், திரு. ஆமீர்கான் அவர்களே! மருத்துவர்களிடமும், ஆஸ்பத்திரிகளிடமும் மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைப்பதாலோ அல்லது கெஞ்சிக் கேட்பதாலோ ஒரு பொழுதும் பணிய மாட்டார்கள்.'

  அந்த நடிகரும் இதை உணர்ந்து தான் செயல் படுவதாக தெரிகிறது. ஒரு கோடி காட்டினாலாவது, மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வர வாய்ப்பு உள்ளதல்லவா. அவரும் ஒரு கமர்சியல் வரையறையில் செயல்பட வேண்டி உள்ளதல்லவா?( வருமானமும் உள்ள , டி.ஆர்.பீ பற்றி கவலையும் உள்ள வறையறை).

  ஆனால் நம் மக்கள் இதை பற்றி பரவலாக பேசாமல் இருப்பது ????

  ReplyDelete
 5. Good one gentleman.Continue your good work.

  ReplyDelete
 6. Good one gentleman. Continue your good work..

  ReplyDelete